கருத்து & பகுப்பாய்வு

ஒரு மணிநேரத்தில் 112 புதிய கோடீஸ்வரர்கள் : 2025 ஆம் ஆண்டில் புதிய கோடீஸ்வரர்களின் பட்டியல்

  • July 10, 2026
  • 0 Comments

2025 ஆம் ஆண்டில் உலகில் கிட்டத்தட்ட 10 இலட்சம் புதிய பணக்காரர்கள் உருவாகியுள்ளதாக யுபிஎஸ் (UBS) நிறுவணத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. இது ஒரு நாளைக்கு 2,680-க்கும் மேற்பட்ட புதிய கோடீஸ்வரர்கள் உருவாகுவதையும், , ஒரு மணி நேரத்திற்கு 112 பேர் அல்லது ஒவ்வொரு நிமிடத்திற்கும் கிட்டத்தட்ட இரண்டு பேர் உருவாகுவதை குறிப்பதாகவும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ள தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வளர்ச்சியின் பெறும்பகுதி குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் இருந்து உருவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதில், இங்கிலாந்தில் ஒரு நாளைக்கு சராசரியாக […]

ஐரோப்பா

கிரீஸில் பயிற்சியில் ஈடுபட்ட விமானம் கீழே விழுந்து விபத்து

  • July 10, 2026
  • 0 Comments

கிரீஸில் உள்ள ஜாகிந்தோஸ் (Zakynthos) விமான நிலையத்தில்,  நேற்றைய தினம் F-16 ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்துள்ளது. விமானி அதில் இருந்து குதித்து உயிர் தப்பியுள்ளார். அவர் தற்போது நலமாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர். பயிற்சிப் பறப்பில் ஈடுபட்டிருந்த அந்த விமானம் தொழில்நுட்ப கோளாறால் விபத்தில் சிக்கியிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவத்திற்கான காரணங்கள் குறித்து தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இறுதி யுத்தத்தின் போது தமிழர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான தங்க நகைகள் மற்றும் சொத்துக்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்து அரசு வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வலியுறுத்தியுள்ளார். இலங்கை செய்தி

போரின்போது கைப்பற்றப்பட்ட தமிழர்களின் தங்கம் எங்கே?

  • July 10, 2026
  • 0 Comments

இறுதி யுத்தத்தின் போது தமிழர்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான தங்க நகைகள் மற்றும் சொத்துக்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்து அரசு வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற பணத்தூய்மைப்படுத்தல் மற்றும் நிதிசார் சட்டமூலங்கள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். அவர் மேலும் உரையாற்றுகையில், “தமிழீழ வைப்பகத்தில் தமிழ் மக்கள் அடகு வைத்திருந்த பல […]

திங்கட்கிழமை அன்று டெஹ்ரான் வீதிகளில் 10 கிலோமீட்டர் தூரத்திற்கு நடைபெற்ற பிரம்மாண்ட ஊர்வலத்தில் சுமார் 1.2 கோடி மக்கள் திரண்டனர். உலகம் செய்தி

பலி தீர்க்கும் முழக்கத்துடன் அலி கமேனியின் உடல் நல்லடக்கம்

  • July 10, 2026
  • 0 Comments

ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அலி கமேனியின் உடல், நான்கு மாதங்களுக்குப் பிறகு, அந்நாட்டின் மிகவும் புனிதமான ஷியா தர்காவில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி மத்திய டெஹ்ரானில் உள்ள இல்லத்தின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் அவர் உயிரிழந்திருந்தார். அலி கமேனி பிறந்த இடமான மஷாத் (Mashhad) நகரில் அமைந்துள்ள, உலகப் புகழ்பெற்ற ‘இமாம் ரெஸா’ (Imam Reza) புனிதத் தர்காவில் வெள்ளிக்கிழமை அதிகாலை அவரது உடல் […]

பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று காலை காலமானார். செய்தி பொழுதுபோக்கு

ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன் காலமானார்

  • July 10, 2026
  • 0 Comments

பிரபல ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன், உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் இன்று (10) காலை காலமானார். சிவகங்கையை சேர்ந்த செழியன், சினிமா துறையின் தவிர்க்க முடியாத ஒளிப்பதிவாளராக தன்னை தகவமைத்துக் கொண்டார். பி.சி.ஸ்ரீராமின் உதவியாளராக தனது பயணத்தை தொடங்கினார். கடந்த 2007-ல் வெளியான ‘கல்லூரி’ படம் மூலமாக ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். தொடர்ந்து ரெட்டைச்சுழி, மகிழ்ச்சி, தென்மேற்கு பருவக்காற்று, பரதேசி, ஜோக்கர் உள்ளிட்ட படங்களில் ஒளிப்பதிவாள ராக பணியாற்றி உள்ளார். குறும்படங்கள் மற்றும் ஆவணப் படத்துக்கும் ஒளிப்பதிவு செய்துள்ளார். கடந்த […]

ஸ்பெயினின் தென்கிழக்கு மாகாணமான அல்மேரியாவில் (Almería) உள்ள லாஸ் காஸார்டோஸ் (Los Gallardos) பகுதியில் ஏற்பட்ட பயங்கர காட்டுத்தீயில் சிக்கி குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 6 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் அந்தலூசியா (Andalusia) பிராந்திய அரசு தெரிவித்துள்ளது. ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

ஸ்பெயினில் காட்டுத்தீயில் சிக்கி 12 பேர் உயிரிழப்பு

  • July 10, 2026
  • 0 Comments

ஸ்பெயினின் தென்கிழக்கு மாகாணமான அல்மேரியாவில் (Almería) உள்ள லாஸ் காஸார்டோஸ் (Los Gallardos) பகுதியில் ஏற்பட்ட பயங்கர காட்டுத்தீயில் சிக்கி குறைந்தது 12 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 6 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் அந்தலூசியா (Andalusia) பிராந்திய அரசு தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் சிலர், தீயில் முற்றாகக் கருகிய வாகனங்களுக்குள் இருந்து சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். மின்சாரக் கம்பி ஒன்று அறுந்து விழுந்ததே இந்தத் தீ விபத்துக்குக் காரணம் என்றும், இதனால் அருகிலுள்ள காட்டுப் பகுதிக்குத் தீ வேகமாகப் பரவியதாகவும் […]

பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற விறுவிறுப்பான காலிறுதிப் போட்டியில் மொராக்கோவை வீழ்த்தி பிரான்ஸ் அணி உலகக் கோப்பை 2026 (FIFA World Cup 2026 ) அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது. செய்தி

மூன்றாவது முறையாக அரையிறுதிக்கு முன்னேறி பிரான்ஸ் சாதனை

  • July 10, 2026
  • 0 Comments

பாஸ்டன் மைதானத்தில் நடைபெற்ற விறுவிறுப்பான காலிறுதிப் போட்டியில் மொராக்கோவை வீழ்த்தி பிரான்ஸ் அணி உலகக் கோப்பை 2026 (FIFA World Cup 2026 ) அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது. இந்த ஆட்டத்திலும் கிலியன் எம்பாப்பே (Kylian Mbappe) தனது அசாத்திய திறமையால் பிரதான தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துள்ளார். ஆட்டத்தின் முதல் பாதியில் தனக்குக் கிடைத்த பெனால்டி (Penalty) வாய்ப்பைத் தவறவிட்ட எம்பாப்பே, பின்னர் அதிலிருந்து மீண்டு வந்து இந்தத் தொடரில் தனது 8ஆவது கோலை அடித்தார். அதுமட்டுமன்றி, […]

ஐரோப்பா

“ஹாய் மம் ” – பிரித்தானியாவில் நடக்கும் நூதன மோசடி

  • July 9, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் கடும் வெப்பமான வானிலை நிலவுகின்ற நிலையில் இதனை பயன்படுத்தி நூதனமாக மோசடி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் எச்சரித்துள்ளனர். மோசடியாளர்கள் பிள்ளைகள் போல் நடித்து பணம் பறிக்கும் செயற்பாட்டை முன்னெடுப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் பொலிஸார் வெளியிட்டுள்ள செய்தியில், அடையாளம் தெரியாத எண்ணிலிருந்து ‘ஹாய் மம்’ அல்லது ‘ஹாய் டாட்’ என்று தொடங்கும் ஒரு குறுஞ்செய்தி அல்லது வாட்ஸ்அப் செய்தி வரும். அதில், ஒரு அவசரநிலை காரணமாக ‘புதிய எண்ணுக்கு’ பதில் அனுப்புமாறு பெற்றோரிடம் கேட்கப்படும். தொடர்பு […]

இலங்கை

நீர்கொழும்பு சிறை அதிகாரிக்கு கொலை மிரட்டல் : கலவரம் தொடர்பில் வெளியான தகவல்கள்

  • July 9, 2026
  • 0 Comments

சமீபத்தில் நீர்கொழும்பு சிறையில் நடந்த கலவரத்தின் போது, ​​கைதிகள் சிறையின் பிரதான வாயிலை உடைத்துக்கொண்டு தப்பிச் செல்வதைத் தடுப்பதற்காக துப்பாக்கிச் சூடு நடத்திய சிறை அதிகாரிக்கு, கைதிகளிடமிருந்து மரண அச்சுறுத்தல்கள் வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் , அவரது பாதுகாப்பை உறுதி செய்ய சிறைத்துறை தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்தபோதிலும், அந்த அதிகாரி அவசரகால சூழ்நிலையின்போது பணிக்கு திரும்பியுள்ளதாகவும் சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கிடையே கலவரத்தைத் திட்டமிட்டதாகக் கூறப்படும் “கட்டுவெல்லகம சுரேஷ்” என […]

உலகம்

சீனாவில் காலணி தொழிற்சாலையில் பாரிய தீ விபத்து – 28 பேர் உயிரிழப்பு

  • July 9, 2026
  • 0 Comments

சீனாவின் தென்கிழக்கு நகரமான ஜின்ஜியாங்கில் (Jinjiang) உள்ள காலணி தொழிற்சாலையொன்றில் இன்று பாரிய தீவிபத்த சம்பவம் பதிவாகியுள்ளது. இதில் குறைந்தது 28 பேர் உயிரிழந்துள்ளதுடன், நூற்றுக்கணக்கானோர் காயமடைந்துள்ளனர். இந்தத் தீ விபத்து “பெரும் உயிரிழப்புகளை” ஏற்படுத்தியுள்ளதாகவும், இதற்குப் பொறுப்பானவர்கள் “கடுமையாகப் பொறுப்பேற்க வேண்டும்” என்றும் அதிபர் ஷி ஜின்பிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் தீவிபத்துக்கான காரணத்தை அறிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஃபுஜியான் (Fujian) மாகாணத்தில் உள்ள ஜின்ஜியாங் (Jinjiang), உலகின் விளையாட்டுக் காலணிகளில் 20 சதவீதத்தை […]