43 ஆவது ‘கருப்பு ஜூலை’ நினைவேந்தல்: தமிழ் எம்.பிக்கள் அஞ்சலி
‘1983 கருப்பு ஜூலை’ கலவர சம்பவத்தின் 43ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, இன்று (23.07.2026) நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்றது.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள், தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் உள்ளிட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்துகொண்டு, 1983ஆண்டு கலவரத்தில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களுக்கு மனவேதனையுடன் அஞ்சலி செலுத்தினர்.
1983ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் திகதி ஆரம்பமான அந்த கொடூர இனக்கலவரம் இடம்பெற்று இன்றுடன் 43 ஆண்டுகள் கடந்துவிட்டன.
கடந்த நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கை அரசியல் மற்றும் சமூகக் கட்டமைப்பில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டிருந்த போதிலும், 1983 ஜூலையில் சிந்தப்பட்ட தமிழர்களின் இரத்தமும், எரிக்கப்பட்ட உடமைகள் மற்றும் சொத்துக்களின் சாட்சியங்களும் தமிழ் நெஞ்சங்களில் இன்றும் ஆறாத வடுவாகவே நீடிக்கின்றன.




