உலகம் செய்தி

ஈரான் வலையமைப்பை முடக்க நடவடிக்கை: நபர்கள், நிறுவனங்கள்மீது தடை!

பிரிட்டனுக்கு எதிராகத் தீங்கு விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டதாகக் கருதப்படும் ஈரான் தொடர்புடைய 12 நபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது கடுமையான தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்தத் தடைகளின் கீழ் சம்பந்தப்பட்டவர்களின் சொத்துக்கள் முடக்கப்படுவதோடு, அவர்கள் பிரிட்டனுக்குள் நுழைவதற்கும் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், தடைசெய்யப்பட்ட அமைப்புகளுக்கு நிதி உதவி வழங்கியதாகவும், பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையில் சதித்திட்டங்கள் தீட்டியதாகவும் இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

பிரிட்டன் மற்றும் அதன் நட்பு நாடுகளின் நிலையான தன்மையைச் சீர்குலைக்க முயன்றதை எதிர்த்து இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!