27 ஆண்டுகள் கால்நடையாக உலகைச் சுற்றி வந்த பிரித்தானிய நாட்டுவதற்கு ஏற்பட்ட தடை
57 வயதான முன்னாள் பிரித்தானிய வான்குடை வீரரான கார்ல் புஷ்பி, 1998-ல் சிலியிலிருந்து தனது சொந்த ஊரான ஹல்லுக்கு கால்நடையாகப் புறப்பட்டார்.
அவர் தனது 27 ஆண்டுகால உலகப் பயணத்தின் இறுதிக் கட்டத்தில் ஒரு புதிய தடையை எதிர்கொள்கிறார்.
சர்வதேச ஊடக அறிக்கைகளின்படி, கார்ல் புஷ்பி தனது பயணத்தின் போது எந்தவிதமான போக்குவரத்தையும் பயன்படுத்தாத கொள்கையைக் கடைப்பிடித்தார்.
இதன் காரணமாக அவரால் படகு, பயணப்படகு அல்லது கார் போன்றவற்றைப் பயன்படுத்த முடியவில்லை.
இதுவரை, அவர்கள் பெல்ஜியத்தை அடைய ஏறத்தாழ 36,000 மைல்கள் பயணம் செய்துள்ளனர். தற்போது ஆங்கிலக் கால்வாய் (பெருங்கடல்) தான் அவரின் கடைசி முக்கியத் தடையாக உள்ளது.
இங்கிலாந்தை அடைவதற்காக யூரோடன்னல் சேவை சுரங்கப்பாதை வழியாக நடந்து செல்ல அவர் அனுமதி கோரி இருந்தார், ஆனால் ஜூன் மாதம் பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டுக் காரணங்களுக்காக நிர்வாகம் அந்தக் கோரிக்கையை நிராகரித்தது.
அதன்பிறகு, ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடப்பதுதான் அவருக்கு இருக்கும் ஒரே வழியாகத் தெரிகிறது.
ஆனால், பிரான்ஸ் அதிகாரிகளின் கூற்றுப்படி, 2018 ஆம் ஆண்டின் ஓர் ஆணையின்படி, அனுமதி இல்லாமல் நீச்சல் பயணங்கள் மேற்கொள்வது சாத்தியமற்றது என தெரிவித்துள்ளனர்.
மேலும், பிரான்சிலிருந்து ஐக்கிய இராஜ்ஜியத்திற்கு நீந்திச் செல்வதும் அனுமதிக்கப்படவில்லை.
கார்ல் புஷ்பி, இது தொடர்பாக பிரான்ஸ் கடலோரக் காவல்படையுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறியுள்ளார்.
அவர் ஒக்டோபர் மாதம் நீந்த முயற்சி செய்ய விரும்புகிறார், இதற்காக ஒரு துணைப் படகிற்கும் ஏற்பாடு செய்துள்ளார். இந்தப் பயணத்தை 2 முதல் 3 நாட்களில் நிறைவு செய்ய முடியும்.
கிடைத்த தகவல்களின்படி, கார்ல் பிஷப் தனது பயணத்தின் பல்வேறு கட்டங்களுக்கு இடையே ஓய்வெடுத்து வருவதுடன், விசா தொடர்பான விஷயங்களையும் கவனித்து வருகிறார். மேலும், அவர் செப்டம்பர் மாத இறுதிக்குள் பிரான்சுக்கு வந்து சேர்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த விடயம் குறித்து கார்ல் புஷ்பி கூறுகையில், “இந்த நிலைமை குறித்து எனக்குக் கோபம் இல்லை, ஆனால் ஏமாற்றமாக இருக்கிறது.
சுரங்கப்பாதை வழியாக நடப்பதே எனது முதல் முன்னுரிமை என்பதால், யூரோடன்னல் நிர்வாகம் தனது முடிவை மாற்றிக்கொள்ளும் என்று நான் இன்னும் நம்புகிறேன்.”
கார்ல் புஷ்பி இதற்கு முன்னர் அசாதாரணமான நீருக்கடியில் பயணங்களை மேற்கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
2006இல், உறைந்த பெரிங் நீரிணையை கால்நடையாகக் கடந்த முதல் பிரித்தானிய குடிமகன் என்ற பெருமையை அவர் பெற்றார்.
அதே சமயம், 2024இல், ரஷ்யா மற்றும் ஈரான் வழியாகச் செல்வதைத் தவிர்ப்பதற்காக, அவர் காஸ்பியன் கடலை 186 மைல்கள் நீந்திக் கடந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.




