ஐரோப்பா செய்தி

ஸ்டார்மர் மீது தொடரும் விமர்சனம் – தொழிற்கட்சி எம்.பி கடும் குற்றச்சாட்டு

  • May 12, 2026
  • 0 Comments

பிரதமர் Starmer பதவியில் இருந்து விலகாமல் தொடர்ந்தும் பணியை மேற்கொள்வது, கட்சிக்குள் மேலும் பெரிய அரசியல் சவாலை உருவாக்கியுள்ளதென தொழிற் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பவுலெட் ஹாமில்டன் (Paulette Hamilton) தெரிவித்துள்ளார். ஸ்டார்மரின் கட்சி சகாக்கள் ஆரம்பத்தில் அவருக்கு வாய்ப்பு வழங்கத் தயாராக இருந்ததாகவும், ஆனால் அந்த நம்பிக்கையை அவர் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றும் ஹாமில்டன் கூறியுள்ளார். மேலும், தற்போதைய அரசியல் நிலைமை தொழிற் கட்சிக்கு மட்டுமின்றி, நாட்டின் சர்வதேச மதிப்புக்கும்  பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என தொழிற் கட்சி […]

உலகம் செய்தி

தெற்கு லெபனானில் புதிய இடப்பெயர்வு உத்தரவு 

  • May 12, 2026
  • 0 Comments

இஸ்ரேல் மற்றும் லெபனான் இடையே போர் நிறுத்தம் அமுலில் உள்ள நிலையிலும், தெற்கு லெபனானில் இஸ்ரேலிய இராணுவம் தனது நடவடிக்கைகளை தொடர்ந்து விரிவுபடுத்தி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக, தெற்கு லெபனானில் உள்ள நான்கு கிராமங்கள் மற்றும் நகரங்களுக்கு இஸ்ரேல் புதிய கட்டாய இடப்பெயர்வு உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அந்த பகுதிகளில் விரைவில் இராணுவ நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படலாம் என எச்சரித்துள்ள இஸ்ரேலிய இராணுவம், குடியிருப்பாளர்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு நகர வேண்டும் என்று […]

ஐரோப்பா செய்தி

பதவி விலகல் அழுத்ததிற்கு மத்தியில் பணியைத் தொடரும் ஸ்டார்மர்

  • May 12, 2026
  • 0 Comments

பிரித்தானிய பிரதமர் Starmer, தன்னை பதவி விலகுமாறு கோரும் தொழிலாளர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்கள் தொடர்பில் அவதானம் செலுத்தும் அதேவேளை பிரதமராக தனது பணியைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறார் என்று அமைச்சர் டேரன் ஜோன்ஸ் (Darren Jones) தெரிவித்துள்ளார். ஸ்கை நியூஸிற்கு அளித்த பேட்டியிலேயே அவர் இதனைக் கூறியுள்ளார். கட்சி ஆதரவாளர்கள் மத்தியில் பிரதமர் நேற்றைய தினம் ஆற்றிய உரையில் தனது நிலைப்பாட்டை மிகவும் தெளிவாக வெளிப்படுத்தியிருந்தார் என்றும் அமைச்சர் டேரன் ஜோன்ஸ் கூறினார். மேலும், […]

இலங்கை செய்தி

“அனைவரும் சட்டத்திற்குக் கட்டுப்படும் நாட்டை கட்டியெழுப்புவோம்” – ஜனாதிபதி

  • May 12, 2026
  • 0 Comments

“டித்வா” சூறாவளி நிவாரணத்திற்காக அரசாங்கம் ஒதுக்கியுள்ள 500 பில்லியன் ரூபா நிதியை, பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தையும் அப்பிரதேசங்களையும் மேம்படுத்துவதற்காகப் பயனுள்ள முறையிலும் வினைத்திறனாகவும் பயன்படுத்துவது அரசியல் அதிகாரத்தினதும் அரச அதிகாரிகளினதும் பொறுப்பாகும்.” இவ்வாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார். இவ்வருட இறுதிக்குள் அந்த அனைத்துத் திட்டங்களையும் நிறைவு செய்ய வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார். மாத்தளை வீர கெப்பெட்டிபொல மண்டபத்தில் இன்று (12) முற்பகல் நடைபெற்ற மாத்தளை மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, […]

இலங்கை செய்தி

மஹிந்தவிடம் இரண்டரை மணிநேரம் விசாரணை: நடந்தது என்ன?

  • May 12, 2026
  • 0 Comments

சர்ச்சைக்குரிய எயர்பஸ் கொடுக்கல், வாங்கல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம், இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு இன்று (12) வாக்குமூலத்தை பதிவு செய்தது. சுமார் இண்டரை மணிநேர விசாரணையின் பின்னர் மஹிந்த ராஜபக்ச அங்கிருந்து வெளியேறினார். மஹிந்த ராஜபக்ச இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாவதற்கு வந்தவேளை, அவருக்கு ஆதரவு தெரிவித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி ஆதரவாளர்கள் அங்கு திரண்டிருந்தனர். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பிரதேச அரசியல்வாதிகள் உள்ளிட்டவர்களும் வருகை தந்திருந்தனர். பின்னணி என்ன? […]

இலங்கை செய்தி

பெலருஸ் செல்கிறார் விஜித ஹேரத்!

  • May 12, 2026
  • 0 Comments

வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்  பெலருஸ் நாட்டிற்கு இன்று (12) உத்தியோகபூர்வ பயணம் மேற்கொள்ளவுள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான 25 ஆண்டு கால இராஜதந்திர உறவைக் கொண்டாடும் வகையில் அமையும் இந்த விஜயத்தின் போது, அவர் அந்நாட்டு ஜனாதிபதி மற்றும் முக்கிய அமைச்சர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்துவார். கல்வி மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம் மற்றும் சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்கான […]

இலங்கை செய்தி

மத்தல சர்வதேச விமான நிலையத்தில் முதலிட பல நாடுகள் விருப்பம்!

  • May 12, 2026
  • 0 Comments

மத்தல சர்வதேச விமான நிலையத்தில் முதலீடு செய்வதற்கு இந்திய, சீன நிறுவனங்கள் மாத்திரமன்றி, மத்திய கிழக்கு நிறுவனங்களும் ஆர்வம் காட்டுவதாக துறைமுகங்கள். சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக தெரிவித்துள்ளார். அம்பாந்தோட்டை மாவட்டம், மத்தலவில் உள்ள சர்வதேச விமான நிலையத்தை இயக்குவதற்கான விரும்பும் உள்நாட்டு வெளிநாட்டு நிறுவனங்களிடம் இருந்து இலங்கை அரசாங்கம் கேள்விப்பத்திரங்களைக் கோரியுள்ளது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் உடன்பாடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த அமைச்சரவையால் குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஆரம்பத்தில் […]

செய்தி விளையாட்டு

ஹைதராபாத், குஜராத் அணிகள் இன்று மோதல்!

  • May 12, 2026
  • 0 Comments

IPL 2026 தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் புள்ளிகள் பட்டியலில் 2-வது இடத்தில் உள்ள சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, 3-வது இடத்தில் உள்ள குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இரு அணிகளுமே தலா 14 புள்ளிகளை பெற்றுள்ளன. எனினும் நிகர ரன் ரேட் அடிப்படையில் ஹைதராபாத் அணி 2-வது இடத்தில் உள்ளது. கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி தொடர்ச்சியாக 4 வெற்றிகளை குவித்ததன் மூலம் தற்போது புள்ளிகள் பட்டியலில் வலுவான நிலையில் உள்ளது. கடைசியாக […]

உலகம் செய்தி தமிழ்நாடு

தவெக ஆட்சிக்கு அதிமுகவும் ஆதரவு!

  • May 12, 2026
  • 0 Comments

தமிழக வெற்றிக் கழக ஆட்சிக்கு அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவு அளிப்பதாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அறிவித்துள்ளார். ” நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக முதல்வராக விஜய் வரவேண்டும் என்று மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். மேற்படி தீர்ப்பை அதிமுக தலைவணங்கி வரவேற்கிறது. தேர்தலுக்குப் பிறகு கலந்தாலோசித்தபோது கட்சியின் பொதுச் செயலாளர் பழனிசாமி சில முன்மொழிவுகளை எங்கள் முன்வைத்தார்.” எனவும் சிவி சண்முகம் கூறினார். அதிமுக இனி எந்த கூட்டணியிலும் இல்லை. தேர்தலுக்கு முன்பு இருந்த எந்த கூட்டணியிலும் இனி […]

இந்தியா தமிழ்நாடு

மதுபானசாலைகளை மூட விஜய் உத்தரவு!

  • May 12, 2026
  • 0 Comments

வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் அருகிலிருந்து 500 மீட்டர்வரை அமைந்துள்ள 717 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளை இரண்டு வாரத்துக்குள் மூடுமாறு தமிழக முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தால் 4,765 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் தற்போது நடத்தப்பட்டு வருகிறது. அதில், வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்கள் அருகிலிருந்து 500 மீட்டர் வரை அமைந்துள்ள கடைகளை ஆய்வு செய்து கண்டறியுமாறு முதலமைச்சர் விஜய் உத்தரவிட்டார். மேற்படி ஆணைக்கிணங்க இந்த […]