80 பில்லியன் டொலர்கள் தேவை – பென்டகன் கோரிக்கை
பென்டகன் தனக்கு சுமார் 80 பில்லியன் டொலர்கள் தேவை என்று செனட் உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளது.
இதில் பெரும்பகுதி, ஈரானுக்கு எதிரான அமெரிக்கப் போரின் செலவுகளை ஈடுகட்டுவதற்கு செலவிடப்படும் எனக் கூறப்படுகிறது.
அதேநேரம் இந்தத் தொகையானது அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கோரிவரும் கணிசமான இராணுவச் செலவின அதிகரிப்புடன் கூடுதலாகச் சேர்க்கப்படுகிறது.
இதற்கிடையே வெள்ளை மாளிகையின் மேலாண்மை மற்றும் வரவு செலவுத் திட்ட அலுவலகம் இன்னும் காங்கிரஸிடம் முறையான கோரிக்கையை முன்வைக்கவில்லை எனவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
போரை முடிவுக்குக் கொண்டுவர ட்ரம்ப் ஈரானுடன் செய்துகொண்ட ஒப்பந்தம் குறித்து சட்டமியற்றுபவர்கள் சந்தேகத்துடன் உள்ள நிலையில் இந்த மேலதிக நிதிக்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது




