ஐரோப்பா

போலந்தின் சர்ச்சைக்குரிய 666 பேருந்து சேவையை மீள ஆரம்பிக்க நடவடிக்கை!

  • June 1, 2026
  • 0 Comments

போலந்தின் ஹெல் கடற்கரை சுற்றுலாத் தலத்திற்குச் செல்லும் சர்ச்சைக்குரிய 666 பேருந்து சேவை இந்த கோடை காலத்தில் மீள ஆரம்பிக்கப்படவுள்ளது. முன்னதாக PKS Gdynia நிறுவனத்தால் இயக்கப்பட்டு வந்த பேருந்து சேவை சில மதக் குழுக்களின் எதிர்ப்புகளைத் தொடர்ந்து கடந்த 2023 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்டதுடன், 669 என பெயர்மாற்றம் செய்யப்பட்டது.  அத்துடன் குறித்த பேருந்து நிறுவனம் “சாத்தானியத்தைப் பரப்புவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் தற்போது இந்த  சேவையை வழங்க   ஃபிளிக்ஸ்பஸ் (FlixBus) என்ற பேருந்து நிறுவனம் […]

உலகம் செய்தி

லெபனானிலும் போர் நிறுத்தத்தைக் கோருகிறது ஈரான்!

  • June 1, 2026
  • 0 Comments

ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையிலான போர் நிறுத்த ஒப்பந்தமானது லெபனான் உட்பட அனைத்து பகுதிகளுக்கும் பொருந்தக்கூடியதாக இருக்க வேண்டும் என்று ஈரான் வெளிவிவகார அமைச்சர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதற்கமைய குறிப்பிட்ட ஒரு பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டாலும் அது ஒட்டுமொத்தப் போர்நிறுத்தத்தை மீறுவதற்குச் சமம் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு, லெபனான், பெய்ரூட் மீது தரைவழித் தாக்குதல் நடத்த உத்தரவிட்டதைத் தொடர்ந்து, ஈரான் தரப்பில் இருந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லா அமைப்பானது, ஈரான் […]

இலங்கை

பிணை முறி மோசடி விவகாரம் : பிரதிவாதிகளுக்கு சாதமாக வழங்கப்பட்ட தீர்ப்பு இரத்து!

  • June 1, 2026
  • 0 Comments

மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் அனைத்து குற்றவாளிகளையும் விடுவித்திருந்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மேல்முறையீட்டு நீதிமன்றம் இரத்த செய்து இன்று தீர்ப்பளித்துள்ளது. அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சுமத்தி, பெர்பச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனம், முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரன், முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட பிரதிவாதிகள் குழுவினருக்கு எதிராக சட்டமா அதிபரால் முன்னதாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கினை விசாரணை செய்த உச்சநீதிமன்றம் அவர்களை விடுவித்து உத்தரவு […]

உலகம் முக்கிய செய்திகள்

அதிகரிக்கும் பதற்றம் – போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் நிறுத்தம்!

  • June 1, 2026
  • 0 Comments

அமெரிக்காவுடன் போர் நிறுத்த ஒப்பந்தம் ஒன்றை எட்டுவதற்கான அனைத்து பேச்சுவார்த்தைகளையும் ஈரான் நிறுத்தி வைத்துள்ளது. ஈரானின் முக்கிய கோரிக்கைகளில்  லெபானில் போர் நிறுத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என்பதும் ஒன்றாகும். இருப்பினும் அங்கு இஸ்ரேல் கோரத் தாண்டவம் ஆடத்துவங்கியுள்ளது. உச்சக்கட்ட தாக்குதல்களை நடத்த இஸ்ரேலிய பிரதமர் பெஞ்ஜமின் நெதன்யாகு துருப்புகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்நிலையில் லெபனானின் அனைத்து பகுதிகளிலும் அமைதி ஒப்பந்தம் மீறப்பட்டுள்ளதாக ஈரான் குற்றஞ்சாட்டியுள்ளதுடன்,  மத்தியஸ்தர்கள் மூலமான பேச்சுவார்த்தையையும் நிறுத்தியுள்ளது. போர் நிறுத்தத்தின் ஒரு முனையில் ஏற்படும் […]

அரசியல் செய்தி

யாழ்.மேல்நீதிமன்ற நீதிபதி இடமாற்றத்துக்கும் ஆளுநருக்கும் தொடர்பா?

  • June 1, 2026
  • 0 Comments

யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதியின் இடமாற்றத்துக்கும், வடக்கு மாகாண ஆளுநருக்கும் எந்தவொரு தொடர்பும் கிடையாது என வடக்கு மாகாண ஆளுநர் செயலகம் அறிவித்துள்ளது. இது தொடர்பில் சமூகத்தில் எழக்கூடிய தேவையற்ற ஊகங்களைத் தவிர்க்கும் பொருட்டும், உண்மை நிலைமையைப் பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்தும் வகையிலுமே ஆளுநர் செயலகத்தால் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகின்றது. நீதித்துறை அதிகாரிகளின் திடீர் மற்றும் விளக்கமற்ற இடமாற்றங்களும், அவற்றில் நிர்வாகத் துறையினரின் தலையீடும், நீதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையை பாதிக்கக்கூடும் என்று யாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டி […]

உலகம்

ஐ.நா. பாதுகாப்பு சபையில் சீர்த்திருத்தங்களை மேற்கொள்ள அழைப்பு!

  • June 1, 2026
  • 0 Comments

ஐ.நா. பாதுகாப்பு சபையில் சீர்த்திருத்தங்களை மேற்கொள்ள ​​கிர்கிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் ஜீன்பெக் குலுபாயேவ் (Jeenbek Kulubaev),  அழைப்பு விடுத்துள்ளார். ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்காவிலிருந்து அதிக பிரதிநிதித்துவத்தை உள்ளடக்கும் வகையில்  இந்த சீர்த்திருத்தம் அமைய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த சீர்திருத்தம் செயல்படுத்தப்பட்டால், தனது நாடு ஒரு பாலமாகச் செயல்படும் என்றும் அவர் கூறினார். ஐ.நா. பாதுகாப்பு சபையில் கிர்கிஸ்தானின் உறுப்புரிமை  நிரந்தரமற்றதாகியுள்ள நிலையில் அவர் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார். “சர்வதேச சட்டம், நாடுகளின் […]

உலகம் செய்தி

ஈரான் ஜனாதிபதியுடன் ஜப்பான் பிரதமர் அவசர பேச்சு!

  • June 1, 2026
  • 0 Comments

அமெரிக்காவுடன் இணக்கப்பாட்டை எட்டுவதற்கு அதிகபட்ச நெகிழ்வுத்தன்மையைக் காட்டுமாறு ஈரானிடம், ஜப்பான் கோரிக்கை விடுத்துள்ளது. ஈரான் ஜனாதிபதிக்கும் Masoud Pezeshkian , ஜப்பான் பிரதமருக்கும்  Sanae Takaichi  இடையில் நடைபெற்ற தொலைபேசி கலந்துரையாடலின்போதே இந்த வேண்டுகோள் முன்வைக்கப்பட்டுள்ளது. சர்வதேச கப்பல் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், ஹார்முஸ் நீரிணையை மீண்டும் திறக்குமாறு இதன்போது ஜப்பான் பிரதமர் கோரிக்கை விடுத்துள்ளார். ஆசிய நாடுகள் உள்ளிட்ட அனைத்து நாடுகளின் கடல்சார் வணிகப் பாதுகாப்பு குறித்து இந்த ஆலோசனையில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. […]

ஐரோப்பா

பிரித்தானியாவை உலுக்கிய வெப்ப அலை : 15 பேர் பலி!

  • June 1, 2026
  • 0 Comments

சமீபத்திய வெப்ப அலையின் காரணமாக பிரித்தானியா முழுவதும் ஏறக்குறைய 15 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான மரணங்கள் நீர் நிலைகளில் சம்பவித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் ரோயல் லைஃப் சேவிங் சொசைட்டி (Royal Life Saving Society), , தண்ணீரில் இறங்குவதற்கு முன்பு சிந்திக்குமாறு மக்களை வலியுறுத்தியுள்ளது. அதே நேரத்தில் இங்கிலாந்து சுகாதாரப் பாதுகாப்பு நிறுவனம் குளிர் நீர் அதிர்ச்சி குறித்து எச்சரித்துள்ளது.  

இலங்கை செய்தி

சங்க நீதிமன்றம் வேண்டும்: ஞானசார தேரர் வலியுறுத்து!

  • June 1, 2026
  • 0 Comments

பௌத்த பிக்குகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கு சங்க நீதிமன்றம் போன்ற பொறிமுறை இன்றியமையாததாகும் என்று பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். கொழும்பு மேல் நீதிமன்ற வளாகத்தில் இன்று ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். “பௌத்தம் என்பது மிகவும் சுதந்திரமான, ஜனநாயக விழுமியங்களைக் கொண்ட ஒரு தத்துவமாகும். தனது குருவைக்கூட விமர்சிப்பதற்கு சுதந்திரம் வழங்கிய மதமாகும். இத்தகைய தாராளத்தன்மையைப் பயன்படுத்தி ஒரு சிலர் பௌத்தத்தையும் பிக்குகளையும் அவமதிக்கும் செயல்களில் […]

ஐரோப்பா

புலம்பெயர்தோரை நாடு கடத்தும் விவகாரத்தில் பிரிட்டனுக்கு சாதகமாக வந்த தீர்ப்பு!

  • June 1, 2026
  • 0 Comments

பிரித்தானியாவிற்கு புலம்பெயர்வோரை ருவாண்டாவிற்கு நாடு கடத்த தீர்மானிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த திட்டம் தோல்வியடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் பிரிட்டன் தனது ஒப்பந்தத்தின் விதிமுறைகளை மீறிவிட்டதாகக் கூறும் ருவாண்டா அரசாங்கம்  100 மில்லியன் பவுண்டுகளை நஷ்ட ஈடாக கோரி ஹேக்கில் உள்ள நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது. வழக்கினை கடந்த மூன்று நாட்களாக விசாரித்த நீதிபதிகள் தோல்வியடைந்த இந்த திட்டத்திற்கு பிரித்தானியா பணம் செலுத்த வேண்டியதில்லை என தீர்ப்பளித்துள்ளனர். இதேவேளை 2024 ஆம் ஆண்டு தொழிற்கட்சி ஆட்சிக்கு […]