திருகோணமலை வைத்தியசாலையில் பெண் ஊழியர் ஹொரோயின் போதைப் பொருளுடன் கைது இலங்கை செய்தி

திருகோணமலை வைத்தியசாலையில் பெண் ஊழியர் ஹொரோயின் போதைப் பொருளுடன் கைது

  • July 11, 2026
  • 0 Comments

திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடமையாற்றி வந்த சுத்திகரிப்பு பெண் ஊழியரொருவர் ஹொரோயின் போதைப் பொருளை விற்பனைக்காக தம் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். திருகோணமலை போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக குறித்த சுத்திகரிப்பு பிரிவில் கடமையாற்றி வந்த ஊழியரை சோதனை இட்டபோது அவரிடம் இருந்து 36 கிரேம் 180 மில்லி கிரேம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது. திருகோணமலை என்சி வீதியில் வசித்து வந்த குறித்த […]

உலகக் கோப்பைத் தொடரிலிருந்து கொலம்பியா அணி வெளியேறியதைத் தொடர்ந்து, அந்த அணியின் வீரர் ஜமிண்டன் காம்பாஸிற்கு கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு கால்பந்து கூட்டமைப்பு தெரிவித்து, இந்த மிரட்டல்களுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. செய்தி விளையாட்டு

உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேற்றம்: கொலம்பியா வீரருக்கு மரண அச்சுறுத்தல்

  • July 11, 2026
  • 0 Comments

உலகக் கோப்பைத் தொடரிலிருந்து கொலம்பியா அணி வெளியேறியதைத் தொடர்ந்து, அந்த அணியின் வீரர் ஜமிண்டன் காம்பாஸிற்கு கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு கால்பந்து கூட்டமைப்பு தெரிவித்து, இந்த மிரட்டல்களுக்குக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. “விளையாட்டு அரங்கில் தங்கள் நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்காக எந்தவொரு வீரரோ அல்லது அவர்களது நெருங்கிய வட்டத்தில் உள்ள எவருமே அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்படக் கூடாது,” என்று கொலம்பியா கால்பந்து கூட்டமைப்பு (FCF தெரிவித்துள்ளது. 16-வது சுற்று ஆட்டத்தில் (round of 16) சுவிட்சர்லாந்திடம் பெனால்டி ஷூட்-அவுட் […]

ஸ்பெயின் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று உலகக் கோப்பை அரையிறுதிக்கு முன்னேறியது. செய்தி விளையாட்டு

பெல்ஜியத்தை வீழ்த்தி அரையிறுதிக்குள் நுழைந்தது ஸ்பெயின்

  • July 11, 2026
  • 0 Comments

ஸ்பெயின் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று உலகக் கோப்பை அரையிறுதிக்கு முன்னேறியது. போட்டியின் 88-வது நிமிடத்தில், பெல்ஜியம் அணியின் மாற்று இலக்குக் காவலர் (goalkeeper) சென்னே லாம்மென்ஸ் தடுத்தாடிய பந்தை மீட்டு, மைக்கேல் மெரினோ ஸ்பெயினின் வெற்றி கோலை அடித்தார். ஸ்பெயின் அணிக்காகத் தொடர்ந்து இரண்டாவது போட்டியிலும் மெரினோ கடைசி நேர நாயகனாக உருவெடுத்துள்ளார். இதன் மூலம், டல்லாஸில் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ள அரையிறுதிப் போட்டியில், இந்தத் தொடரின் விருப்பமான அணியாகக் கருதப்படும் பிரான்ஸை […]

ஐரோப்பா

பிரான்ஸில் 09 மாகாணங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!

  • July 11, 2026
  • 0 Comments

பிரான்ஸில் அடுத்த வாரம் கடுமையான வெப்ப அலை நீடிக்கும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் அரசாங்கம் “ஓர்செக் தீவிர வெப்பத் திட்டத்தை” செயல்படுத்தும் என நேற்று அறிவித்துள்ளது. குறிப்பாக சிவப்பு எச்சரிக்கையின் கீழ் உள்ள மாகாணங்களுக்கு இந்த வெப்பத் திட்டம் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரான்சின் மேற்குப் பகுதியில் உள்ள ஒன்பது மாகாணங்கள் தீவர வெப்பநிலைக்குரிய சிவப்பு எச்சரிக்கையின் கீழ் வைக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் 72 மாகாணங்கள் ஆரஞ்சு எச்சரிக்கையின் கீழ் உள்ளன என்று தேசிய வானிலை முன்னறிவிப்பாளரான […]

இலங்கை

கந்தளாயில் டிப்பர் – மோட்டார் சைக்கிள் விபத்து: ஒருவர் உயிரிழப்பு

  • July 10, 2026
  • 0 Comments

கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கந்தளாய் போட்டங்காட்டு சந்தியில் களிமண் ஏற்றி வந்த டிப்பர் ரக வாகனம் மோட்டார் சைக்கிளுடன் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று (10) மாலை இடம்பெற்றுள்ளது. பொலிஸாரின் ஆரம்பகட்ட தகவலின்படி, ஜெயந்திபுர பகுதியில் இருந்து பேராறு பகுதியை நோக்கி களிமண் ஏற்றி வந்த டிப்பர் ரக வாகனம், போட்டங்காட்டு சந்தியில் கந்தளாயில் இருந்து வான்எல பகுதியை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளுடன் மோதியுள்ளது. விபத்தின் தாக்கத்தால் மோட்டார் சைக்கிளில் […]

இலங்கை

கொழும்பு – மெகசின் சிறைச்சாலையில் கைதிகளுக்கு இடையில் மோதல்

  • July 10, 2026
  • 0 Comments

கொழும்பு – மெகசின் சிறைச்சாலையில் 5 கைதிகளுக்கு இடையே இன்று மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் இரண்டு கைதிகள் காயமடைந்து தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மோதலுக்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை.  இந்தச் சம்பவம் குறித்து விசாரணை ஆரம்பிக்கபட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகம்

அமெரிக்காவில் வெப்பக் குவிமாடம் – இயல்பை விட அதிகரிக்கும் வெப்பநிலை

  • July 10, 2026
  • 0 Comments

அமெரிக்காவில் இந்த வாரத்தின் தொடக்கத்தில் இருந்து வெப்பநிலை இயல்பை விட 15 முதல் 25 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகரிக்கும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் வடக்கு சமவெளிகளில் நிலைபெறும் இந்த உயர் அழுத்த அமைப்பு, வெப்பக் காற்றை உள்ளே தக்கவைத்து, குளிர்விக்கும் காற்றைத் தடுக்கும். இதன் விளைவாக, நெவாடா, உட்டா மற்றும் மொன்டானா போன்ற மாநிலங்களில் சாதனை அளவிலான மூன்று இலக்க உச்ச வெப்பநிலை பதிவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வெப்பநிலை குறிப்பிட்ட சுகாதார அபாயத்தை ஏற்படுத்தும் […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் தஞ்சம் கோருவதற்கான உரிமை : லண்டன் உயர்  நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

  • July 10, 2026
  • 0 Comments

பிரித்தானிய  உள்துறை அமைச்சகம் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாடு கடத்தப்படும் அபாயத்தை எதிர்நோக்குபவர்கள்  தஞ்சம் கோருவதற்கான உரிமையை இரத்து செய்தது. பிரான்ஸுடன் மேற்கொள்ளப்பட்ட One in – One out ஒப்பந்தம் தோல்வியடைந்ததை தொடர்ந்து இந்த புதிய திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் அரசாங்கத்தின் இந்த செயற்பாடு சட்டவிரோதமானது என  லண்டன் உயர்  நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது. நீதிபதி கிளைவ் ஷெல்டன், 2025-ஆம் ஆண்டில், ஆரம்பத்தில் ஆட்கடத்தலால் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல என்று கருதப்பட்டவர்களில் 79 சதவீதமானோர் மறுபரிசீலனையில் […]

மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக ஈரானுடன் கையெழுத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்டது என்றும், இனி தெஹ்ரானுடன் எவ்வித தொடர்பையும் வைத்துக்கொள்ள தான் விரும்பவில்லை என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப புதன்கிழமை (ஜூலை 08) தெரிவித்துள்ளார். உலகம் செய்தி

பேச்சுகளை தொடருமாறு ஈரான் கோரிக்கை: ட்ரம்ப் தகவல்

  • July 10, 2026
  • 0 Comments

ஈரான் தரப்பில் விடுக்கப்பட்ட கோரிக்கையை அடுத்து, அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். எனினும், இரு நாடுகளுக்கும் இடையிலான போர்நிறுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது என்றும் அவர் கூறியுள்ளார். பாகிஸ்தான் மற்றும் கத்தாரின் மத்தியஸ்தத்துடன், அமெரிக்கா மற்றும் ஈரானுக்கு இடையில் தற்காலிக போர்நிறுத்தம் ஏற்படுத்தப்பட்டிருந்தது. பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காக 60 நாட்கள் போரை நிறுத்த இரு தரப்புகளும் இணங்கியிருந்தன. இந்நிலையிலேயே, அமெரிக்கா கடந்த 7ஆம்திகதி ஈரான் மீது திடீர் தாக்குதலை நடத்தியது. இவ்வாறானதொரு பின்னணியில்தான், […]

உலகம்

கத்தார் பரிசளித்த சொகுசு விமானத்தால் ட்ரம்புக்கு ஆபத்து?

  • July 10, 2026
  • 0 Comments

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கு கத்தார் பரிசளித்த விமானத்தினால் ஆபத்து ஏற்படலாம் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். குறித்த விமானத்தில் மேம்பட்ட ஏவுகணை எதிர்ப்புத் திறன்கள் இல்லாமல் இருக்கலாம் என்றும், அதனை திருத்தி அமைக்க சுமார் 01 பில்லியன் டொலர் செலவாகும் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில் குறித்த விமானத்தை அமெரிக்காவிற்கு வெளியே இயக்குவது பாதுகாப்பு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அத்துடன்  குறித்த விமானத்தை அனைத்து வித பாதுகாப்புடனும் சீரமைக்க  ஓராண்டு கால மறுசீரமைப்புப் […]