ஐரோப்பா

மாறி மாறி தாக்கிக்கொண்ட உக்ரைன், ரஷ்யா!! 600 ட்ரோன்கள், 90 ஏவுகணைகள் பயன்பாடு!

  • May 24, 2026
  • 0 Comments

கீவ் மீது நடத்தப்பட்ட பெரிய அளவிலான தாக்குதலில் ரஷ்யா அதிவேக ஒரெஷ்னிக் பாலிஸ்டிக் ஏவுகணையைப் பயன்படுத்தியதாக உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி குற்றம் சாட்டியுள்ளார். இந்தத் தாக்குதலில் குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன், 83 பேர் காயமடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் குடியிருப்புப் பகுதிகள், அரசு கட்டிடங்கள் மற்றும் பிற உள்கட்டமைப்புகளுக்குக் குறிப்பிடத்தக்க சேதம் ஏற்பட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மோதலில் ஒரெஷ்னிக் ஏவுகணை பயன்படுத்தப்பட்ட மூன்றாவது சந்தர்ப்பமாக இது பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். இதற்கிடையே […]

இந்தியா

இந்தியாவில் கடும் வெப்பம் – 02 நாட்களில் 40 பேர் உயிரிழப்பு!

  • May 24, 2026
  • 0 Comments

இந்தியாவில் வெப்ப அலை காரணமாக கடந்த 02 நாட்களில் 40 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இறந்தவர்களில் பெரும்பாலானோர் முதியவர்கள் மற்றும் தொழிலாளர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 140 கோடி மக்கள்தொகை கொண்ட இந்தியாவில் உள்ள பல நகரங்களில், சிலவற்றில் வெப்பநிலையானது 45 டிகிரி செல்சியஸை தாண்டியுள்ளது. அதிக வெப்பநிலை நீரிழப்புக்கு வழிவகுக்கும் என்றும், இது இரத்த உறைவுக்கும், மேலும் கடுமையான சந்தர்ப்பங்களில் உறுப்பு செயலிழப்புக்கும் வழிவகுக்கும் என்றும் சுகாதார […]

இலங்கை

இலங்கை ரூபாவின் மதிப்பில் திடீர் மாற்றம்!

  • May 24, 2026
  • 0 Comments

கடந்த சில நாட்களாக வீழ்ச்சியடைந்து வந்த இலங்கை ரூபாவின் மதிப்பு, கடந்த வெள்ளிக்கிழமை   2.7 வீதத்தால் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக ‘Bloomberg’ இணையத்தளம் தெரிவித்துள்ளது. இது, 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குப் பின்னர் ரூபா பதிவு செய்த மிகப்பெரிய ஒருநாள் வளர்ச்சியாகும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, அன்றைய தினம் ஆசியாவிலேயே மிகச் சிறந்த முறையில் செயல்பட்ட நாணயமாக இலங்கை ரூபா மாறியுள்ளது. சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி ஆகியவற்றிடமிருந்து இலங்கைக்கு […]

உலகம் செய்தி

அமெரிக்கா–ஈரான் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்: ஒப்பந்தம் விரைவில் அறிவிக்கப்படலாம்

  • May 24, 2026
  • 0 Comments

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பேச்சுவார்த்தைகளில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஈரான் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகாயி, இரு நாடுகளின் நிலைப்பாடுகளும் ஒருங்கிணைந்து வருவதாக தெரிவித்தார். இருப்பினும், அமெரிக்கா முரண்பாடான அறிக்கைகளை வெளியிட்டு வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். மேலும், இறுதி ஒப்பந்தத்தை எட்டுவதற்கான அடித்தளமாக இருக்கும் “புரிந்துணர்வு ஒப்பந்தத்தை” உருவாக்கும் பணியில் ஈரான் ஈடுபட்டுள்ளதாகவும் பாகாயி கூறினார். இதனிடையே, ஈரானுடனான ஒப்பந்தம் “பெரும்பாலும்  முடிக்கப்பட்டுவிட்டது” என்றும், அதன் விவரங்கள் விரைவில் […]

ஐரோப்பா செய்தி

ஈரான் அணு ஆயுதம் உருவாக்க அனுமதிக்க முடியாது – ஐரோப்பிய ஒன்றியம்

  • May 24, 2026
  • 0 Comments

அமெரிக்கா–ஈரான் இடையிலான பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை ஐரோப்பிய ஒன்றிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் வரவேற்றுள்ளார். அதேவேளை, ஈரான் அணு ஆயுதம் உருவாக்க அனுமதிக்கப்படக் கூடாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். X தளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த ஒப்பந்தம் பிராந்திய மோதல்களை உண்மையாக தணிக்க வேண்டும் என்றும், ஹோர்முஸ் நீரிணையில் தடையற்ற கப்பல் போக்குவரத்து சுதந்திரம் உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஈரான் மற்றும் அதன் ஆதரவு குழுக்கள் பிராந்தியத்தில் மேற்கொள்ளும் […]

ஐரோப்பா செய்தி

ரஷ்யாவின் மிகப்பெரிய ஏவுகணை தாக்குதல் – கீவ் உட்பட பல பகுதிகள் கடும் சேதம்

  • May 24, 2026
  • 0 Comments

ரஷ்யா, உக்ரைன் மீது நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் மற்றும் பல ஏவுகணைகளை ஏவி பெரிய அளவிலான தாக்குதலை நடத்தியுள்ளது. தலைநகர் கீவ் முக்கிய இலக்காக இருந்ததாக உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் கீவ் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் நான்கு பேர் உயிரிழந்ததுடன், சுமார் 83 பேர் காயமடைந்துள்ளனர். குடியிருப்பு கட்டிடங்கள் மற்றும் பாடசாலைகளும் சேதமடைந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதல்கள், உக்ரைன் பொதுமக்கள் உட்கட்டமைப்புகளை இலக்கு வைத்து நடத்திய தாக்குதல்களுக்கு பதிலடியாக மேற்கொள்ளப்பட்டதாக ரஷ்ய […]

உலகம்

பாகிஸ்தானில் ரயில் தண்டவாளத்தில் குண்டு வெடிப்பு : 24 பேர் உயிரிழப்பு!

  • May 24, 2026
  • 0 Comments

பாகிஸ்தானின் குவெட்டாவில் இன்று குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. அப்பகுதியில் உள்ள  ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 24 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெடிவிபத்தில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். அத்துடன் இந்த வெடிவிபத்தால் ரயில் ஒன்று தடம் புரண்டதாகவும் அறிவிக்கப்பட்டள்ளது. இதனைத் தொடர்ந்து துப்பாக்கிச்சூடும் நடைபெற்றுள்ளதாக  அல் ஜசீரா நிறுவனம் செய்தி வெளியிட்டது. இந்தச் சம்பவத்தை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வன்மையாகக் கண்டித்துள்ளார். இது “அப்பாவி உயிர்களின் துயரமான இழப்புக்கும், மேலும் பலர் […]

இலங்கை

மாகாண சபைத் தேர்தலுக்கு வாய்ப்பில்லை!! டில்வின் சில்வா விளக்கம்!

  • May 24, 2026
  • 0 Comments

மாகாண சபைத் தேர்தலை நடத்தும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற திறப்புவிழாவொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மாகாணசபைத் தேர்தல் குறித்து கருத்து வெளியிட்ட அவர், கடந்த வரவு செலவுத் திட்டத்தில் மாகாண சபைத் தேர்தலை நடத்தும் நோக்கில் அதற்கான நிதியை நாங்கள் ஒதுக்கீடு செய்திருந்தோம். ஆனால், அவ்வாறு திட்டமிட்டிருந்த வேளையில் நாட்டில் பாரிய வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதுடன், பொருளாதார […]

உலகம்

வெள்ளை மாளிகை துப்பாக்கிச்சூடு சம்பவம் – தாக்குதல்தாரி அடையாளம் காணப்பட்டார்!

  • May 24, 2026
  • 0 Comments

வெள்ளை மாளிகை துப்பாக்கிச்சூட்டுடன் தொடர்புடைய நபர் அடையாளம் காணப்பட்டுள்ளனார். 21 வயதுடைய நசீர் பெஸ்ட் ( Nasire Best)  என்ற நபர் சட்ட அமலாக்க அதிகாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த சம்பவத்தின்போது மற்றொரு நபர் மீதும் துப்பாக்கி குண்டு பாய்ந்துள்ளது. அவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பெஸ்டுக்கு மனநலப் பிரச்சினைகள் இருந்ததாகவும், சம்பவத்திற்கு முந்தைய மாதங்களில் அச்சுறுத்தல்கள் விடுப்பது மற்றும் தடைசெய்யப்பட்ட பகுதிகளுக்குள் நுழைவது உட்பட சட்டத்திற்கு புறம்பான […]

உலகம்

காங்கோவில் எபோலா நோயாளிகள் சிகிச்சை பெற்று வந்த கூடாரங்களுக்கு தீ வைப்பு!

  • May 24, 2026
  • 0 Comments

காங்கோவில் எபோலா தொற்று வேகமாக பரவி வருகின்ற நிலையில், நோயாளிகள் சிகிச்சைப் பெற்று வந்த கூடாரம் ஒன்று நேற்று தீக்கிரையாக்கப்பட்டுள்ளது. தீ விபத்தை தொடர்ந்து அங்கு சிகிச்சைப் பெற்று வந்த 18 நோயாளிகள் வெளியேறியுள்ளனர். நோயாளிகள் சிகிச்சைப் பெறும் கூடாரங்கள் தீக்கிரையாக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும். அதிக தொற்றுத்தன்மை கொண்ட எபோலா நோயாளிகளின் உடல்களைக் கையாள்வதற்கான கடுமையான நெறிமுறைகள் காரணமாக, சுகாதாரப் பணியாளர்களுக்கும் உள்ளூர் மக்களுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் இவ்வாறான சம்பவங்களும் அரங்கேறி […]