30 அடி கரப்பான் பூச்சி உருவ பொம்மை எரிப்பு
விஜயதசமியை முன்னிட்டு, வழக்கமான ராவணன், கும்பகர்ணன் மற்றும் மேகநாதன் உருவப் பொம்மைகளுடன் சேர்த்து டெல்லி பிதம்பராவில் 30 அடி உயர கரப்பான் பூச்சி உருவபொம்மையும் நேற்று எரிக்கப்பட்டது.
சிஜேபி-க்கு எதிரான கேலி நடவடிக்கையாகவே இது பார்க்கப்படுகிறது. கரப்பான்பூச்சி உருவபொம்மையை எரிப்பதுபோன்ற வீடியோ பரவிவருகிறது.
இதுகுறித்து சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே மற்றும் சட்டப்பிரிவு தலைவர் ரத்னாசிங் கூறும்போது,“இலவச விளம்பரத்துக்கு நன்றி.இந்த நாட்டில் வெறும் கூத்துகளை மட்டுமே நடத்திக் கொண்டிருங்கள்” என்று குறிப்பிட்டுள்ளனர்.
இக்கருத்துகள் சமூகவலைதளங்களில் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன. பல பயனர்கள் கரப்பான் பூச்சி உருவப் பொம்மை எரிப்பை தீமையின் மீதான நன்மையின் வெற்றியோடு ஒப்பிட்டுப் பேசிவருகின்றனர்.





