வட அமெரிக்கா

பாலியல் குற்றச் செயலில் ஈடுபட்ட 92 வயது கனடியர்

கனடாவின் இற்றோபிகாக் பிரதேசத்தில் 92 வயதான முதியவர் ஒருவர் மீது பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.டொரன்டோ பொலிஸார் இந்த குற்றச்சாட்டை சுமத்தி உள்ளனர்.

கடந்த ஜூன் மாதம் 25ம் திகதி குறித்த நபர் பாலியல் குற்றச்செயலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.டுன்டாஸ் மற்றும் ப்ளோர் வீதிகளுக்கு அருகாமையில் வைத்து இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

தனது வீட்டுக்கு அழைத்த சிலரிடம் குறித்த முதியவர் அநாகரிகமாக நடந்து கொண்டார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.குறித்த முதியவர் நிர்வாணமாக தோன்றியதாகவும் பாலியல் ரீதியாக துன்புறுத்தல்களை மேற்கொண்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.குறித்த குற்றச்சாட்டின் அடிப்படையில் முதியவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் மீது இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன, எதிர்வரும் அக்டோபர் மாதம் குறித்த நபர் நீதிமன்றத்தில் முன்னிலையாக உள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறான குற்றச்செயல்கள் பற்றிய தகவல்கள் தெரிந்தால் அதனை தெரியப்படுத்துமாறு பொலிஸார் பொதுமக்களிடம் கோரியுள்ளனர்.

(Visited 13 times, 1 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்

You cannot copy content of this page

Skip to content