அரசியல் இலங்கை செய்தி

செம்மணி விவகாரத்தை யாரும் பூசி மெழுக அனுமதிக்க முடியாது: ஈ.பி.டி.பி. வலியுறுத்து

செம்மணி மனித எச்சங்கள் தொடர்பாக ஊகங்களை வெளியிட்டு அதனை பூசி மெழுகும் சூழலை உருவாக்க கூடாது என்று வலியுறுத்தியுள்ள ஈ.பி.டி.பி. ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந்த் பன்னீர்செல்வம், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கா தற் துணிவோடு இந்த விவகாரத்தில் கரிசனை செலுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

செம்மணி மனித எச்சங்கள் தொடர்பாக ஊகங்களை வெளியிட்டு அதனை பூசி மெழுகும் சூழலை உருவாக்க கூடாது என்று வலியுறுத்தியுள்ள ஈ.பி.டி.பி. ஊடகச் செயலாளர் ஸ்ரீகாந்த் பன்னீர்செல்வம், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கா தற் துணிவோடு இந்த விவகாரத்தில் கரிசனை செலுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

யாழ் ஊடக மையத்தில் இன்று (21) நடைபெற்ற ஊடக சந்திப்பில் இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

“செம்மணியில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பாக ஆய்வுகளை மேற்கொண்ட பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றது.

குறித்த அறிக்கையில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் தொடர்பாக பல்வேறு விடயங்கள் தெரிவிக்கப்பட்டிருக்கின்றன.

அவற்றுள் குறித்த மனித எச்சங்கள் இயற்கை பேரிடர் காரணமாக அல்லது தொற்று நோய் காரணமாக ஏற்பட்டவையாக இருக்கலாம் என்ற கருத்தும் முன்வைக்கப்பட்டிருக்கின்றது.

இந்தக் கருத்தானது ஆழமாக சிந்திக்கப்பட வேண்டிய விடயமாக காணப்படுகின்றது. இவ்வாறான கருத்துக்கள் செம்மணியில் மீட்கப்பட்ட மனித எச்சங்கள் பற்றிய வீரியத்தினை குறைத்து விடுமோ என்ற அச்சத்தினை ஏற்படுத்துகின்றது.

எனவே செம்மணி பற்றிய விசாரணைகள் பூசி மெழுகுகின்ற சூழல் உருவாகுவதை எந்தவகையிலும் அனுமதிக்க முடியாது.

எனவே, தென்னிலங்கையிலே தற்துணிவோடு சில நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்ற ஜனாதிபதி அநுரகுமார திஸாநாக்க தலைமையிலான இந்த அரசாங்கம் செம்மணி விவகாரத்திலும் விசேட கவனத்தை செலுத்தி உண்மைகள வெளிவருவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

யாரையாவது காப்பாற்ற வேண்டும், யாரையாவது காட்டிக் கொடுத்த அவப்பெயர் ஏற்பட்டு விடக்கூடாது என்ற நிலைப்பாட்டில் செம்மணி விடயத்தில் நழுவை போக்கை கடைப்பிடிக்காமல் தற்துணிவான அறிவுறுத்தல்களை சம்மந்தப்பட்டவர்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கின்றோம். “- என்றார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை