இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கிடையில் பாதுகாப்பு, சுற்றுலா உட்பட துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. இந்தியா செய்தி

இந்தியா, நியூசிலாந்துக்கிடையில் 5 ஒப்பந்தங்கள் கைச்சாத்து

  • July 11, 2026
  • 0 Comments

இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கிடையில் பாதுகாப்பு, சுற்றுலா உட்பட துறைகளில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. பிரதமர் நரேந்திர மோடி, நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சன் ஆகியோர் முன்னிலையில் இதற்குரிய நிகழ்வு இடம்பெற்றது. நியூசிலாந்து சென்ற பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் லக்சன் இடையே தூதுக்குழு அளவிலான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. இதையடுத்து, பாதுகாப்பு, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளம், சுற்றுலா, விளையாட்டு, பேரிடர் மேலாண்மை ஆகிய ஐந்து துறைகளில் முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இந்தோ […]

நேட்டோ உச்சிமாநாடு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் இராணுவக் கூட்டணிகளை வலுப்படுத்துவதாகவும், ஆயுதப் பெருக்கத்தை தீவிரப்படுத்துவதாகவும் வடகொரியா சனிக்கிழமை கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

நேட்டோ நாடுகளுக்கு வடகொரியா நேரடி எச்சரிக்கை

  • July 11, 2026
  • 0 Comments

நேட்டோ உச்சிமாநாடு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் இராணுவக் கூட்டணிகளை வலுப்படுத்துவதாகவும், ஆயுதப் பெருக்கத்தை தீவிரப்படுத்துவதாகவும் வடகொரியா சனிக்கிழமை கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளது. வடகொரியாவின் நியாயமான இறையாண்மை உரிமைகளை நேட்டோ தலைவர்கள் ஒரு அச்சுறுத்தலாக சித்தரிப்பதாக, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கை வடகொரியாவின் உத்தியோகபூர்வ அரச ஊடகமான KCNA-வில் வெளியாகியுள்ளது. ஆயுதங்களுக்கான செலவினங்களை அதிகரிப்பதன் மூலமும், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் உள்ள நட்பு நாடுகளுடன் நெருக்கமான இராணுவ ஒத்துழைப்பை மேற்கொள்வதன் […]

ஐரோப்பா

பயோமெட்ரிக் எல்லை சோதனை முறையை நிறுத்திவைக்குமாறு 09 நாடுகள் வலியுறுத்தல்

  • July 11, 2026
  • 0 Comments

ஐரோப்பிய நாடுகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய நுழைவு/வெளியேறுதல் அமைப்பு (EES) எல்லைச் சோதனைகளை நிறுத்தி வைப்பதற்கான   தற்காலிக நெகிழ்வுத்தன்மையை நீட்டிக்க வேண்டும் என்று ஒன்பது ஐரோப்பிய நாடுகள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன. பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், இத்தாலி, மால்டா, நெதர்லாந்து, போர்ச்சுகல் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் இணைந்த கூட்டு கடிதம் ஒன்றை ஐரோப்பிய ஒன்றியத்திடம் சமர்ப்பித்துள்ளன. குறித்த கடிதத்தில் வரும் செப்டம்பர் மாதம் 06 ஆம் திகதிக்கு பின்பும் இந்த நெகிழ்வு தன்மை நீட்டிக்கப்பட வேண்டும் என […]

மாகாண சபை தேர்தல்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி, டித்வா பேரிடர் நிவாரணத்துக்காக பயன்படுத்தப்படவில்லை என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். அரசியல் இலங்கை செய்தி

மாகாணசபைத் தேர்தலுக்குரிய நிதி நிவாரணத்துக்காக பயன்படுத்தப்பட்டதா?

  • July 11, 2026
  • 0 Comments

மாகாண சபை தேர்தல்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதி, டித்வா பேரிடர் நிவாரணத்துக்காக பயன்படுத்தப்படவில்லை என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “ டித்வா பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் சேதமடைந்த உள்கட்டமைப்புகளை மறுசீரமைப்பதற்காக கொடையாளர்களால் வழங்கப்பட்ட நிதி தனிப்பட்ட கணக்கில் வைப்பிலிடப்படவில்லை. சட்டவிரோதமான கணக்கிலும் வைப்பிலிடப்படவில்லை. அனைத்து நிதி உதவிகளும், திறைசேரியின் பிரதிச் செயலாளரின் மேற்பார்வையின் கீழ் பராமரிக்கப்படும் ஒரு சிறப்பு கணக்கு ஊடாகவே கையாளப்படும். எனவே, […]

நீர்கொழும்பு சிறைச்சாலை கலவரம்: வெளியானது பிரேத பரிசோதனை அறிக்கை இலங்கை செய்தி

சிறைச்சாலை வன்முறை: உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு

  • July 11, 2026
  • 0 Comments

நீர்கொழும்பு சிறையிலிருந்து பிற தடுப்புக்காவல் நிலையங்களுக்கு மாற்றப்பட்ட கைதிகளின் மரணங்கள் குறித்து உடனடி விசாரணை நடத்த வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் சபை உள்ளிட்ட சர்வதேச அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. 31 உயிர்களை பலியெடுத்த சிறை வன்முறையின் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி மனித உரிமை ஆர்வலர்கள் தொடர்ந்து போராடி வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. நீர்கொழும்பு சிறையில் நடந்த வன்முறையிலிருந்து உயிர்பிழைத்த கைதிகள் சித்திரவதை செய்யப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை விசாரிக்க வெலிக்கடை சிறைக்குள் […]

இலங்கை

இலங்கையில் இருந்து புறப்பட்ட விமானம் மீது பறவை மோதியதால் பரபரப்பு

  • July 11, 2026
  • 0 Comments

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து (BIA)  இன்று காலை புறப்பட்டு இஸ்தான்புல்லுக்கு சென்றுக்கொண்டிருந்த விமானம் அவசர தரையிறக்கத்தை அறிவித்துள்ளது. குறித்த விமானத்தின்மீது பறவை மோதியதன் காரணமாக அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது எரிபொருளை நிறைவு செய்யும் வகையில் நீர்கொழும்புக்கு அருகில் உள்ள கடற்பகுதியில் குறித்த விமானம் வட்டமடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விமானத்தில் 240இற்கும் மேற்பட்ட பயணிகள் இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பா

1000 ஆண்டுகள் பழைமையான பேயக்ஸ் திரைச்சீலை பிரித்தானியாவில்

  • July 11, 2026
  • 0 Comments

பேயக்ஸ் (Bayeux) திரைச்சீலை நேற்றைய தினம் பிரித்தானியாவிற்கு கையளிக்கப்பட்டுள்ளது. இதற்காக பிரித்தானியா பிரான்ஸ் அரசாங்கத்திற்கு நன்றிக்கூறியுள்ளது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்தக் கலைப்படைப்பு, பிரான்சில் உள்ள ஒரு ரகசிய இடத்திலிருந்து, அதி உச்ச பாதுகாப்புடன் குளிரூட்டப்பட்ட சரக்கு வாகனம் மூலம்  பிரித்தானியாவிற்கு கொண்டுவரப்பட்டது. பிரித்தானிய அருங்காட்சியகம், டோவரின் வெள்ளைப் பாறைகளின் மீது ‘மெர்சி’ (நன்றி) என்ற வார்த்தையுடன் கூடிய அதன் பிம்பத்தை ஒளிபரப்பி அந்தத் திரைச்சீலையை வரவேற்றது. 1066-ஆம் ஆண்டின் நார்மன் (Norman) படையெடுப்பைச் சித்தரிக்கும் இந்தத் […]

ஐரோப்பா

உலக அரங்கில் தனிமைப்படுத்தப்பட்டதா ஜோர்ஜியா? புறக்கணித்த நேட்டோ நாடுகள்

  • July 11, 2026
  • 0 Comments

துருக்கியில் நடைபெற்ற நேட்டோ உச்சிமாநாட்டிற்கு  ஜோர்ஜிய அரசாங்கம் அழைக்கப்படாததால் அந்நாடு சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கூட்டணியின் நிகழ்ச்சி நிரலிலிருந்து ஒரு முக்கிய கூட்டாளி நாடு விலக்கப்படுவது இதுவே முதல் முறையாகும். முந்தைய உச்சிமாநாடுகளைப் போலவே, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான், தென் கொரியா, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நேட்டோ கூட்டாளி நாடுகளும், உக்ரைனும் பிராந்தியப் பாதுகாப்பில் கவனம் செலுத்தும் நிகழ்வுகளில் கலந்துகொள்ள அங்காராவிற்கு அழைக்கப்பட்டன. ஆனால், முதல் முறையாக, நேட்டோவின் முன்னாள் […]

தான் படுகொலை செய்யப்படும் பட்சத்தில், ஈரான் மீதான குண்டுவீச்சுத் தாக்குதல்களைப் பல மடங்கு தீவிரப்படுத்துவதற்கான அறிவுறுத்தல்களைத் தான் விட்டுச் சென்றுள்ளதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். உலகம் செய்தி முக்கிய செய்திகள்

ஈரானுக்கு டொனால்ட் டிரம்ப் விடுத்துள்ள மரண வாக்குமூல எச்சரிக்கை

  • July 11, 2026
  • 0 Comments

தான் படுகொலை செய்யப்படும் பட்சத்தில், ஈரான் மீதான குண்டுவீச்சுத் தாக்குதல்களைப் பல மடங்கு தீவிரப்படுத்துவதற்கான அறிவுறுத்தல்களைத் தான் விட்டுச் சென்றுள்ளதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். தன்னைக் கொலை செய்ய ஈரான் சதித் திட்டம் தீட்டி வருவதாக இஸ்ரேல் தன்னிடம் எச்சரித்ததாக வெளியான செய்திகளுக்குப் பிறகு, ‘நியூயார்க் போஸ்ட்’ நாளிதழுக்கு அளித்த பேட்டியின் போதே டிரம்ப் இதனைத் தெரிவித்தார். “நான் நீண்ட காலமாகவே அவர்களின் இலக்குப்பட்டியலில் இருந்து வருகிறேன்,” என்று டிரம்ப் கூறினார். “ஒரே ஒரு விஷயம் என்னவென்றால், […]

திருகோணமலை வைத்தியசாலையில் பெண் ஊழியர் ஹொரோயின் போதைப் பொருளுடன் கைது இலங்கை செய்தி

திருகோணமலை வைத்தியசாலையில் பெண் ஊழியர் ஹொரோயின் போதைப் பொருளுடன் கைது

  • July 11, 2026
  • 0 Comments

திருகோணமலை பொது வைத்தியசாலையில் கடமையாற்றி வந்த சுத்திகரிப்பு பெண் ஊழியரொருவர் ஹொரோயின் போதைப் பொருளை விற்பனைக்காக தம் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். திருகோணமலை போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக குறித்த சுத்திகரிப்பு பிரிவில் கடமையாற்றி வந்த ஊழியரை சோதனை இட்டபோது அவரிடம் இருந்து 36 கிரேம் 180 மில்லி கிரேம் ஹெரோயின் போதைப் பொருள் கைப்பற்றப்பட்டதாகவும் தெரிய வந்துள்ளது. திருகோணமலை என்சி வீதியில் வசித்து வந்த குறித்த […]