உலகம்

80 பில்லியன் டொலர்கள் தேவை – பென்டகன் கோரிக்கை

  • June 23, 2026
  • 0 Comments

பென்டகன் தனக்கு சுமார் 80 பில்லியன் டொலர்கள் தேவை என்று செனட் உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளது. இதில் பெரும்பகுதி, ஈரானுக்கு எதிரான அமெரிக்கப் போரின் செலவுகளை ஈடுகட்டுவதற்கு செலவிடப்படும் எனக் கூறப்படுகிறது. அதேநேரம் இந்தத் தொகையானது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கோரிவரும்  கணிசமான இராணுவச் செலவின அதிகரிப்புடன் கூடுதலாகச் சேர்க்கப்படுகிறது. இதற்கிடையே வெள்ளை மாளிகையின் மேலாண்மை மற்றும் வரவு செலவுத் திட்ட அலுவலகம் இன்னும் காங்கிரஸிடம் முறையான கோரிக்கையை முன்வைக்கவில்லை எனவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் செய்தி […]

முன்னாள் ஜனாதிபதிகளான மஹிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவர்களின் சகோதரரான பஸில் ராஜபக்ச ஆகியோர் படத்தில் காணப்படுகின்றனர். அரசியல் இலங்கை செய்தி

அதிகாரத்துக்காக எதையும் செய்யும் ராஜபக்சக்கள்

  • June 23, 2026
  • 0 Comments

“அதிகாரத்துக்காக ராஜபக்சக்கள் எதையும் செய்வார்கள். தமது திட்டங்களுக்குத் துணைநிற்கும் தரப்பினரின் பிள்ளைகள் மற்றும் மனைவிகளையும் அவர்கள் தமது நோக்கங்களுக்காகப் பயன்படுத்திக்கொள்வார்கள். சுரேஷ் சலே விடயத்திலும் இதுதான் நடக்கின்றது.” -இவ்வாறு சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு: “குற்றம் இழைத்தவர்கள் தாமாக முன்வந்து உண்மைகளை வெளிப்படுத்தப் போவதில்லை. எனவே, அவர்களிடமிருந்து தகவல்களைச் சட்டப்பூர்வமாகப் பெற்றுக்கொள்வதற்கான வழிமுறைகள் உள்ளன. இது விசாரணை அதிகாரிகளுக்கு நன்கு தெரியும். உலகில் உண்ணாவிரதப் போராட்டத்தில் […]

இலங்கை

மனு தள்ளுபடி – சிறை செல்கிறார் ஞானசார தேரர்!

  • June 23, 2026
  • 0 Comments

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, கொழும்பு நீதவான் நீதிமன்றம் விதித்த சிறைத் தண்டனையை கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று உறுதி செய்தது. தண்டனையிலிருந்து தன்னை விடுவித்துக் கோரி ஞானசார தேரோ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த  நீதிபதி மஞ்சுல திலகரத்ன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். இஸ்லாத்தை அவமதிக்கும் வகையில் சமூக நல்லிணக்கத்தைக் குலைக்கும் ஒரு அறிக்கையை வெளியிட்டதாகக் குற்றம் சாட்டி, ஞானசார தேரோ மீது பொலிஸார் தண்டனைச் […]

கருத்து & பகுப்பாய்வு

இஸ்ரேலில் ஆச்சரியமூட்டும் கணக்கெடுப்பு: 92 வீத பொது மக்கள் போரில் ஈரான் வெற்றி பெற்றதாக கருதுகின்றனர்

  • June 23, 2026
  • 0 Comments

மத்திய கிழக்கில் சமீபத்தில் நடந்த போரும், அதைத் தொடர்ந்து அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே ஏற்பட்ட ஒப்பந்தமும், இஸ்ரேலின் நீண்டகாலப் பாதுகாப்பைப் பலவீனப்படுத்தியுள்ளதாகவும், ஈரானுக்கே அதிக நன்மை அளித்துள்ளதாகப் பெரும்பாலான இஸ்ரேலியர்கள் நம்புவதாக புதிய ஆய்வு ஒன்று வெளிப்படுத்தியுள்ளது. வெளிநாட்டு செய்தி நிறுவனமான AFP-இன் படி, ஜூன் 17 முதல் 20 வரை ஜெருசலேமின் ஹீப்ரு பல்கலைக்கழகம் மற்றும் ஆகம் நிறுவனம் இணைந்து நடத்திய கணக்கெடுப்பில் 3,644 பேர் பங்கேற்றனர். கணக்கெடுப்பு முடிவுகளின்படி, 92.1 சதவீத இஸ்ரேலிய குடிமக்கள், […]

ராய் மோர்கன் நிறுவனத்தின் பகுப்பாய்வின்படி, தற்போதைய சூழலில் தேர்தல் நடந்தால் , இரு கட்சிகளுக்கு இடையிலான விருப்பத் தேர்வின் அடிப்படையில் தொழிற் கட்சிக்கு 51 சதவீதமும், ஒன் நேஷன் கட்சிக்கு 49 சதவீதமும் ஆதரவு கிடைக்க வாய்ப்புள்ளது. ஆஸ்திரேலியா உலகம் செய்தி

பிரித்தானிய பிரதமரையடுத்து ஆஸ்திரேலிய பிரதமருக்கும் அரசியல் நெருக்கடி

  • June 23, 2026
  • 0 Comments

பிரித்தானிய பிரதமரைப் போல ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானிஸும் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று One Nation கட்சி தலைவர் Pauline Hanson வலியுறுத்தியுள்ளார். ஆஸ்திரேலியாவில் தற்போது பொதுத் தேர்தல் (Federal election) நடத்தப்பட்டால், ஆளும் தொழிற்கட்சிக்கு கட்சிக்கும் (Labor Party) பாலின் ஹான்சனின் ஒன் நேஷன் (One Nation) கட்சிக்கும்  இடையில் கடும் போட்டி நிலவும் என கருத்து கணிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையிலேயே ஆஸ்திரேலிய பிரதமர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. பிரபல […]

உலகம்

இந்தியா மீது போர் தொடுப்போம் – பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் அச்சுறுத்தல்

  • June 23, 2026
  • 0 Comments

பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் குவாஜா ஆசிஃப், இந்தியாவுக்கு எதிராகப் போர் தொடுப்பதாக அச்சுறுத்தல் விடுத்துள்ளார். நாட்டில் நிலவும் கடுமையான உள்நாட்டு நீர் பற்றாக்குறை மற்றும் நிர்வாகத் தோல்விகளுக்கு மத்தியில் பாகிஸ்தான் அமைச்சரின் இந்தக் கருத்துக்கள் வெளியாகியுள்ளன. தண்ணீர் நமது தேசியப் பாதுகாப்பின் ஒரு அங்கம் என்றும், இந்தியாவுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் தருணத்தில் நாம் அதற்கு எதிராகப் போர் தொடுப்போம் என்றும் குவாஜா ஆசிஃப் தெரிவித்தார். தண்ணீர் விநியோகத்தைத் தடைசெய்ய இந்தியா விரைவாகச் செயல்படுவதற்கான ஆதாரம் இருந்தால், இராணுவ […]

கடும் வெப்பம்!! பிரான்சில் 18 பேர் உயிரிழப்பு

பிரான்சில் தற்போது நிலவி வரும் கடும் வெப்ப அலை (Heatwave) மற்றும் அதனால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் காரணமாக 18 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பா முழுவதும் தற்போது கடுமையான வெப்ப அலை வீசி வருகிறது. இந்தச் சூழலில், பிரான்சில் மட்டும் குறைந்தது 18 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜூன் 22 மற்றும் 23 ஆகிய திகதிகளில் பதிவான இந்த உயிரிழப்புகள் குறித்த முக்கிய விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன: உயிரிழப்புகளின் பின்னணி குழந்தைகளின் மரணம்: தென்கிழக்கு […]

பிவிருது ஹெல உறுமயவின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில அரசியல் இலங்கை செய்தி

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்: உதய கம்மன்பில சர்ச்சை கருத்து

  • June 23, 2026
  • 0 Comments

“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் ஊடாக கோட்டாபய ராஜபக்ச பிரதிபலன் அடையவில்லை. மாறாக பேராயரே பிரதிபலன் அடைந்துவருகின்றார்.” – என்று பிவிருது ஹெல உறுமயவின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பில குற்றஞ்சாட்டியுள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் அவர் மேலும் கூறியை வருமாறு, “உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் கோட்டாபய ராஜபக்சவே பிரதிபலன் அடைந்தார் என அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ உள்ளிட்டவர்கள் கருத்து வெளியிட்டுவருகின்றனர். 2018 உள்ளாட்சிசபைத் தேர்தலில் […]

ராஸ் லப்பான் துறைமுகமானது உலகின் மிகப்பெரிய செயற்கை துறைமுகமாகும். மேலும் இது உலகின் மிகப்பெரிய எல்என்ஜி (LNG) ஏற்றுமதி வசதியைக் கொண்டுள்ளது. உலகம் செய்தி முக்கிய செய்திகள்

எரிவாயு ஆலையில் வெடி விபத்து: 12 இந்தியர்கள் பலி

  • June 23, 2026
  • 0 Comments

கத்தாரில் உள்ள மிகப்பெரிய எரிவாயு ஆலை ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி குறைந்தது 13 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 66 பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்த 13 பேரில் 12 பேர் இந்தியர்கள் என தெரியவருகின்றது. ராஸ் லப்பான் (Ras Laffan) தொழிற்துறை மண்டலத்தில் அமைந்துள்ள நகரின் பிரதான திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (LNG) சுத்திகரிப்பு நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு இந்த விபத்து ஏற்பட்டதாக கத்தார் உள்நாட்டு விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த வெடிவிபத்தின் காரணமாக அந்த நகரத்தின் […]

Norway have lost only once in their last 18 matches and will take on France in a compelling battle for top spot in the group in Boston on Friday செய்தி விளையாட்டு

அசத்தலான ஆட்டம்: அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது Norway

  • June 23, 2026
  • 0 Comments

New York நியூ ஜெர்சி மைதானத்தில் நடைபெற்ற (Group I) லீக் போட்டியில், நோர்வே அணி 3-2 என்ற கணக்கில் செனகல் அணியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்குத் (Last 32) தகுதி பெற்றுள்ளது. இப்போட்டியில் நோர்வே நட்சத்திர வீரர் எர்லிங் ஹாலண்ட் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக இரண்டு கோல்களை (Brace) அடித்து அசத்தினார். திங்கட்கிழமை நடைபெற்ற இந்த விறுவிறுப்பான ஆட்டத்தின் முதல் பாதியில்,நோர்வே அணியின் மாற்று வீரர் மார்கஸ் ஹோம்ஹிரென் பெடர்சன் ஒரு கோல் அடித்து அணியை […]