ஐரோப்பா

பயோமெட்ரிக் எல்லை சோதனை முறையை நிறுத்திவைக்குமாறு 09 நாடுகள் வலியுறுத்தல்

ஐரோப்பிய நாடுகளில் அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய நுழைவு/வெளியேறுதல் அமைப்பு (EES) எல்லைச் சோதனைகளை நிறுத்தி வைப்பதற்கான   தற்காலிக நெகிழ்வுத்தன்மையை நீட்டிக்க வேண்டும் என்று ஒன்பது ஐரோப்பிய நாடுகள் கூட்டாக வலியுறுத்தியுள்ளன.

பெல்ஜியம், பிரான்ஸ், ஜெர்மனி, கிரீஸ், இத்தாலி, மால்டா, நெதர்லாந்து, போர்ச்சுகல் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகள் இணைந்த கூட்டு கடிதம் ஒன்றை ஐரோப்பிய ஒன்றியத்திடம் சமர்ப்பித்துள்ளன.

குறித்த கடிதத்தில் வரும் செப்டம்பர் மாதம் 06 ஆம் திகதிக்கு பின்பும் இந்த நெகிழ்வு தன்மை நீட்டிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

பல விமான நிறுவனங்களின் தலைவர்கள் இந்த புதிய பயோமெட்ரிக் எல்லை சோதனை அமைப்பு நீண்ட தாமதத்தை ஏற்படுத்துவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

விமான நிறுவனங்களில் ஏற்படும் காலதாமதத்தால் பயணிகள் விமானங்களை தவறவிடும் துர்பாக்கிய சம்பவங்களும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்