இலங்கை

மியன்மார் கடற்கரைக்கு அருகே சுமார் 500 பேர் வரை உயிரிழந்திருக்கலாம்

சமீபத்திய நாட்களில் மியான்மர் கடற்கரைக்கு அருகே 500க்கும் மேற்பட்டோரை ஏற்றிச் சென்ற இரண்டு படகுகள் கவிழ்ந்திருக்கலாம் என ஐ.நா. அமைப்பு இன்று தெரிவித்துள்ளது.

போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் பாதுகாப்பான புகலிடம் தேடி ஐரோப்பிய நாடுகளை நோக்கி இடம்பெயர்கின்றனர்.

அவ்வாறு இடம்பெற்ற விபத்துக்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையே இவ்வாறு அதிகரித்துள்ளது.

முதற்கட்ட தகவல்களின்படி, இந்த இரண்டு படகுகளும் ஜூன் மாத இறுதியில் மியான்மரின் ரகைன் மாநிலத்திலிருந்து புறப்பட்டன.

இவற்றில் பெரும்பாலும் ரோஹிங்கியா பயணிகள் பயணம் செய்ததாகவும், அவர்களில் சிலர் வங்காளதேசத்தின் காக்ஸ் பஜாரில் உள்ள அகதிகள் முகாம்களிலிருந்து வந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.

மேலும், 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுவதாகவும் ஐ.நா அமைப்பு வெளியிட்டள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்