நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது. அரசியல் இலங்கை செய்தி

நீதி அமைச்சருக்கு எதிராக பிரேரணை: எதிரணிகள் வியூகம்

  • July 10, 2026
  • 0 Comments

நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்காரவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படவுள்ளது. நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவத்தை அடிப்படையாகக்கொண்டே அவருக்கு எதிராக பிரேரணை முன்வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. பிரேரணையில் கையொப்பம் திரட்டும் நடவடிக்கை இன்று ஆரம்பமானது. இதற்கிணங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையில்லாப் பிரேரணையில் இன்று கையெழுத்திட்டனர்.

இலங்கை முழுவதும் 500 தேயிலை கிராமங்களை நிறுவுவதை இலக்காகக் கொண்ட “சிலோன் தேயிலைக் கிராமம்” வேலைத்திட்டம் எதிர்வரும் 15 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார். செய்தி

ஏற்றுமதி வருமானத்தை அதிகரிக்க 500 தேயிலை கிராமங்களை உருவாக்குகிறது இலங்கை

  • July 10, 2026
  • 0 Comments

இலங்கை முழுவதும் 500 தேயிலை கிராமங்களை நிறுவுவதை இலக்காகக் கொண்ட “சிலோன் தேயிலைக் கிராமம்” வேலைத்திட்டம் எதிர்வரும் 15 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது: “பெருந்தோட்ட அமைச்சு, தேயிலை சபை உள்ளிட்ட நிறுவனங்கள் இணைந்து நாடு முழுவதும் 500 தேயிலை கிராமங்களை நிறுவுவதை இத்திட்டம் நோக்கமாகக் […]

பிரிஸ்டலில் நேற்று நடந்த போட்டியில், 37 பந்துகள் மீதமிருந்த நிலையிலேயே இலக்கை எட்டி அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, T 20 தொடர்களில் இந்தியாவிற்கு எதிராகத் தனது முதலாவது தொடர் வெற்றியைப் பதிவு செய்து சாதனை படைத்துள்ளது. செய்தி விளையாட்டு

இந்தியாவை வீழ்த்தி வரலாறு படைத்தது இங்கிலாந்து

  • July 10, 2026
  • 0 Comments

பிரிஸ்டலில் நேற்று நடந்த போட்டியில், 37 பந்துகள் மீதமிருந்த நிலையிலேயே இலக்கை எட்டி அபார வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, T 20 தொடர்களில் இந்தியாவிற்கு எதிராகத் தனது முதலாவது தொடர் வெற்றியைப் பதிவு செய்து சாதனை படைத்துள்ளது. 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 158 ஓட்டங்களை இந்தியா அணி பெற்றிருந்தது. எனினும், ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 13.5 ஓவர்களில் இலக்கை அடைந்து 9 விக்கெட்டுகளால் இங்கிலாந்து அணி நேற்றைய ஆட்டத்தில் வெற்றிபெற்றது. தற்போது […]

உலகம்

அணுசக்திப் படையை வலுப்படுத்த பியோங்யாங் உறுதி

  • July 10, 2026
  • 0 Comments

வடகொரியா தனது அணுசக்திப் படையை “தரத்திலும் அளவிலும்” வலுப்படுத்தவும், தனது உளவுத்துறையின் பங்கை விரிவுபடுத்தவும் உறுதியளித்துள்ளது. நேற்று நடைபெற்ற தொழிலாளர் கட்சியின் மத்திய இராணுவ ஆணையத்தின் கூட்டத்தில், இது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கொரிய மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அத்துடன் இந்த கூட்டத்தில், நாட்டின் ஆயுதப் படைகளை நவீனமயமாக்குவதற்கான திட்டங்கள் குறித்து பரிசீலிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. கூட்டத்தை தொடர்ந்து கருத்து வெளியிட்ட ஜனாதிபதி கிம் ஜொங் உன், ஒரு வலிமையான இராணுவத்தால் மட்டுமே “உண்மையான அமைதிக்கு” உத்தரவாதம் […]

வியாழக்கிழமை வேட்புமனுத் தாக்கல் தொடங்கியதில் இருந்து, பர்ன்ஹாமின் இந்தத் தலைமைப் பதவிக்கான முயற்சிக்கு 322 லேபர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். தற்போது இப்போட்டியில் அறிவிக்கப்பட்ட ஒரே வேட்பாளராக அவர் நீடிக்கிறார். ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

லேபர் கட்சி எம்.பிக்களின் அமோக ஆதரவுடன் பிரதமராகிறார் Andy Burnham

  • July 10, 2026
  • 0 Comments

லேபர் கட்சியின் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்கள், தமது கட்சி தலைவராகவும், நாட்டின் அடுத்த பிரதமராகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆண்டி பர்ன்ஹாமின் Andy Burnham பெயரை முன்மொழிந்துள்ளனர். வியாழக்கிழமை வேட்புமனுத் தாக்கல் தொடங்கியதில் இருந்து, பர்ன்ஹாமின் இந்தத் தலைமைப் பதவிக்கான முயற்சிக்கு 322 லேபர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். தற்போது இப்போட்டியில் அறிவிக்கப்பட்ட ஒரே வேட்பாளராக அவர் நீடிக்கிறார். மற்றொரு போட்டியாளர் அவருக்கு எதிராக களம் இறங்குவதை கணித ரீதியாக முற்றிலும் சாத்தியமற்றதாக்க இன்னும் ஒரே […]

உலகம்

03ஆவது நாளாக தொடரும் தாக்குதல் -ஈரானின் அணுமின் நிலையம் அருகே குண்டுவீச்சு

  • July 10, 2026
  • 0 Comments

ஈரானில் அணுமின் நிலையம் அருகே அமெரிக்கா குண்டுவீசி தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரானுக்கும் – அமெரிக்காவுக்கும்  இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் சீர்குலைந்துள்ள நிலையில், இன்று மூன்றாவது நாளாகவும் தாக்குதல் தொடர்கிறது. இதன்படி நேற்று இரவு  ஈரானின் பந்தர் அப்பாஸ், சபாஹர் உள்ளிட்ட துறைமுக நகரங்கள் மீது அமெரிக்கா வான்வழித் தாக்குதல் நடத்தியுள்ளது. இதற்கு பதலடி கொடுக்கும் வகையில் ஈரானும்  பஹ்ரைன், குவைத்தில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீது தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. தங்கள் நாட்டை நோக்கி வந்த ட்ரோன், ஏவுகணைகளை […]

ஆஸ்திரேலிய கடல் பறவையொன்றுக்கு முதன்முறையாக H5 ரக பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியா உலகம் செய்தி

உள்ளூர் பறவைக்கும் ஆஸ்திரேலியாவில் H5 வைரஸ் தொற்று

  • July 10, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலிய கடல் பறவையொன்றுக்கு முதன்முறையாக H5 ரக பறவைக் காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை, ஆஸ்திரேலியாவில் உறுதி செய்யப்பட்ட பறவைக் காய்ச்சல் சம்பவங்கள் அனைத்தும், துணை அண்டார்டிக் (sub-Antarctic) பிராந்தியத்தில் இருந்து பறந்து வந்த புலம்பெயர்ந்த பறவைகளிலேயே கண்டறியப்பட்டன. தென்கிழக்கு தெற்கு ஆஸ்திரேலியாவில் உள்ள ‘ரோப்’ (Robe) என்ற நகரில் கண்டறியப்பட்ட பறவை ஒன்றில் இந்த வைரஸ் தொற்று இருப்பதை ஆய்வக சோதனைகள் உறுதிப்படுத்தியுள்ளதாக விவசாயத்துறை அமைச்சர் ஜூலி காலின்ஸ் (Julie Collins) தெரிவித்துள்ளார். தெற்கு ஆஸ்திரேலியாவில் மேலும் […]

நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம்: வெளியானது பிரேத பரிசோதனை அறிக்கை இலங்கை செய்தி

நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம்: வெளியானது பிரேத பரிசோதனை அறிக்கை

  • July 10, 2026
  • 0 Comments

நீர்கொழும்பு சிறையில் நடந்த வன்முறையின் போது கொல்லப்பட்டவர்களில் 14 பேர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களால் உயிரிழந்துள்ளனர் என பிரேத பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மருத்துவர் சுஜீவ விக்ரமசிங்க தலைமையிலான மூத்த நீதித்துறை மருத்துவ அதிகாரிகளைக் கொண்ட ஐந்து பேர் கொண்ட குழுவினால் நீர்கொழும்பு மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட 28 பேரின் உடல்களில், 24 உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 24 பேரின் மரணங்களில் 14 பேரின் மரணங்கள் துப்பாக்கிக் காயங்களாலும், ஒன்பது […]

கருத்து & பகுப்பாய்வு

ஒரு மணிநேரத்தில் 112 புதிய கோடீஸ்வரர்கள் : 2025 ஆம் ஆண்டில் புதிய கோடீஸ்வரர்களின் பட்டியல்

  • July 10, 2026
  • 0 Comments

2025 ஆம் ஆண்டில் உலகில் கிட்டத்தட்ட 10 இலட்சம் புதிய பணக்காரர்கள் உருவாகியுள்ளதாக யுபிஎஸ் (UBS) நிறுவணத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன. இது ஒரு நாளைக்கு 2,680-க்கும் மேற்பட்ட புதிய கோடீஸ்வரர்கள் உருவாகுவதையும், , ஒரு மணி நேரத்திற்கு 112 பேர் அல்லது ஒவ்வொரு நிமிடத்திற்கும் கிட்டத்தட்ட இரண்டு பேர் உருவாகுவதை குறிப்பதாகவும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ள தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வளர்ச்சியின் பெறும்பகுதி குறிப்பாக ஐரோப்பிய நாடுகளில் இருந்து உருவாகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதில், இங்கிலாந்தில் ஒரு நாளைக்கு சராசரியாக […]

ஐரோப்பா

கிரீஸில் பயிற்சியில் ஈடுபட்ட விமானம் கீழே விழுந்து விபத்து

  • July 10, 2026
  • 0 Comments

கிரீஸில் உள்ள ஜாகிந்தோஸ் (Zakynthos) விமான நிலையத்தில்,  நேற்றைய தினம் F-16 ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகி தீப்பிடித்து எரிந்துள்ளது. விமானி அதில் இருந்து குதித்து உயிர் தப்பியுள்ளார். அவர் தற்போது நலமாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளனர். பயிற்சிப் பறப்பில் ஈடுபட்டிருந்த அந்த விமானம் தொழில்நுட்ப கோளாறால் விபத்தில் சிக்கியிருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவத்திற்கான காரணங்கள் குறித்து தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.