அரசியல் அமைப்பு திருத்தம் முதல் அதிகாரப் பகிர்வு வரை – பர்ன்ஹாமின் முதல் உரை
பிரித்தானியாவில் சிதைந்துள்ள அரசியல் அமைப்பை சீரமைப்பதாக பிரதமர் பதவிக்கான போட்டியில் முன்னணி வகிக்கும் ஆண்டி பர்ன்ஹாம் தெரிவித்துள்ளார்.
தொழிலாளர் கட்சியினர் முன்னிலையில் தனது முதல் உரையை ஆற்றிய அவர், பிரித்தானியாவை புதிய திசையில் வழிநடத்தவுள்ளதாகவும் தெரிவித்தார்.
அத்துடன் 10 ஆண்டுகால திட்டத்தை முன்வைத்துள்ள பரன்ஹாம், நாட்டின் பொருளாதாரக் கொள்கையை மாற்றி எழுதுவதாகவும் உறுதியளித்துள்ளார்.
அத்துடன் பிரித்தானியாவின் அரசியலை “ஒரு தேக்க நிலையிலிருந்து” வெளியே கொண்டு வருவதாகவும், பிராந்தியங்களும் சமூகங்களும் “ஒவ்வொரு அஞ்சல் குறியீட்டுப் பகுதியிலும் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்ல” அனுமதிக்கும் ஒரு அதிகாரப் பகிர்வுத் திட்டத்தை முன்னெடுப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.
அதேநேரம் பிரதமராக பொறுப்பேற்ற பிறகு டவுன் தெருவில் வசிக்காமல் மான்செஸ்டரில் உள்ள தனது சொந்த இல்லத்தில் வசிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இங்கிலாந்தில் நீர் மற்றும் வீட்டுக் கட்டுமானத்தை தேசியமயமாக்குவதற்கான ஒரு முன்னெடுப்பையும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும் தொழிலாளர் கட்சியின் அனைத்துப் பிரிவினரையும் அணுகுவது, பரந்த அளவிலான கருத்துக்களைக் கொண்ட ஒரு உயர்மட்டக் குழுவை உருவாக்குவது, மற்றும் பிற அரசியல் கட்சிகளுடன் இணைந்து பணியாற்ற முயற்சிப்பது ஆகிய வாக்குறுதிகளையும் அவர் வழங்கியுள்ளார்.




