உலகம் செய்தி

கொக்கைன் போதைப்பொருள் கடத்திய ஆஸ்திரேலியாவின் முன்னாள் படை வீரருக்கு சிறை தண்டனை!

  • May 12, 2026
  • 0 Comments

ஆஸ்திரேலிய பாதுகாப்புப் படையில் பணியாற்றிய Jack Alex Cullen , கொக்கையின் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதற்காக 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ராணுவத்தில் பணியாற்றியபோதே தன் சக படையினருக்கும், மற்றவர்களுக்கும் பெருமளவில் போதைப்பொருட்களை விநியோகித்ததை அவர் ஒப்புக்கொண்டார். காவல்துறை நடத்திய சோதனையில், அவர் சுமார் $80,000 மதிப்புள்ள போதைப்பொருட்களை வாங்க முயன்றதற்கான ஆதாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தனது சொந்தப் போதைப்பொருள் பழக்கத்திற்குத் தேவையான பணத்திற்காகவே இந்தக் குற்றங்களைச் செய்ததாக அவர் தரப்பில் வாதிடப்பட்டது. இருப்பினும், அவர் சாதாரண நுகர்வோருக்கு […]

ஆஸ்திரேலியா செய்தி

பிரிட்டனுடன் இணைந்து ஈரானுக்கு தடை விதித்தது ஆஸ்திரேலியா!

  • May 12, 2026
  • 0 Comments

ஈரானில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிராக நிகழ்த்தப்படும் ஒடுக்குமுறைகளைக் கண்டிக்கும் வகையில், ஆஸ்திரேலிய அரசு ஈரானின் முக்கிய அதிகாரிகள் மற்றும் நிறுவனங்கள் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. ஈரான் மக்களின் போராட்டங்களை வன்முறையான முறையில் ஒடுக்கியதற்காகவும், கட்டாய ஆடை கட்டுப்பாடுகளை அமுல்படுத்தியதற்காகவும் உயர்மட்ட அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அமைப்புகள் இலக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்தத் தடைகள் பயணக் கட்டுப்பாடுகள் மற்றும் நிதி சார்ந்த முடக்கங்களை உள்ளடக்கியதுடன், பயங்கரவாதக் குழுக்களுக்கு நிதியுதவி அளிக்கும் நிழல் வங்கி முறையையும் கட்டுப்படுத்த […]

இலங்கை செய்தி

தமிழின விடுதலைக்காக விஜய்யிடம் ஆதரவு கோருகிறது தமிழரசுக் கட்சி!

  • May 12, 2026
  • 0 Comments

தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள சி. ஜோசப் விஜய்க்கு வாழ்த்துத் தெரிவித்துள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சி, ஈழத் தமிழர்களின் அரசியல் விடுதலைக்கு முழுமையான ஆதரவை வழங்குமாறு பகிரங்கக் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:- “தமிழகத்தை நீண்டகாலமாக ஆட்சி செய்த கட்சிகளுக்கு மாற்றாக, ‘தமிழக வெற்றிக் கழகத்தை’ ஆரம்பித்து மூன்றே ஆண்டுகளில் அனைத்து எதிர்ப்புகளையும் முறியடித்து, தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்று முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள தங்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள். அரை […]

இலங்கை செய்தி

மஹிந்தவிடம் இன்று விசாரணை வேட்டை: நாமல் கூறுவது என்ன?

  • May 12, 2026
  • 0 Comments

” விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதே எமது நிரபராதித்தன்மையை நிரூபிப்பதற்கான சிறந்த வழிமுறை. எனவே, எந்த நேரத்திலும் விசாரணைக்குச் சமூகமளிக்க நாம் தயாராகவே இருக்கின்றோம்” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். நெலும் மாவத்தையிலுள்ள கட்சித் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் விசாரணை குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அரசு அச்சுறுத்தல் விடுத்தோ அல்லது அழுத்தங்களைப் பிரயோகித்தோ […]

உலகம்

அமெரிக்க இடைத் தேர்தல் – மக்களின் ஆதரவை பெற ட்ரம்ப் போடும் புதிய திட்டம்!

  • May 11, 2026
  • 0 Comments

ஈரான் போரினால் எரிபொருள் விலைகள் அதிகரித்து வருகின்ற நிலையில் இடைத்தேர்தலுக்கு முன்னதாக 18 சென்ட் கூட்டாட்சி எரிவாயு வரியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க டொனால்ட் ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார். இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘நாங்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு எரிவாயு வரியை நீக்கப் போகிறோம், எரிவாயு விலை குறையும்போது, ​​அதை படிப்படியாக மீண்டும் அமல்படுத்துவோம்,’ என்று தெரிவித்துள்ளார். ஒரு கேலன் எரிவாயுவுக்கு 18.4 சென்ட் மற்றும் ஒரு கேலன் டீசலுக்கு 24.4 சென்ட் என்ற அளவில் […]

செய்தி தமிழ்நாடு

தமிழ்நாட்டில் போதையைஒழிக்க புதிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி கோரிக்கை

  • May 11, 2026
  • 0 Comments

தமிழ்நாட்டில் மது மற்றும் போதையை முற்றிலுமாக ஒழிக்க போர்க்கால அடிப்படையில் புதிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்வர் ஜோசப் விஜய்க்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சமூக வலைதள பதிவிலேயே அவர் இதனை வலியுறுயுள்ளார். சேலம் மாவட்டம் சீல நாயக்கன்பட்டி ,காட்டுவளவு என்ற பகுதியில் மது போதையில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இரு மாணவர்கள் உள்ளிட்ட மூவர், சக மாணவன் மீது தாக்குதல் மேற்கொண்டு படுகொலை செய்திருப்பது அதிர்ச்சியளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார் […]

உலகம் செய்தி

சொகுசுக் கப்பலில் ஹன்டா வைரஸ் பரவல் – அமெரிக்கர், பிரான்ஸ் நாட்டவருக்கு தொற்று உறுதி

  • May 11, 2026
  • 0 Comments

ஹன்டா வைரஸ் பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட சொகுசுக் கப்பலிலிருந்து தாயகம் திரும்பிய அமெரிக்கர் மற்றும் பிரான்ஸ் நாட்டவருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க சுகாதாரத் துறை வெளியிட்ட தகவலின்படி, நாடு திரும்பிய மற்றொரு அமெரிக்கருக்கும் அறிகுறிகள் இருந்ததாக கூறப்படுகிறது. இருவரும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக உயிரியல் கட்டுப்பாட்டு பிரிவுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே, Stéphanie Rist, பாரிஸில் ஒரு பெண் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை மோசமடைந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். அவருடன் தொடர்பில் இருந்த 22 பேருக்கும் […]

ஐரோப்பா செய்தி

எதிர்ப்பு வெளியிட்ட தொழிற் கட்சி எம்.பி. கேத்தரின் பிரதமரின் உரைக்கு பின்னர் ஆதரவு

  • May 11, 2026
  • 0 Comments

பிரதமர் Starmer ஆற்றிய முக்கிய உரைக்கு பின்னர், தொழிற் கட்சி எம்.பி. கேத்தரின் அட்கின்சன் (Catherine Atkinson) அவருக்கு ஆதரவு வழங்கியுள்ளார். “மக்கள் எதிர்கொள்ளும் சவால்களின் தீவிரத்தை பிரதமர் புரிந்துகொண்டிருப்பது அவரது உரையில் தெளிவாக தெரிந்தது” என அவர் கூறியுள்ளார் உள்ளாட்சித் தேர்தல்களில் வாக்காளர்கள் தெரிவித்த அதிருப்தியை ஸ்டார்மர் கவனமாகக் கேட்டுள்ளதாகவும், அதற்கு பதிலளிக்கும் வகையில் அவர் “ஒரு புதிய நம்பிக்கையை” வழங்கியுள்ளதாகவும் அட்கின்சன் தெரிவித்தார். மேலும், வலிமையான மற்றும் நியாயமான பிரித்தானியாவை உருவாக்கும் பிரதமரின் முயற்சிக்கு […]

உலகம் செய்தி வாழ்வியல்

பக்கவாதத்தை குணப்படுத்த புதியவகை மருந்து கண்டுப்பிடிப்பு!

  • May 11, 2026
  • 0 Comments

பக்கவாதம் ஏற்பட்ட உடனேயே மூளை செல்களைப் பாதுகாக்க, உலகின் முதல் மூக்கு வழி தெளிப்பானை ஹாங்காங் விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இது அவசரகால மீட்பு கருவியாக செயற்படும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பக்கவாதம் என்பது இறப்பு மற்றும் இயலாமைக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். இதனால் ஆண்டுதோறும் 890 பில்லியன் டொலர் செலவாகுகிறது. பக்கவாதத்திற்கான தற்போதைய சிகிச்சையானது, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே தொடங்குகிறது. இரத்த உறைவை உடைக்கும் மருந்துகள் மற்றும் மூளைக்குச் செல்லும் தமனிகள் வழியாக இரத்த ஓட்டத்தை மீட்டெடுப்பதற்காக […]

உலகம் செய்தி

ஈரான் வலையமைப்பை முடக்க நடவடிக்கை: நபர்கள், நிறுவனங்கள்மீது தடை!

  • May 11, 2026
  • 0 Comments

பிரிட்டனுக்கு எதிராகத் தீங்கு விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாகக் கருதப்படும் ஈரான் தொடர்புடைய 12 நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது கடுமையான தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்தத் தடைகளின் கீழ் சம்பந்தப்பட்டவர்களின் சொத்துக்கள் முடக்கப்படுவதோடு, அவர்கள் பிரிட்டனுக்குள் நுழைவதற்கும் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தடைசெய்யப்பட்ட அமைப்புகளுக்கு நிதி உதவி வழங்கியதாகவும், பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் சதித்திட்டங்கள் தீட்டியதாகவும் இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பிரிட்டன் மற்றும் அதன் நட்பு நாடுகளின் நிலையான தன்மையைச் சீர்குலைக்க முயன்றதை எதிர்த்து இந்த […]