ஜனாதிபதி தலைமையில் கொழும்பில் தேசிய போர்வீரர்கள் தினம்!
தேசிய போர்வீரர்கள் தினம், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் நாளை (19) கொழும்பில் அனுஷ்டிக்கப்படவுள்ளது.
நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்தில் இந்த நிகழ்வு பிற்பகல் 3 மணிக்கு, இடம்பெறவுள்ளது என ரணவிரு சேவா அதிகாரசபையின் தலைவர் பிரிகேடியர் எஸ்.பி.கொஹன தெரிவித்தார்.
இந்த ஆண்டு நிகழ்வில், முப்படையினர், காவல்துறையினர், சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினர், தேசிய கடெட் படையணியினர், மரணமான படையினரின் குடும்ப உறுப்பினர்கள், வெளிநாட்டு பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள் என, 2,700 பேர் வரை பங்கேற்பார்கள்.
போரில் பங்கெடுத்த தமிழ், முஸ்லிம் படையினர் மற்று அவர்களின் குடும்பத்தினர் இந்த நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர் என்றும் பிரிகேடியர் கொஹன தெரிவித்துள்ளார்.





