போப் கத்தோலிக்கர்களுக்கு ஆபத்தை விளைவிக்கிறார் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!
ஈரானின் அணுசக்தித் திட்டத்தை ஆதரிப்பதன் மூலம் போப் “கத்தோலிக்கர்களுக்கு ஆபத்தை விளைவிக்கிறார்” என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
போப் லியோ கத்தோலிக்கத் திருச்சபை அனைத்து அணு ஆயுதங்களையும் தொடர்ந்து எதிர்த்து வருவதாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் போபின் கருத்துக்கு எதிர்வினையாற்றிய ட்ரம்ப். “ஈரான் அணு ஆயுதம் வைத்திருப்பது சரிதான்” என்று போப் நம்புவதாக ட்ரம்ப் எந்த ஆதாரங்களையும் வழங்காமல் குற்றம் சாட்டியுள்ளார்.
இதற்கிடையே மார்க் ரூபியோ மற்றும் போபிற்கு இடையில் முக்கிய சந்திப்பு இடம்பெறவுள்ள நிலையில் ட்ரம்பின் இந்த குற்றச்சாட்டுகள் வந்துள்ளன.




