செம்மணி புதைகுழி: சர்வதேச விசாரணைகோரி அறவழிப் போராட்டம்
யாழ்ப்பாணம், செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் படுகொலை செய்யப்பட்டுப் புதைக்கப்பட்டுள்ள உறவுகளுக்கு நீதி கோரி, யாழ்ப்பாணம் மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் அமைதிப் போராட்டம் ஒன்று இன்று வியாழக்கிழமை செம்மணிப் பகுதியில் முன்னெடுக்கப்பட்டது. ஆணைக்குழுவின் தலைவர் அருட்தந்தை அந்தோனிப்பிள்ளை அகஸ்ரினின் ஒழுங்கமைப்பில், அரியாலை புனித யூதா ததேயு திருச்சொரூபம் முன்பாக ஆரம்பமான இந்தப் பேரணி செம்மணி சந்தியைச் சென்றடைந்தது. பேரணியின் நிறைவில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஆணையாளரிடம் கையளிக்கப்படவுள்ள அவசர வேண்டுகோள் […]













