ஐரோப்பா செய்தி

புகலிட கோரிக்கையாளர்களுக்கு பிரித்தானியா அரசாங்கம் வைத்த செக்: எழும் கடும் விமர்சனம்

  • June 30, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் தஞ்சம் கோரப்பட்டவர்கள், குடியமர்வுக்கு விண்ணப்பிக்கத் தகுதி பெறுவதற்கு முன்பு, தங்குமிடம் மற்றும் அடிப்படை வாழ்க்கைச் செலவுகளுக்காக அரசாங்கத்திற்குச் சுமார் 10,000 பவுண்ட்ஸ் செலுத்த வேண்டியிருக்கும் என்று அதிகாரிகள் திங்களன்று அறிவித்தனர். பிரித்தானிய அரசியலில் குடிவரவு மிக முக்கியமான பிரச்சினைகளில் ஒன்றாக உருவெடுத்துள்ள நிலையில், இந்த விடயம் வாக்காளர்களின் முதன்மையான கவலைகளில் ஒன்றாகத் தொடர்ந்து இடம்பிடித்துள்ளது. முன்மொழியப்பட்ட விதிகளின்படி, திருப்பிச் செலுத்தும் தொகையானது வருமானத்தின் அடிப்படையில் சோதிக்கப்படும் என்றும், ஒரு குறிப்பிட்ட வருமான வரம்பிற்கு மேற்பட்ட வயது […]

ஐரோப்பா

இங்கிலாந்தில் பயிற்சி மருத்துவர்களின் ஓராண்டுகால போராட்டம் நிறைவு

  • June 30, 2026
  • 0 Comments

இங்கிலாந்தில் உள்ள பயிற்சி மருத்துவர்களின் ஓராண்டுகால வேலைநிறுத்த போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. ஊதியம் மற்றும் பணி நிலைமைகள் குறித்த அரசாங்கத்தின் சலுகையை ஏற்பதாக வாக்களித்துள்ள நிலையில் மருத்துவர்களின் தொடர்  போராட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. இது தொடர்பில் எட்டப்பட்ட ஒப்பந்தத்தில், உள்ளூரில் பணிபுரியும் அனைத்து மருத்துவர்களுக்கும் 2016 ஆம் ஆண்டின் வழக்கமான பயிற்சி மருத்துவர் ஒப்பந்த விதிமுறைகளைச் செயல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் சராசரியாக 6.6 சதவிகித ஊதிய உயர்வு, ஏப்ரல் 2027-க்குள் முழுமையாகச் செயல்படுத்தப்படும் என […]

அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஜெர்மனி தனது முழுமையான ஆதரவை இந்த சந்திப்பின் மூலம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. ஐரோப்பா செய்தி

‘ஹார்முஸ் நீரிணை பாதுகாப்பு’ – அமெரிக்கா, ஜெர்மன் ஆராய்வு

  • June 30, 2026
  • 0 Comments

ஜெர்மனியின் வெளிவிவகார அமைச்சர் Johannes Wadephul மற்றும் அமெரிக்க ராஜாங்க செயலர் Marco Rubio ஆகியோருக்கு இடையே வாஷிங்டனில் முக்கிய சந்திப்பு இடம்பெற்றுள்ளது. அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஜெர்மனி தனது முழுமையான ஆதரவை இந்த சந்திப்பின் மூலம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. பிராந்தியத்தில் நிலவும் பதற்றமான சூழலில், இராஜதந்திர ரீதியாக சிக்கல்களைத் தீர்க்க இந்த ஒப்பந்தம் ஒரு நல்ல வாய்ப்பு என்று வேட்புல் கருதுகிறார். கடல்சார் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதி செய்யவும், ஈரானின் […]

அரச ஊழியர்களுக்கு 20 கிலோ அரிசி கடனுக்கு வழங்கப்படுமாம். கடனை திருப்பி செலுத்தாவிட்டால் சோறு பானையை ஆட்சியாளர்கள் தூக்கிச்செல்லக்கூடும். 12 லட்சம் ரூபாவுக்கு கார் வழங்கப்படும் எனக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், நாட்டை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளனர். அரசியல் இலங்கை செய்தி

புலனாய்வுப் பிரிவு குறித்து பதறும் நாமல் எம்.பி.

  • June 30, 2026
  • 0 Comments

“ நாட்டில் உளவுப் பிரிவு திட்டமிட்ட அடிப்படையில் பலவீனப்படுத்தப்பட்டுள்ளது. ” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச எம்.பி. தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, “தமது இயலாமையை மூடிமறைப்பதற்காக தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், அடக்குமுறையை கையில் எடுத்துள்ளது. நாம் விசாரணை நடத்த வேண்டாம் எனக் கூறவில்லை. இந்த ஆட்சியில் நடந்த மோசடிகள் பற்றியும் விசாரணை அவசியம் என்றே கூறுகின்றோம். அரச ஊழியர்களுக்கு 20 கிலோ அரிசி […]

ஐரோப்பா

அரசியல் அமைப்பு திருத்தம் முதல் அதிகாரப் பகிர்வு வரை – பர்ன்ஹாமின் முதல் உரை

  • June 30, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் சிதைந்துள்ள அரசியல் அமைப்பை சீரமைப்பதாக பிரதமர் பதவிக்கான போட்டியில் முன்னணி வகிக்கும் ஆண்டி பர்ன்ஹாம் தெரிவித்துள்ளார். தொழிலாளர் கட்சியினர் முன்னிலையில் தனது முதல் உரையை ஆற்றிய அவர், பிரித்தானியாவை புதிய திசையில் வழிநடத்தவுள்ளதாகவும் தெரிவித்தார். அத்துடன் 10 ஆண்டுகால திட்டத்தை முன்வைத்துள்ள பரன்ஹாம், நாட்டின் பொருளாதாரக் கொள்கையை மாற்றி எழுதுவதாகவும் உறுதியளித்துள்ளார். அத்துடன்  பிரித்தானியாவின் அரசியலை “ஒரு தேக்க நிலையிலிருந்து” வெளியே கொண்டு வருவதாகவும், பிராந்தியங்களும் சமூகங்களும் “ஒவ்வொரு அஞ்சல் குறியீட்டுப் பகுதியிலும் வளர்ச்சியை முன்னெடுத்துச் […]

உலகம்

பூனைகளிடம் இருந்து பரவும் ஒட்டுண்ணி – மனிதர்கள் பார்வை இழக்க வாய்ப்பு

  • June 30, 2026
  • 0 Comments

பூனைகளிடமிருந்து பரவும் ஒரு ஒட்டுண்ணியால் மனிதர்களின் விழித்திரை பாதிப்படையும் என புதிய ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் நிரந்தரமாக பார்வை பறிபோவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. உலகின் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பகுதியினர் இவ்வாறு பாதிப்படையலாம் என ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். டாக்சோபிளாஸ்மோசிஸ் (toxoplasmosis) என்ற இந்த நோயைத் தடுக்கவும் சிகிச்சையளிக்கவும் முடியும் என்றாலும், உலக சுகாதார அமைப்பு (WHO) இதை ஒரு புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோயாக (NTD) முறையாக அங்கீகரிக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்துகின்றனர். […]

ஜூலை 2 முதல் 8 ஆம்திகதிவரை திட்டமிடப்பட்டுள்ள இந்தச் சுற்றுப்பயணத்தில் அவர் டென்மார்க், ஸ்வீடன், பின்லாந்து மற்றும் நார்வே ஆகிய நாடுகளுக்குச் செல்லவிருக்கிறார். ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

சீன வெளிவிவகார அமைச்சர் ஐரோப்பாவுக்கு அவசர விஜயம்

  • June 30, 2026
  • 0 Comments

சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யி Wang Yi, ஐரோப்பிய நாடுகளுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்ள உள்ளார். ஜூலை 2 முதல் 8 ஆம்திகதிவரை திட்டமிடப்பட்டுள்ள இந்தச் சுற்றுப்பயணத்தில் அவர் டென்மார்க், ஸ்வீடன், பின்லாந்து மற்றும் நார்வே ஆகிய நாடுகளுக்கு வர இருக்கின்றார். இந்த பயணத்தின் போது, அந்தந்த நாடுகளின் வெளிவிவகாரஅமைச்சர்களைச் சந்தித்து அவர் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார். இந்த முக்கியத் தகவலைச் சீன வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அதிகாரப்பூர்வமாக இன்று (30) வெளியிட்டுள்ளார்.

சட்டவிரோதக் குடியேற்றத்தைக் குறைக்கவும், வரி செலுத்துவோரின் நிதிச் சுமையைச் சமன் செய்யவும் சுமார் £10,000 வரை வசூலிக்க இந்தத் திட்டம் மூலம் இலக்கு வைக்கப்பட்டுள்ளது. ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

அகதிகளிடமிருந்து வசூலிப்பு: பிரித்தானியாவில் புதிய குடியேற்ற நிபந்தனை

  • June 30, 2026
  • 0 Comments

பிரித்தானியாவிற்குள் நுழையும் அகதிகள் அங்கு நிரந்தரமாகக் குடியேறுவதற்கான தகுதியைப் பெறுவதற்கு முன்னதாக, தங்குமிடம் மற்றும் அடிப்படைச் செலவுகளுக்காக அரசு செலுத்தும் நிதியை மீள திருப்பிச் செலுத்தக் கோரும் புதிய சட்டத் திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. சட்டவிரோதக் குடியேற்றத்தைக் குறைக்கவும், வரி செலுத்துவோரின் நிதிச் சுமையைச் சமன் செய்யவும் சுமார் £10,000 வரை வசூலிக்க இந்தத் திட்டம் மூலம் இலக்கு வைக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் கட்சி தலைமையிலான இந்த முயற்சி, நாட்டில் நிலவும் அரசியல் அழுத்தம் மற்றும் குடியேற்றம் தொடர்பான […]

“அரச ஊழியர்களுக்குக் கடன் தவணை அடிப்படையில் 20 கிலோ அரிசி வழங்குவது தொடர்பில் அரசாங்கம் எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை” என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அரசியல் இலங்கை செய்தி

அரச ஊழியர்களுக்கு வாகனமா, அரிசியா? அரசு கூறுவது என்ன?

  • June 30, 2026
  • 0 Comments

“அரச ஊழியர்களுக்குக் கடன் தவணை அடிப்படையில் 20 கிலோ அரிசி வழங்குவது தொடர்பில் அரசாங்கம் எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை” என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். “அரச ஊழியர்களுக்குக் கார் வழங்குவோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், தற்போது கடனுக்கு அரிசி வழங்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளனர். அந்த அளவுக்கு அரச ஊழியர்கள் தள்ளப்பட்டுள்ளனர்” என எதிரணி உறுப்பினர்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில், இது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். […]

உலகம்

அமெரிக்காவுடன் எந்வொரு பேச்சுவார்த்தைக்கும் திட்டமிடவில்லை – ஈரான்

  • June 30, 2026
  • 0 Comments

அமெரிக்காவுடன் எந்தவொரு பேச்சுவார்த்தைக்கும் திட்டமிடவில்லை என ஈரான் உத்தியோகப்பூர்வமாக இன்று அறிவித்துள்ளது. தோஹாவில் அமெரிக்க மற்றும் ஈரானிய அதிகாரிகள் சந்திப்பார்கள் என்று ட்ரம்ப் முன்னதாக கூறியிருந்த நிலையில் ஈரான் அதனை திட்டவட்டமாக மறுத்து மேற்படி தெரிவித்துள்ளது. இந்த முரண்பட்ட அறிக்கைகள் அமெரிக்க-ஈரான் ராஜதந்திரத்தின் எதிர்காலம் குறித்து புதிய நிச்சயமற்ற தன்மையை ஏற்படுத்தியுள்ளன. ஈரானிய தொழில்நுட்பக் குழு ஒன்று இந்த வாரம் கத்தாருக்குப் பயணம் மேற்கொள்ளும் என்று ஈரானின் வெளியுறவு அமைச்சகம் கூறியது. ஆனால் அந்தப் பயணம் அமெரிக்க […]