இலங்கை

பிணை முறி மோசடி விவகாரம் : பிரதிவாதிகளுக்கு சாதமாக வழங்கப்பட்ட தீர்ப்பு இரத்து!

மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் அனைத்து குற்றவாளிகளையும் விடுவித்திருந்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை மேல்முறையீட்டு நீதிமன்றம் இரத்த செய்து இன்று தீர்ப்பளித்துள்ளது.

அரசாங்க நிதியை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சுமத்தி, பெர்பச்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவனம், முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மஹேந்திரன், முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க உள்ளிட்ட பிரதிவாதிகள் குழுவினருக்கு எதிராக சட்டமா அதிபரால் முன்னதாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கினை விசாரணை செய்த உச்சநீதிமன்றம் அவர்களை விடுவித்து உத்தரவு பிறப்பித்திருந்தது.

இதனைத் தொடர்ந்து குறித்த வழக்கு மேல்முறையீடு செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று 05 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

வழக்கை விசாரணை செய்த நீதிபதிகள் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை இரத்து செய்ததுடன்,  பொதுச் சொத்துக்களுக்கு எதிரான குற்றங்கள் சட்டத்தின் கீழ் ஒரு நிறுவனத்தின் மீது வழக்குத் தொடரலாம் என்றும் தீர்ப்பளித்துள்ளனர்.

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்