போர் முனையில் 50,000 வடகொரிய வீரர்கள் – ஜெலென்ஸ்கி எச்சரிக்கை
ரஷ்யாவிற்காகப் போரிட, 50,000 வரையிலான வட கொரிய வீரர்கள் ரஷ்யாவில் நிலைநிறுத்தப்படுவார்கள் என்று உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். வானொலி ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், “ரஷ்யாவின் எல்லைக்குள் 30,000 முதல் 50,000 வரையிலான வட கொரியர்களை நிலைநிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார். கடந்த ஜுலை மாதத்தில் 30000 வடகொரிய வீரர்கள் நிலைநிறுத்தப்படுவார்கள் என மதிப்பிட்டிருந்த நிலையில் அந்த எண்ணிக்கையைவிட தற்போது அதிகளவிலான வீரர்கள் களமிறக்கப்படுவார்கள் எனத் தெரிவித்துள்ளார். (இந்தத் தகவலை அவர் எவ்வாறு பெற்றார் […]





