வளைகுடா பிராந்தியத்தில் தொடரும் பதற்றம் – போர்நிறுத்தம் சரியும் அபாயம்!
மத்தியக் கிழக்கில் தொடரும் பதற்ற நிலை பலவீமான போர் நிறுத்தம் முழுமையாக சரிந்துவிடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம் மீதான ஆளில்லா விமான மற்றும் ஏவுகணைத் தாக்குதல்கள் மற்றும் ஹோர்முஸ் ஜலசந்தியில் நடந்த துப்பாக்கிச் சண்டைகளைத் தொடர்ந்து, அரசியல் நிபுணர்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் அமெரிக்க பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்ஸெத், போர் நிறுத்தம் ‘முடிவடையவில்லை’ என்று வலியுறுத்தினார்.
அதே நேரத்தில், ஜனாதிபதி ட்ரம்ப் ஈரானின் நடவடிக்கைகளை ‘விளையாட்டுகள்’ என்று நிராகரித்ததோடு, நிலைமை அமெரிக்காவிடம் ‘முழுமையான கட்டுப்பாட்டில்’ இருப்பதாகக் கூறினார்.
ஹோர்முஸ் ஜலசந்தி வழியாகக் கப்பல்களை வழிநடத்துவதற்காக அமெரிக்கா ‘புராஜெக்ட் ஃப்ரீடம்’ என்ற திட்டத்தைத் தொடங்கியது.
இந்த முயற்சியை ஈரான் ‘புராஜெக்ட் டெட்லாக்’ என்று வர்ணித்ததோடு, ‘நாங்கள் இப்போதுதான் தொடங்குகிறோம்’ என்றும் எச்சரித்துள்ளது.
இவ்வாறான முரண்பட்ட நிலைமைகள் பலவீனமான போர் நிறுத்தத்தை எடுத்துக்காட்டுகிறது.





