ஐரோப்பா செய்தி

புகலிடம் பெற ஓரினச் சேர்க்கையாளர்களாக நடிப்பு – இருவர் கைது

  • May 6, 2026
  • 0 Comments

புகலிடம் பெறும் நோக்கில் தங்களை ஓரினச்சேர்க்கையாளர்கள் என உருவகப்படுத்திக்கொள்ள உதவிய குற்றச்சாட்டில் குடிவரவு ஆலோசகர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன கிழக்கு லண்டனில் நடைபெற்ற ஒருங்கிணைந்த சோதனைகளை, உள்துறை அமைச்சகத்தின் குடிவரவு அமுலாக்கக் குழுவின் குற்றவியல் மற்றும் நிதி புலனாய்வு பிரிவு முன்னெடுத்தது. விசா காலம் நிறைவடையும் நிலையில் உள்ள புலம்பெயர்ந்தோருக்கு, புகலிட மனுக்களுக்கு ஆதரவாக போலியான கடிதங்கள் மற்றும் புகைப்படங்கள் போன்ற ஆதாரங்களை உருவாக்குவது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டதாக கடந்த மாதம் பிபிசியின் இரகசிய விசாரணையில் […]

அரசியல் இலங்கை செய்தி

நீதித்துறையின் சுயாதீனத்துக்கு அச்சுறுத்தல்: அவசர விவாதம் கோருகிறது எதிரணி!

  • May 6, 2026
  • 0 Comments

நீதிமன்றங்களுக்கு நிறைவேற்று அதிகாரத்தால் விடுக்கப்படும் அழுத்தங்களைக் கண்டித்தும், இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் அவசர விவாதத்தை நடத்துமாறு கோரியும் எதிர்க்கட்சிகளினால் தயாரிக்கப்பட்ட விசேட பிரேரணை இன்று சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் வழிகாட்டலில் தயாரிக்கப்பட்ட இந்தப் பிரேரணையை, எதிர்க்கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் சபாநாயகரிடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்தனர். எதிர்க்கட்சியின் முதற்கோலாசான் கயந்த கருணாதிலக தலைமையில் சென்ற குழுவில், பிரதி முதற்கோலாசான்களான ஜே.சி.அலவதுவல, அஜித் பி. பெரேரா உள்ளிட்ட எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். அண்மைக்காலமாக […]

ஐரோப்பா

உயிர் அச்சுறுத்தல் : நிலத்தடி பதுங்குக் குழியில் புட்டின் தங்க ஏற்பாடு!

  • May 6, 2026
  • 0 Comments

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் தனது பாதுகாப்பு நடவடிக்கைகளை பலப்படுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படுகொலை அச்சம் காரணமாக மேற்படி பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளதாக ஐரோப்பிய உளவுத்துறை தகவல்கள் தெரிவித்துள்ளன. இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில், கிராஸ்னோடார் (Krasnodar) பகுதியில்  வாரக்கணக்கில் தங்கும் வகையில் ஒரு பதுங்குக் குழி அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன்  மெய்க்காப்பாளர்கள் மற்றும் சமையல்காரர்கள் போன்ற பணியாளர்களை முழுமையான சோதனைக்கு உட்படுத்துவதும், அவர்களின் தனிப்பட்ட சாதனங்களுக்குக் கட்டுப்பாடுகளை விதிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புட்டினின் இல்லத்தை உக்ரைன் […]

உலகம்

அமெரிக்காவும் ஈரானும் ஒரு அமைதி ஒப்பந்தத்தை நெருங்கி வருவதாக தகவல்!

  • May 6, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் தொடர்பாக அமெரிக்காவும் ஈரானும் ஒரு அமைதி ஒப்பந்தத்தை நெருங்கி வருவதாக பாகிஸ்தானிய வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. 14 அம்ச புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள் குறித்து 48 மணி நேரத்திற்குள் ஈரானிடமிருந்து ஒரு பதிலை அமெரிக்கா எதிர்பார்ப்பதாகவும், ஈரான் இதனை ஆராய்ந்து வருவதாகவும் கூறப்படுகிறது. ஒரு சாத்தியமான ஒப்பந்தம் ஏற்பட்டால், இரு தரப்பினரும் ஹோர்முஸ் ஜலசந்தியைச் சுற்றியுள்ள கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. ஈரான் அணு ஆயுத செறிவூட்டலுக்குத் தற்காலிகத் […]

உலகம்

போப் கத்தோலிக்கர்களுக்கு ஆபத்தை விளைவிக்கிறார் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

  • May 6, 2026
  • 0 Comments

ஈரானின் அணுசக்தித் திட்டத்தை ஆதரிப்பதன் மூலம் போப் “கத்தோலிக்கர்களுக்கு ஆபத்தை விளைவிக்கிறார்” என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். போப் லியோ கத்தோலிக்கத் திருச்சபை அனைத்து அணு ஆயுதங்களையும் தொடர்ந்து எதிர்த்து வருவதாக தெரிவித்துள்ளார். இந்நிலையில் போபின் கருத்துக்கு எதிர்வினையாற்றிய ட்ரம்ப்.  “ஈரான் அணு ஆயுதம் வைத்திருப்பது சரிதான்” என்று போப் நம்புவதாக ட்ரம்ப் எந்த ஆதாரங்களையும் வழங்காமல் குற்றம் சாட்டியுள்ளார். இதற்கிடையே மார்க் ரூபியோ மற்றும் போபிற்கு இடையில் முக்கிய சந்திப்பு இடம்பெறவுள்ள நிலையில் […]

உலகம்

அரசியல் அமைப்பு திருத்தம் : அணுவாயுதங்கள் மீதான அதிகாரம் கிம் வசம்!

  • May 6, 2026
  • 0 Comments

வட கொரியா தனது அரசியலமைப்பைத் திருத்தியுள்ளது. இதன் மூலம், அதன் பிராந்தியத்தை வெளிப்படையாக வரையறுத்து, நாட்டின் அணு ஆயுதங்கள் மீதான அதிகாரத்தை தலைவர் கிம் ஜாங் உன்னுக்கு வழங்கியுள்ளது. பிரிவு 6-இல் உள்ள ஒரு புதிய உட்பிரிவு, அணு ஆயுதப் படைகள் மீதான கட்டளை அதிகாரம் தலைவருக்கே உரியது என்றும், அவர் அணு ஆயுதப் பயன்பாட்டு அதிகாரத்தைப் பிறருக்கு வழங்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளது. திருத்தப்பட்ட இந்த அரசியலமைப்பில், தென் கொரியாவுடன் மீண்டும் இணைவது குறித்த முந்தைய அனைத்துக் […]

ஐரோப்பா

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பயணித்த பிரெஞ்சு கப்பல் மீது தாக்குதல்!

  • May 6, 2026
  • 0 Comments

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக பயணித்த பிரெஞ்சு கப்பல் தாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் இருந்த பணியாளர் ஒருவர் காயமடைந்துள்ளதாக  பிரெஞ்சு கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது. சிஎம்ஏ சான் அன்டோனியோ (CMA San Antonio) என்ற கப்பல் நேற்று அந்த ஜலசந்தியைக் கடந்து சென்றுகொண்டிருந்தபோது தாக்குதலுக்கு இலக்கானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. “காயமடைந்த பணியாளர்கள் மீட்கப்பட்டு, அவர்களுக்குத் தேவையான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது,” என்றும்  கப்பல் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.  

இலங்கை செய்தி

‘விஜய் இலங்கை வருவார்’ – நாடாளுமன்றத்தில் இன்று வெளியான தகவல்!

  • May 6, 2026
  • 0 Comments

“தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் ஆட்சி அமைந்த பின்னர் விஜய் இலங்கை வருவார் என நம்புகின்றோம்.” என்று இதொகாவின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் எம்.பி. தெரிவித்தார். மீனவர் பிரச்சினை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு புதிய உறவின் ஊடாக தீர்வை வென்றெடுக்கலாம் என்ற நம்பிக்கை உள்ளது எனவும் அவர் கூறினார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய ஜீவன் தொண்டமான் எம்.பி., இது தொடர்பில் கூறியவை வருமாறு , ” விஜயை இதுவரைகாலம் நடிகராக பார்த்த மக்கள் தற்போது தலைவராக தேர்ந்தெடுத்துள்ளனர். மக்கள் […]

இலங்கை

வித்யா படுகொலை வழக்கு: நால்வரின் மரண தண்டனை உறுதி

  • May 6, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் – புங்குடுத்தீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கில் 4 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளது. சந்தேகநபர்கள் சூம் தொழில்நுட்பம் ஊடாக உயர்நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, பிரதம நீதியரசர் பிரீதி பத்மன் சூரசேன தலைமையிலான ஐவரடங்கிய உயர்நீதிமன்ற நீதிபதிகள் குழாம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. மாணவி சிவலோகநாதன் வித்தியா 2015ஆம் ஆண்டு கடத்திச் சென்று, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி கொலை செய்யப்பட்டார். சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்களாக அடையாளம் காணப்பட்ட சுவிஸ் குமார் உள்ளிட்ட […]

உலகம்

வளைகுடா பிராந்தியத்தில் தொடரும் பதற்றம் – போர்நிறுத்தம் சரியும் அபாயம்!

  • May 6, 2026
  • 0 Comments

மத்தியக் கிழக்கில் தொடரும் பதற்ற நிலை பலவீமான போர் நிறுத்தம் முழுமையாக சரிந்துவிடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் மீதான ஆளில்லா விமான மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் மற்றும் ஹோர்முஸ் ஜலசந்தியில் நடந்த துப்பாக்கிச் சண்டைகளைத் தொடர்ந்து, அரசியல் நிபுணர்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர். இந்நிலையில் அமெரிக்க பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்ஸெத், போர் நிறுத்தம் ‘முடிவடையவில்லை’ என்று வலியுறுத்தினார். அதே நேரத்தில், ஜனாதிபதி  ட்ரம்ப் ஈரானின் நடவடிக்கைகளை ‘விளையாட்டுகள்’ என்று நிராகரித்ததோடு, நிலைமை […]