மனு தள்ளுபடி – சிறை செல்கிறார் ஞானசார தேரர்!
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு, கொழும்பு நீதவான் நீதிமன்றம் விதித்த சிறைத் தண்டனையை கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று உறுதி செய்தது.
தண்டனையிலிருந்து தன்னை விடுவித்துக் கோரி ஞானசார தேரோ தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி மஞ்சுல திலகரத்ன இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
இஸ்லாத்தை அவமதிக்கும் வகையில் சமூக நல்லிணக்கத்தைக் குலைக்கும் ஒரு அறிக்கையை வெளியிட்டதாகக் குற்றம் சாட்டி, ஞானசார தேரோ மீது பொலிஸார் தண்டனைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
விசாரணையைத் தொடர்ந்து, கொழும்பு நீதவான் நீதிமன்றம் ஞானசார தேரரை குற்றவாளி எனக் கண்டறிந்து, அவருக்கு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





