இந்தியா செய்தி முக்கிய செய்திகள்

இந்தியா, அமெரிக்காவுக்கிடையில் விரைவில் வர்த்தக ஒப்பந்தம்

அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளில் சில விடயங்களில் கருத்து வேறுபாடுகள் நிலவினாலும், அவை விரைவில் தீர்க்கப்படும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவில் டீசல் விலை அதிகரித்துள்ளதுடன், எரிபொருள் விநியோகம் தொடர்பான சவால்களும் எழுந்துள்ள நிலையில், இந்தியாவிலிருந்து பெருமளவில் டீசலைக் கொள்வனவு செய்வதற்கு அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

டீசல் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக ரஷ்யாவிலிருந்து எரிபொருளைக் கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தை அமெரிக்கா மேற்கொண்டுள்ளதாகவும், இதன் தொடர்ச்சியாக இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவனத்திடமிருந்து பெருமளவு டீசலைக் கொள்வனவு செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரிலையன்ஸ் சுத்திகரிப்பு ஆலைக்கு மார்கோ ரூபியோ விஜயம்

மூன்று நாள் உத்தியோகபூர்வ பயணமாக இந்தியா சென்றுள்ள அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் மார்கோ ரூபியோ, நேற்று மும்பையைச் சென்றடைந்தார். இதன்போது, இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கரைச் சந்தித்து இருதரப்பு உறவுகள் மற்றும் வர்த்தக ஒத்துழைப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாகக் கலந்துரையாடினார்.

மேலும், 2008ஆம் ஆண்டு மும்பையில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் வகையில், மும்பையிலுள்ள தாஜ் மஹால் பேலஸ் ஹோட்டலில் அமைந்துள்ள நினைவிடத்தில் அவர் அஞ்சலி செலுத்தினார்.

தனது பயணத்தின் ஒரு பகுதியாக, குஜராத் மாநிலத்தின் ஜாம்நகரில் அமைந்துள்ள ரிலையன்ஸ் நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கும் அவர் விஜயம் செய்யவுள்ளார். அத்துடன், ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களையும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

இந்தியாவின் எண்ணெய் சுத்திகரிப்புத் துறைக்கு அமெரிக்கா பாராட்டு

இந்தியா – அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த மார்கோ ரூபியோ, இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாகக் குறிப்பிட்டார்.

சில விடயங்களில் கருத்து வேறுபாடுகள் காணப்படுவதாகவும், அவற்றுக்குத் தீர்வு காணப்படும் என்றும் தெரிவித்த அவர், வர்த்தக ஒப்பந்தம் வெகு விரைவில் கையெழுத்தாகும் என நம்பிக்கை வெளியிட்டார்.

மேலும், இந்தியா பல்வேறு நாடுகளிலிருந்து கச்சா எண்ணெயைக் கொள்வனவு செய்வது சிறந்த வர்த்தக நடவடிக்கை எனக் குறிப்பிட்ட அவர், எண்ணெய் சுத்திகரிப்புத் துறையில் இந்தியா உலகளாவிய முக்கிய சக்தியாக உருவெடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

அத்துடன், வெனிசுலாவிலிருந்து பெறப்படும் கச்சா எண்ணெயை இந்திய நிறுவனங்களுக்கு வழங்குவதற்கும் அமெரிக்கா தயாராக இருப்பதாக மார்கோ ரூபியோ கூறினார்.

அமெரிக்காவின் எரிபொருள் தேவைகள், இந்தியாவின் எண்ணெய் சுத்திகரிப்புத் திறன் மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகள் ஆகியவை இந்தப் பயணத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளன.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி