ஐரோப்பா

ஸ்பெயின் ரயில் விபத்து – போக்குவரத்து அமைச்சர் பதவி விலகினார்

ஸ்பெயினின் போக்குவரத்து அமைச்சர் ஆஸ்கார் புவென்டே  Óscar Puente தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

ஸ்பெயினில் அண்மையில் இடம்பெற்ற அதிவேக ரயில் விபத்திற்கு பொறுப்பேற்று அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

தலைநகர் மாட்ரிட்டிற்கு தெற்கே உள்ள உர்தா நகருக்கு அருகில், கடந்த புதன்கிழமை அன்று ஏற்கனவே நிறுத்திவைக்கப்பட்ட ரயில் மீது மற்றொரு அதிவேக ரயில் மோதி விபத்துக்குள்ளாகியது.  இதில் 69 பேர் உயரிழந்ததுடன், பலர் காயமடைந்துள்ளனர்.

அதேபோல் கடந்த ஜனவரி மாதத்தில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 49 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஓராண்டில் இடம்பெற்றுள்ள இவ்விரு கோர விபத்துகள் தொடர்பில் நாடாளுமன்றில் பேசிய புவென்டே, “ஸ்பெயின் போன்ற ஒரு நாட்டில், ஓராண்டுக்குள் இவ்வளவு தீவிரமான இரண்டு விபத்துகள் நடந்த பிறகு, ஒரு போக்குவரத்து அமைச்சரால் தொடர்ந்து பதவியில் நீடிக்க முடியாது” என்று கூறி தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்