பாகிஸ்தானில் ரயில் தண்டவாளத்தில் குண்டு வெடிப்பு : 24 பேர் உயிரிழப்பு!
பாகிஸ்தானின் குவெட்டாவில் இன்று குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
அப்பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 24 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வெடிவிபத்தில் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
அத்துடன் இந்த வெடிவிபத்தால் ரயில் ஒன்று தடம் புரண்டதாகவும் அறிவிக்கப்பட்டள்ளது. இதனைத் தொடர்ந்து துப்பாக்கிச்சூடும் நடைபெற்றுள்ளதாக அல் ஜசீரா நிறுவனம் செய்தி வெளியிட்டது.
இந்தச் சம்பவத்தை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் வன்மையாகக் கண்டித்துள்ளார். இது “அப்பாவி உயிர்களின் துயரமான இழப்புக்கும், மேலும் பலர் காயமடைவதற்கும் வழிவகுத்தது” என்று அவர் கவலை வெளியிட்டுள்ளார்.




