ஆஸ்திரேலியா ஐரோப்பா செய்தி

5.4 பில்லியன் டாலர் மெகா ஒப்பந்தம்: ஆஸ்திரேலிய நிலக்கரிச் சுரங்கங்களை வாங்கிய UK நிறுவனம்!

  • May 18, 2026
  • 0 Comments

உலகின் முன்னணி சுரங்க நிறுவனங்களில் ஒன்றான Anglo American , ஆஸ்திரேலியா குயின்ஸ்லாந்தில் உள்ள தனது ஐந்து நிலக்கரி சுரங்கங்களை பிரிட்டனைச் சேர்ந்த தில்மார் Dhilmar Limited நிறுவனத்திற்கு சுமார் 5.43 பில்லியன் டாலர்களுக்கு விற்பனை செய்ய ஒப்புக்கொண்டுள்ளது. இந்த பாரிய ஒப்பந்தத்தில் சுரங்கங்களுடன் சேர்த்து ஊழியர்களுக்கான வீட்டுவசதி மற்றும் மருத்துவ மையங்கள் போன்ற நகர்ப்புற உள்கட்டமைப்புகளும் அடங்கும். இந்த ஒப்பந்தத்தின்படி, Dhilmar நிறுவனம் முதற்கட்டமாக 2.3 பில்லியன் அமெரிக்க டாலர்களை Anglo American நிறுவனத்திற்கு உடனடியாகச் […]

இந்தியா செய்தி தமிழ்நாடு

கற்பூரம் கரையலாம்; கட்சி கரையலாமா? அதிமுகவில் இருந்து விலகினார் செம்மலை!

  • May 18, 2026
  • 0 Comments

தமிழகத்தின் மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான முன்னாள் அமைச்சர் செம்மலை, அதிமுகவில் இருந்து வெளியேறியுள்ளார். இது தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் பழனிசாமிக்கு அவர் விரிவான கடிதமொன்றை எழுதியுள்ளார். ” தேர்தலுக்கு பிறகு அதிமுகவில் அடுத்தடுத்து நடக்கும் நிகழ்வுகள் எனக்கு மிகுந்த மன வேதனையை உண்டாக்கி விட்டது. இதே மனநிலையில்தான், இயக்கம் தொடங்கிய நாளிலிருந்து இந்த இயக்கத்திற்காக பாடுபட்டு வந்த லட்சக்கணக்கான தொண்டர்களும் இருந்து வருகிறார்கள்.” என மேற்படி கடிதத்தில் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நடந்த சம்பவங்கள், நடக்கும் சம்பவங்கள் எதுவுமே […]

செய்தி விளையாட்டு

வாழ்வா, சாவா? சென்னை அணிக்கு இன்று பலப்பரீட்சை!

  • May 18, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் இன்று நடைபெறும் 63 ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் , சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகள் மோதவுள்ளன. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகும். CSK அணி இதுவரை 12 போட்டிகளில் விளையாடி தலா 6 வெற்றி, 6 தோல்விகளுடன் 12 புள்ளிகளைப் பெற்று பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. அடுத்த 2 போட்டிகளில் CSK அணி வெற்றி பெற்றால் மட்டுமே play-off […]

இலங்கை செய்தி

நந்திக்கடலில் சுடடேற்றி மலர்தூவி அஞ்சலி!

  • May 18, 2026
  • 0 Comments

முள்ளிவாய்க்கால் மண்ணில் உயிர்நீத்த உறவுகளுக்காக நந்திக்கடலில் மலர்தூவி, சுடரேற்றி இன்று உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் உள்ளிட்ட குழுவினரே இவ்வாறு அஞ்சலி செலுத்தினர். முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவேந்தல் தமிழர் தாயகத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டுவருகின்றது. இந்நிலையில் இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ரவிகரன் எம்.பி., “எங்கள் பெருமைமிகு வரலாற்றின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல் ஆகும். ஏராளமான எங்கள் […]

ஆஸ்திரேலியா செய்தி

ஆஸ்திரேலியாவில் நடுவீதியில் வன்முறை: இரு சிறுமிகள் கைது!

  • May 18, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலியா, சிட்னி நகரில் பேருந்து சாரதி, பயணி மற்றும் இரு அமெரிக்கா சுற்றுலாப் பயணிகள்மீது தாக்குதல் நடத்திய இரு சிறுமிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை நடந்த இந்த வன்முறைச் சம்பவத்துடன் தொடர்புடைய 16 மற்றும் 17 வயதுடைய சிறுமிகள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பேருந்திற்குள் தொடங்கிய இந்த மோதல், அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்ட பிறகு தெருவில் இருந்த வெளிநாட்டுப் பயணிகளைத் தாக்குமளவிற்கு நீடித்துள்ளது. இத்தாக்குதலில் எவருக்கும் மருத்துவ சிகிச்சை தேவைப்படும் அளவிற்குக் காயங்கள் […]

ஐரோப்பா

ரஷ்யாவில் பணிப்புரிந்த இந்திய தொழிலாளர் பலி!! மேலும் மூவர் படுகாயம்!

  • May 18, 2026
  • 0 Comments

ரஷ்யா மீது உக்ரைன் நடத்திய ட்ரோன் தாக்குதலில் இந்திய தொழிலாளர் உள்பட மேலும் மூன்று பேர் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மொஸ்கோ பகுதியில் நடந்த ட்ரோன் தாக்குதலில் குறித்த நான்குபேரும் உயிரிழந்ததாக அதிகாரிகள் மேலும் குறிப்பிட்டுள்ளனர். ரஷ்யாவில் உள்ள இந்தியத் தூதரகம் இந்த உயிரிழப்புகளை உறுதிப்படுத்தியுள்ளது. காயமடைந்த மற்ற மூவரும் இந்திய நாட்டவர்களே என்றும்  தூதரகம் மேலும் தெரிவித்துள்ளது. “தூதரக அதிகாரிகள் சம்பவ இடத்தைப் பார்வையிட்டுள்ளதுடன், சிகிச்சைப் பெற்று வருபவர்களையும் சந்தித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இந்தியா செய்தி

பிரதமர் மோடிக்கு சுவீடனில் உயரிய விருது!

  • May 18, 2026
  • 0 Comments

இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு சுவீடன் நாட்டின் உயரிய விருதான ‘ராயல் ஆர்டர் ஆப் போலார் ஸ்டார்’ விருந்து வழங்கப்பட்டுள்ளது. சுவீடன் இளவரசி விக்டோரியாவால் குறித்த விருது வழங்கி வைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி ஐந்து நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். இதில் முதல் நாடாக ஐக்கிய அரபு அமீரகம் சென்றார். பின்னர் அங்கிருந்து நெதர்லாந்து பயணமானார். இந்நிலையில் மூன்றாவது நாடாக சுவீடனுக்கு நேற்று சென்ற பிரதமர் மோடியை, அந்நாட்டு பிரதமர் உல்ப் கிறிஸ்டர்சன் விமான நிலையத்துக்கு நேரில் […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் ஆட்கடத்தல் தொடர்பான கைது நடவடிக்கைகள் அதிகரிப்பு!

  • May 18, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் ஆட்கடத்தல் தொடர்பான கைது நடவடிக்கைகள் கணிசமாக அதிகரித்துள்ளதாக தேசிய குற்றவியல் முகமை (NCA) தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டில் மாத்திரம் 55 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்ததாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இவ் ஆண்டின் ஏப்ரல் மாதம் வரையிலான காலப்பகுதியில், இந்த முகமை இங்கிலாந்திலும் வெளிநாடுகளிலும் 300 கைது நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இது முந்தைய ஆண்டில் பதிவு செய்யப்பட்ட 190 கைதுகளை விட கணிசமான உயர்வாகும். இந்த அதிகரிப்புக்கு, வளங்களின் விரிவாக்கமே காரணம்  என அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். குறிப்பாக […]

இலங்கை செய்தி

ஜனாதிபதி தலைமையில் கொழும்பில் தேசிய போர்வீரர்கள் தினம்!

  • May 18, 2026
  • 0 Comments

தேசிய போர்வீரர்கள் தினம், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நாளை (19) கொழும்பில் அனுஷ்டிக்கப்படவுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்தில் இந்த நிகழ்வு பிற்பகல் 3 மணிக்கு, இடம்பெறவுள்ளது என ரணவிரு சேவா அதிகாரசபையின் தலைவர் பிரிகேடியர் எஸ்.பி.கொஹன தெரிவித்தார். இந்த ஆண்டு நிகழ்வில், முப்படையினர், காவல்துறையினர், சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினர், தேசிய கடெட் படையணியினர், மரணமான படையினரின் குடும்ப உறுப்பினர்கள், வெளிநாட்டு பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள் என, 2,700 பேர் வரை பங்கேற்பார்கள். […]

இலங்கை செய்தி

முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நினைவேந்தல் இன்று அனுஷ்டிப்பு!

  • May 18, 2026
  • 0 Comments

முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட தமிழ்மக்களின்; 17ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இன்று திங்கட்கிழமை உணர்வெழுச்சியுடன் நடைபெறவுள்ளது. இன்று காலை 06:00 – 09:30 மணி வரை முள்ளிவாய்க்கால் கப்பலடி கடற்கரைப் பகுதியில், இறுதிக்கட்டப் போரில் உயிரிழந்த உறவுகளுக்கான பிதிர்க்கடன் மற்றும் மதக் கிரியைகள் இடம்பெறுகின்றன. முற்பகல் 10:15 மணிக்கு முள்ளிவாய்க் கால் நினைவு முற்றத்தில் கொள்கைப் பிரகடனம் வாசிக்கப்படும். முற்பகல் 10:29 மணிக்கு நினைவொளி எழுப்பப்படும். முற்பகல் 10:30 மணிக்கு இரண்டு நிமிட […]