உலகம் செய்தி

பலி தீர்க்கும் முழக்கத்துடன் அலி கமேனியின் உடல் நல்லடக்கம்

திங்கட்கிழமை அன்று டெஹ்ரான் வீதிகளில் 10 கிலோமீட்டர் தூரத்திற்கு நடைபெற்ற பிரம்மாண்ட ஊர்வலத்தில் சுமார் 1.2 கோடி மக்கள் திரண்டனர்.

ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அலி கமேனியின் உடல், நான்கு மாதங்களுக்குப் பிறகு, அந்நாட்டின் மிகவும் புனிதமான ஷியா தர்காவில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி மத்திய டெஹ்ரானில் உள்ள இல்லத்தின் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் அவர் உயிரிழந்திருந்தார்.

அலி கமேனி பிறந்த இடமான மஷாத் (Mashhad) நகரில் அமைந்துள்ள, உலகப் புகழ்பெற்ற ‘இமாம் ரெஸா’ (Imam Reza) புனிதத் தர்காவில் வெள்ளிக்கிழமை அதிகாலை அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டதாக அரசு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த இறுதிச் சடங்கு நெருக்கமானவர்களுடன் தனிப்பட்ட முறையில் நடந்த போதிலும், இதற்கு முன்னதாக ஒரு வார காலமாக நடைபெற்ற பொது ஊர்வலங்களில் சுமார் 1.5 கோடிக்கும் அதிகமான மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

ஈரானிய அதிகாரிகளின் கணக்குப்படி இந்த எண்ணிக்கை இருமடங்காக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

இருப்பினும், இந்த இறுதிச் சடங்குகளில் அலி கமேனியின் மகனும், அவரது அடுத்த வாரிசுமான மொஜ்தாபா (Mojtaba) கலந்துகொள்ளவில்லை.

பெப்ரவரி 28 தாக்குதலுக்குப் பிறகு அவர் இதுவரை பொதுவெளியில் எங்கும் தோன்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அலி கமேனியின் இறுதிச் சடங்குகள் கடந்த மார்ச் மாதமே நடைபெறவிருந்த நிலையில், அமெரிக்கா-இஸ்ரேல் உடனான போர் காரணமாக அது ஒத்திவைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, கடந்த சனிக்கிழமை டெஹ்ரானில் உள்ள பிரம்மாண்ட மொசல்லா (Grand Mosalla) வளாகத்தில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டதுடன் அதிகாரப்பூர்வ இறுதிச் சடங்குகள் தொடங்கின.

இதில் ஈரானின் பிராந்திய நட்பு அமைப்புகளான ஹமாஸ், இஸ்லாமிக் ஜிஹாத், ஹிஸ்புல்லா மற்றும் ஹூதி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

திங்கட்கிழமை அன்று டெஹ்ரான் வீதிகளில் 10 கிலோமீட்டர் தூரத்திற்கு நடைபெற்ற பிரம்மாண்ட ஊர்வலத்தில் சுமார் 1.2 கோடி மக்கள் திரண்டனர்.

தொடர்ந்து கியூம் (Qom) நகருக்கும், பின்னர் ஈராக்கில் உள்ள ஷியாக்களின் புனித நகரங்களான நஜாஃப் (Najaf) மற்றும் கர்பலா (Karbala) ஆகியவற்றிற்கும் அவரது உடல் கொண்டு செல்லப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

இறுதியாக வியாழக்கிழமை மஷாத் நகரை வந்தடைந்த கமேனியின் உடலுடன், தாக்குதலில் உயிரிழந்த அவரது குடும்பத்தினர் நால்வரின் உடல்களும் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டன.

கருப்பு உடை அணிந்து வந்திருந்த லட்சக்கணக்கான ஈரானிய மக்கள், அலி கமேனியின் படுகொலைக்குக் காரணமான அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு (Donald Trump) எதிராகப் பழிவாங்கும் முழக்கங்களை எழுப்பினர்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி