அரையிறுதியில் இங்கிலாந்துடன் மோதுகிறது அர்ஜென்டினா
நடப்பு உலக சாம்பியனான அர்ஜென்டினா அணி, சுவிட்சர்லாந்து அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. கூடுதல் நேரத்தில் ஜூலியன் அல்வாரெஸ் அடித்த அசாத்தியமான லாங்-ரேஞ்ச் (long-range) கோல் அர்ஜென்டினாவின் வெற்றியை உறுதி செய்தது. இதன் மூலம், அட்லாண்டா மைதானத்தில் புதன்கிழமை நடைபெறவுள்ள அரையிறுதிப் போட்டியில் அர்ஜென்டினா அணி இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. கான்சாஸ் சிட்டி மைதானத்தில் ச நடைபெற்ற இப்போட்டியின் 10-வது நிமிடத்திலேயே, லியோனல் மெஸ்ஸி கொடுத்த கிராஸை (cross) அலெக்சிஸ் மேக் அலிஸ்டர் […]













