செய்தி விளையாட்டு

டெல்லியை வீழ்த்தியது கொல்கத்தா அணி!

  • May 9, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் நேற்றிரவு நடைபெற்ற 51-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை 8 விக்கெட்டுகளை வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது. டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதற்கமைய துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 142 ஓட்டங்களைப் பெற்றது. இதில் பெதும் நிஸ்ஸங்க 50 ஓட்டங்களைப் பெற்றார். […]

உலகம்

ஈரானுக்கு உதவும் நாடுகள் மற்றும் தனிநபர்கள் மீது பொருளாதாரத் தடை!

  • May 9, 2026
  • 0 Comments

ஈரான்  ஆயுதங்கள் உற்பத்தி செய்ய உதவிய நாடுகள், தனிநபர்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. இதற்கமைய சீனா மற்றும் ஹாங்காங்கைச் சேர்ந்த பல நிறுவனங்கள் உட்பட 10 தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக அமெரிக்க கருவூலம் நேற்று பொருளாதாரத் தடைகளை அறிவத்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் சீன ஜனாதிபதிக்கு இடையிலான சந்திப்பு அடுத்தவாரம் இடம்பெறவுள்ள நிலையில் புதிய தடைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் அமெரிக்க கரூவூலத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈரானின் இராணுவத் தொழில் […]

இலங்கை செய்தி

யாழ்.வைத்தியசாலைக்கு விரைந்த ஆளுநர்: மருந்து தட்டுப்பாடு குறித்து அச்சம் வேண்டாம்!

  • May 9, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இன்று (09) அதிகாலை ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் எரிந்து மிகப் பெரிய சேதத்துக்குள்ளான மருந்துக் களஞ்சியத்தை, வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் இன்று காலை நேரில் சென்று பார்வையிட்டு நிலைமைகளைக் கேட்டறிந்தார். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி , தீ விபத்தால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு ஆளுநரை அழைத்துச் சென்று நிலைமைகளை நேரில் விளக்கினார். அதிகாலையில் ஏற்பட்ட இத்தீ விபத்தைக் கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட துரித நடவடிக்கைகள், தீப்பரவலில் இருந்து பாதுகாக்கப்பட்ட […]

இலங்கை

மின்கட்டண உயர்வு தொடர்பான இறுதி முடிவு இன்று அறிவிப்பு!

  • May 9, 2026
  • 0 Comments

2026 ஆம் ஆண்டிற்கான முன்மொழியப்பட்ட சிறப்பு மின்சாரக் கட்டணத் திருத்தம் இன்று (09) அறிவிக்கப்பட உள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டண உயர்வு தொடர்பாக, தேசிய அமைப்பு இயக்குனர் நிறுவனம் தனது திருத்தப்பட்ட மின்சாரச் செலவு மதிப்பீட்டை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமீபத்தில் சமர்ப்பித்திருந்தது. எரிபொருள் விலை உயர்வால் மின்சார உற்பத்திச் செலவு அதிகரித்ததே மின்கட்டண உயர்வுக்கு முக்கிய காரணமாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக வாய்மொழிக் கருத்துகளைத் தெரிவிப்பதற்கான […]

இலங்கை செய்தி

தீ விபத்தால் யாழ். வைத்தியசாலையில் பேரிழப்பு!

  • May 9, 2026
  • 0 Comments

யாழ். போதனா வைத்தியசாலையில் ஏற்பட்ட பாரிய தீ விபத்தால் பல மில்லியன் ரூபாய் பெறுமதியான மருந்துகள் மற்றும் பொருட்கள் தீக்கிரையாகியுள்ளன. சுமார் 5 மணிநேரப் போராட்டத்திற்குப் பிறகு தீ முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என தெரியவருகின்றது. இன்று சனிக்கிழமை அதிகாலைவேளையில் வைத்தியசாலையின் மருந்து களஞ்சியப் பகுதியிலேயே தீப்பரவல் ஆரம்பமாகியுள்ளது. தீயை அணைக்க வைத்தியசாலை ஊழியர்களுடன் இணைந்து மாநகர சபை தீயணைப்புப் பிரிவினர், இராணுவத்தினர், விமானப் படையினர், பொலிஸார் மற்றும் மின்சார சபையினர் எனப் பல தரப்பினர் தீவிர […]

இலங்கை

யாழ் போதனா வைத்தியசாலையில் பாரிய தீ பரவல்

  • May 9, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று அதிகாலை வேளையில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது. வைத்தியசாலையின் மருந்து களஞ்சியசாலையிலேயே இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் யாழ். மாநகர சபையின் தீயணைப்புப் படையினர், வைத்தியசாலை ஊழியர்கள், பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் பொலிஸார் எனப் பல தரப்பினரும் இணைந்து தீ அணைப்பில் ஈடுபட்டடுள்ளனர்.

உலகம் செய்தி

ரஷ்யா, உக்ரைனுக்கிடையில் 3 நாள் போர் நிறுத்தம்!

  • May 9, 2026
  • 0 Comments

ரஷ்யா மற்றும் உக்ரைன் ஆகிய நாடுகளுக்கிடையில் மூன்று நாள் தற்காலிக போர் நிறுத்தத்துக்கு இணக்கம் எட்டப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மேற்கொண்ட முயற்சியால் மூன்று நாள் தற்காலிக போர்நிறுத்தம் மற்றும் கைதிகள் பரிமாற்றத்திற்கு இரு நாடுகளும் ஒப்புக்கொண்டுள்ளன. இரண்டாம் உலகப் போர் வெற்றியைக் கொண்டாடும் வெற்றி தினத்தை முன்னிட்டு, மே 9 முதல் 11 வரை இந்த தற்காலிக அமைதி ஒப்பந்தம் அமுலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் தலைநகரில் நடைபெறும் ராணுவ அணிவகுப்பின் போது […]

உலகம் செய்தி

‘நாட்டை குழப்பத்தில் ஆழ்த்தத் தயாரில்லை’ – பதவி விலக பிரதமர் மறுப்பு!

  • May 9, 2026
  • 0 Comments

இக்கட்டான சூழலில் தான் பதவி விலகி நாட்டை குழப்பத்தில் ஆழ்த்தத் தயாரில்லை எனப் பிரதமர் கீயர் ஸ்டார்மர் (Keir Starmer) திட்டவட்டமாக அறிவித்துள்ளார். இங்கிலாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் லேபர் கட்சிக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு காரணமாக, பிரதமர் பதவியில் இருந்து அவர் விலக வேண்டும் என அக்கட்சியின் எம்.பி-க்கள் சிலரே பகிரங்கமாக வலியுறுத்தி வருகின்றனர். வேல்ஸ் பகுதியில் கடந்த 27 ஆண்டுகளாகத் தொடர்ந்து ஆட்சியில் இருந்த லேபர் கட்சி, இம்முறை தனது அதிகாரத்தை இழந்துள்ளது. இங்கிலாந்தில் […]

உலகம்

அலட்சியமான இராணுவ சாகசத்தை மேற்கொள்ளும் அமெரிக்கா – ஈரான் குற்றச்சாட்டு!

  • May 9, 2026
  • 0 Comments

“இராஜதந்திரத் தீர்வுக்கான வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம், அமெரிக்கா ஒரு ‘அலட்சியமான இராணுவ சாகசத்தை’ மேற்கொள்வதாக” ஈரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி குற்றம் சாட்டியுள்ளார். ஹோர்முஸ் ஜலசந்தியில் இரு தரப்பினரும் துப்பாக்கிச்சூடு நடத்தியதை தொடர்ந்து அவரது இந்த கருத்து வந்துள்ளது. இது தொடர்பில் தனது எக்ஸ் தள பக்கத்தில் கருத்து வெளியிட்டுள்ள அவர், ஈரானியக் கப்பல்கள் மீது அமெரிக்கா துப்பாக்கிச் சூடு நடத்திய நிலையிலும், ஈரானியர்கள் “ஒருபோதும் அழுத்தத்திற்குப் பணிய மாட்டார்கள்” என்று கூறியுள்ளார். இதற்கடையே மோதல்களுக்கு மத்தியில், […]

உலகம் செய்தி

செம்மணியில் நேற்றும் எலும்புக்கூடு அடையாளம்: இன்றும் அகழ்வுப் பணி!

  • May 9, 2026
  • 0 Comments

யாழ். செம்மணி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் போது, நேற்று சிறுவன் ஒருவனுடையது எனச் சந்தேகிக்கப்படும் மனித என்புத் தொகுதி ஒன்று புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு இதுவரை அடையாளம் காணப்பட்ட மனித எச்சங்களின் மொத்த எண்ணிக்கை 260 ஆக உயர்வடைந்துள்ளது. செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பான மூன்றாம் கட்ட அகழ்வுப் பணிகளின் 11ஆம் நாள் பணிகள் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்றன. இதன்போது, ஏற்கனவே அடையாளம் காணப்பட்டிருந்த […]