ஐரோப்பா

பிரித்தானியாவில் பேருந்து விபத்து – 26 பேர் படுகாயம்

  • June 23, 2026
  • 0 Comments

பிரித்தானியாவின் கார்மார்த்தன்ஷையரில் (Carmarthenshire) உள்ள கிட்வெல்லியில் (Kidwelly) பேருந்தொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. கிட்வெல்லி சுற்றுச்சாலைக்கு அருகில் உள்ள A484 சாலையில் இன்று இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் 26 பேர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் அவசர சேவையாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேற்படி விபத்தை  தொடர்ந்து அப்பகுதியூடான போக்குவரத்து தடை பட்டுள்ளது. ஓட்டுநர்கள் மாற்று வழியை பின்பற்றுமாறு வேல்ஸ் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.  

சுமார் 4 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியுடைய இந்த விரிவான தொடர்பாடல் அமைப்பு, இலங்கை கடற்படையின் கடலோரக் கண்காணிப்புக் கப்பல்களில் (OPVs) நிறுவப்படவுள்ளது. இலங்கை செய்தி

இலங்கை கடற்படைக்கு செயற்கைகோள் தொடர்பாடல் அமைப்பு கையளிப்பு

  • June 23, 2026
  • 0 Comments

இலங்கை கடற்படையின் கடல்சார் இணைப்பு மற்றும் செயற்பாட்டு திறன்களை மேம்படுத்தும் வகையில், அமெரிக்கா மேம்பட்ட Fleet Broadband செயற்கைக்கோள் தொடர்பாடல் அமைப்பை இலங்கை கடற்படைக்கு (SLN) கையளித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பு ஜூன் 22 கொழும்புத் துறைமுகத்தில் SLNS கஜபாஹு கப்பலில் நடைபெற்ற விசேட வரவேற்பு நிகழ்வின் போது வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர மற்றும் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க இராஜாங்கத் துறை உதவி செயலாளர் […]

கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன் அரசியல் இலங்கை செய்தி

‘இந்திய மீனவர்களின் அத்துமீறல் குறைவடைந்துள்ளது’

  • June 23, 2026
  • 0 Comments

“பாரம்பரிய கரைவலை மீன்பிடி முறைமைக்குத் தடை விதிக்கப்படவில்லை. இதிலுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு ஒரு வருட கால அவகாசம் கோரப்பட்டுள்ளது. நாம் கடற்றொழிலாளர்களைக் கைவிடமாட்டோம்” இவ்வாறு கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (23) உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அமைச்சர் மேலும் கூறியவை வருமாறு: “கரைவலை மீன்பிடி என்பது ஒரு பாரம்பரிய முறைமையாகும். அந்த முறைமை இலங்கையில் தடை செய்யப்படவில்லை; அது தொடர்ந்து முன்னெடுக்கப்படும். எனினும், உழவு […]

உலகம்

அமெரிக்கா ஈரான் மீது எப்போது, ​​ஏன் பொருளாதாரத் தடைகளை விதித்தது?

  • June 23, 2026
  • 0 Comments

ஈரான் மீது அமெரிக்கா நீண்டகாலமாகத் தடைகளை விதித்து வருகிறது. 1979-இல் தொடங்கிய இந்தத் தடைகள் ஈரான்-இஸ்ரேல்-அமெரிக்கப் போரின் காரணமாக இந்த ஆண்டும் தொடர்கிறது. 1979 ஈரானில் இஸ்லாமியப் புரட்சிக்குப் பிறகு, ஈரானிய மாணவர்கள் தெஹ்ரானில் உள்ள அமெரிக்கத் தூதரகத்தைக் கைப்பற்றி, அமெரிக்கத் தூதர்களைப் பணயக்கைதிகளாகப் பிடித்தனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, அமெரிக்கா முதன்முறையாக ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது. ஈரானிய இறக்குமதிகளுக்குத் தடை விதித்ததுடன், சுமார் 12 பில்லியன் டொலர் மதிப்புள்ள ஈரானிய சொத்துக்களையும் முடக்கியது. […]

வெஸ்ட் லண்டன் பல்கலைக்கழகம் மற்றும் இலங்கை நிறுவனத்துக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தும் நிகழ்வின்போது இலங்கை கல்வி செய்தி

இலங்கையில் கால்பதித்தது ‘வெஸ்ட் லண்டன் பல்கலைக்கழகம்’

  • June 23, 2026
  • 0 Comments

இலங்கையின் உயர்கல்வித் துறையில் ஒரு மைல்கல்லாக, வெஸ்ட் லண்டன் பல்கலைக்கழகம் (University of West London – UWL) தனது கிளை வளாகத்தை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது. இலங்கையில் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட கல்வியை வழங்கும் முன்னோடி நிறுவனமான ANC வளாகத்துடன் இணைந்து செயல்படும் இந்த நிறுவனம், மாணவர்கள் தங்கள் தாய்நாட்டிலேயே இருந்தபடி பிரித்தானிய கல்வித் தரத்திலான பட்டப்படிப்புகளைப் பெற வழிவகுக்கிறது. பாடத்திட்டங்கள், மதிப்பீடுகள் மற்றும் தரக் கட்டுப்பாடு ஆகிய அனைத்தும் வெஸ்ட் லண்டன் பல்கலைக்கழகத்தின் தரநிலைகளுக்கு ஏற்ப […]

ஐரோப்பா

கடும் வெப்பம் – பிரான்ஸில் நீரில் மூழ்கி நாற்பது பேர் உயிரிழப்பு!

  • June 23, 2026
  • 0 Comments

பிரான்ஸில் நீரில் மூழ்கி நாற்பது பேர் உயிரிழந்துள்ளதாக பிரதமர் இன்று அறிவித்தார். கடும் வெப்ப அலையில் இருந்த தப்பிக்க மக்கள் மேற்பார்வையற்ற நீர் நிலைப் பகுதிகளில் குளிக்க முற்பட்டபோது இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டதாக சுட்டிகாட்டப்பட்டுள்ளது. பிரிட்டன், இத்தாலி மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகளும் கடும் வெப்ப அலையால் போராடி வருகின்றன. சில இடங்களில் படசாலைகளின் நேர அட்டவணை மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஐரோப்பா உலக சராசரியை விட இரண்டு மடங்குக்கு மேல் வெப்பமடைந்து வருவதாக உலக வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது. […]

யாழ்ப்பாணத்தில் அர்ச்சுனாவின் உருவப்படத்துக்கு செருப்பு மாலை அணிவிக்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. அரசியல் இலங்கை செய்தி

நாடாளுமன்றத்திற்கு வந்த ‘செருப்பு மாலை’

  • June 23, 2026
  • 0 Comments

“மக்கள் வாழ்ந்தால் போதும்; அவர்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்கள் எனில் நான் அரசாங்கத்திற்கு ஆதரவளிப்பேன். இதுதான் எனது அரசியல்” என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று (23) நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அத்துடன், யாழ்ப்பாணத்தில் தனது உருவப்படத்திற்குச் செருப்பு மாலை அணிவிக்கப்பட்ட விவகாரம் தொடர்பிலும் அர்ச்சுனா எம்.பி. சபையில் கருத்து வெளியிட்டார். இது குறித்து அவர் மேலும் பேசுகையில்: “அண்மையில் எனது உருவப்படத்திற்குச் செருப்பு மாலை ஒன்று […]

இந்தியா

தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் அமுலுக்கு வந்தது

  • June 23, 2026
  • 0 Comments

தமிழ்நாடு முழுவதும் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் அமலானதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக முதலமைச்சர் விஜயின் பிறந்த தினத்தை முன்னிட்டு நேற்று முதல் இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் தாய் மாமன் தங்க மோதிரத்திட்டத்தில் தங்க மோதிரம் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்திற்கு ஆண்டுக்கு  755.83 கோடி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

ஈரானிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகேய் (Esmaeil Baghaei) ஐரோப்பா செய்தி

நம்பகத்தன்மையை இழந்துவிட்டது ஐரோப்பா: ஈரான் விசனம்

  • June 23, 2026
  • 0 Comments

ஈரான்மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் என்பன நடத்திய தாக்குதலின்போது போது ஐரோப்பிய நாடுகள் கடைபிடித்த அணுகுமுறையை ஈரான் கடுமையாக விமரிசித்துள்ளது. மேற்படி போரின்போது ஐரோப்பிய சக்திகள் பொறுப்பற்ற முறையில் செயல்பட்டதாக ஈரான் வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பாகேய் (Esmaeil Baghaei) குறிப்பிட்டுள்ளார். இத்தகைய தவறான கொள்கைகளால் உலக அரங்கில் ஐரோப்பாவின் நம்பகத்தன்மை மற்றும் அந்தஸ்து கணிசமாகக் குறைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். ” எதிராகத் திணிக்கப்பட்ட இரண்டு போர்களின் போதும், ஐரோப்பிய நாடுகள் முற்றிலும் பொருத்தமற்ற […]

இலங்கை

நீதித்துறையில் கட்டமைப்பு சிக்கல்கள் – நாடாளுமன்றத்தில் பதற்ற நிலை

  • June 23, 2026
  • 0 Comments

நீதித்துறையில் எழுந்துள்ள கட்டமைப்புச் சிக்கல்களுக்கு உடனடியாகத் தீர்வு காண அவசர விவாதம் நடத்துமாறு   20 நாடாளுமன்ற உறுப்பினர்கள்  கோரிய நிலையில் நாடாமன்றத்தில் பதற்ற நிலை ஏற்பட்டது. அதன்படி, சபாநாயகர் ஆளும் கட்சியிடம் இதுகுறித்து விசாரித்தபோது, ​​சபை முதலமைச்சரான அமைச்சர் பிமல் ரத்நாயக்க, தாம் அதற்கு உடன்படவில்லை என்றும், தேவைப்பட்டால் இவ்விஷயத்தில் வாக்கெடுப்பு நடத்த ஒப்புக்கொள்வதாகவும் கூறினார். எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதற்குத் தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்கத் தொடங்கியதும், நாடாளுமன்றத்தில் மோதல் தொடங்கியது. அவசர நாடாளுமன்ற விவாதம் கோரி […]