அரசியல் இலங்கை செய்தி

அரச ஊழியர்களுக்கு வாகனமா, அரிசியா? அரசு கூறுவது என்ன?

“அரச ஊழியர்களுக்குக் கடன் தவணை அடிப்படையில் 20 கிலோ அரிசி வழங்குவது தொடர்பில் அரசாங்கம் எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை” என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

“அரச ஊழியர்களுக்குக் கடன் தவணை அடிப்படையில் 20 கிலோ அரிசி வழங்குவது தொடர்பில் அரசாங்கம் எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை” என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

“அரச ஊழியர்களுக்குக் கார் வழங்குவோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், தற்போது கடனுக்கு அரிசி வழங்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளனர்.

அந்த அளவுக்கு அரச ஊழியர்கள் தள்ளப்பட்டுள்ளனர்” என எதிரணி உறுப்பினர்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

இந்நிலையில், இது தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார்.

“அரச ஊழியர்கள் சிலரே இது பற்றிய யோசனையை முன்வைத்திருந்தனர் என அமைச்சர் வசந்த சமரசிங்க விளக்கமளித்திருந்தார். அரசாங்கம் என்ற வகையில் நாம் அவ்வாறு எந்தவொரு முடிவையும் எடுக்கவில்லை.

வங்குரோத்தடைந்துள்ள எதிரணியினருக்கு அரசியல் நடத்துவதற்கு வேறு எதுவும் இல்லாததாலேயே, இவ்வாறான போலிப் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன” என்றார்.

Dila

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை