இந்தியா முக்கிய செய்திகள்

தமிழக தேர்தலில் சட்டவிரோதமாக வாக்களிப்பு – இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்தவர்கள் கைது!

  • May 16, 2026
  • 0 Comments

ஏப்ரல் 23 அன்று நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில், இலங்கையர்கள் உள்ளிட்ட வெளிநாட்டினர் “ஏமாற்றுத்தனமாக” வாக்களித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து இந்திய தேர்தல் ஆணையம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. விமானத்தில் ஏற முயன்ற பத்து வெளிநாட்டினர் தடுத்து நிறுத்தப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதன்போது அவர்களின் ஆட்காட்டி விரலில் மை இருந்தது கண்டறியப்பட்டது. இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சட்டவிரோதமாக வாக்களித்தமை கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீது ஒன்பது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர். இலங்கை, இங்கிலாந்து […]

இலங்கை செய்தி

முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளுக்கு பிரதேச சபை அமர்வில் அஞ்சலி!

  • May 16, 2026
  • 0 Comments

ஈழத் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட முள்ளிவாய்க்கால் பேரவலத்தில் உயிர் நீத்த உறவுகளுக்காக காரைதீவு பிரதேச சபையின் மாதாந்த அமர்வில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. காரைதீவு பிரதேச சபையின் நான்காவது சபையின் பதினொராவது அமர்வு நேற்று காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் சு. பாஸ்கரன் தலைமையில் நடைபெற்ற போதே இந்த அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. அவர் தலைமை உரையாற்றுகையில் முள்ளிவாய்க்கால் அவலம் தொடர்பாக உரையாற்றி மௌன அஞ்சலிக்கு வேண்டுகோள் விடுத்தார். அதனையேற்று அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்று […]

ஐரோப்பா செய்தி

பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய வேண்டும் – வெஸ் ஸ்ட்ரீட்டிங்

  • May 16, 2026
  • 0 Comments

பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைய வேண்டும் என முன்னாள் சுகாதாரச் செயலாளர் வெஸ் ஸ்ட்ரீட்டிங் தெரிவித்துள்ளார். தொழிற்கட்சி ஆதரவு அமைப்பான ‘புரோகிரெஸ்’ மாநாட்டில் பேசிய அவர், “ஐரோப்பிய ஒன்றியத்துடன் புதிய சிறப்பு உறவு தேவை. பிரிட்டனின் எதிர்காலம் ஐரோப்பாவுடன்தான் உள்ளது. ஒருநாள் மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவோம்” என்று கூறினார். தொழிற்கட்சித் தலைமைப் பதவிக்கான சாத்தியமான வேட்பாளராக பார்க்கப்படும் ஸ்ட்ரீட்டிங், பிரெக்ஸிட்டை “பேரழிவான தவறு” என விமர்சித்தார். “2026ஆம் ஆண்டில் இந்த அபாயகரமான உலக சூழலில், […]

ஐரோப்பா

ஐ.நா. மனிதாபிமான உதவிக் குழுவின் வாகன அணிவகுப்பை குறிவைத்த ரஷ்யா!

  • May 16, 2026
  • 0 Comments

ஐ.நா. மனிதாபிமான உதவிக் குழுவின் வாகன அணிவகுப்பை, ரஷ்யா வேண்டுமென்றே இரண்டு முறை ஆளில்லா விமானங்கள் மூலம் குறிவைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ரஷ்யாவின் இந்த நடவடிக்கை உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் ஐ.நா. மனிதாபிமானத் தலைவர் டாம் பிளெட்சர் (Tom Fletcher) ஆகியோரின் கண்டனத்தையும் தூண்டியுள்ளது. இந்த வாரம், ரஷ்யா உக்ரைன் முழுவதும் தொடர்ச்சியான தாக்குதல்களில் 1,500-க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்களையும் ஏராளமான  ஏவுகணைகளையும் ஏவியது. இதன் விளைவாக ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். அதேநேரம் 20 நேரடி […]

உலகம் செய்தி

பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் தெஹ்ரானுக்கு திடீர் பயணம் – ஈரான் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை?

  • May 16, 2026
  • 0 Comments

பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி முன்னறிவிப்பின்றி ஈரான் தலைநகர் தெஹ்ரானுக்கு சென்றதாக அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஈரானின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் IRNA மேற்கோள் காட்டிய தகவலின்படி, அவர் ஈரானிய அதிகாரிகளைச் சந்திப்பதற்காக திடீரென பயணம் மேற்கொண்டுள்ளார். இஸ்லாமாபாத்தில் உள்ள தூதரக வட்டார தகவலின்படி, நக்வி ஈரானின் உள்துறை அமைச்சர் உள்ளிட்ட பல உயர்மட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சந்திப்பின் முக்கிய விவாதங்கள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.

இலங்கை செய்தி

“தமிழக் கட்சிகள் ஒன்றிணையாவிடின் வடக்கு பிறபோகும்”

  • May 16, 2026
  • 0 Comments

“தமிழ்க் கட்சிகளுக்குள் ஒற்றுமை ஏற்படவில்லையெனில், வடக்கு – கிழக்கு மாகாண சபைகளை தேசிய மக்கள் சக்தி அரசு மிக எளிதாகக் கைப்பற்றும் அபாயம் உள்ளது.” – இவ்வாறு ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினரும் ரெலோவின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். வவுனியாவில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவிக்கையில், “அரசு தற்போது பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ள நிலையில், மக்கள் ஆதரவு குறைவதற்கு முன்னரே மாகாண சபைத் தேர்தலை நடத்தி, […]

உலகம் செய்தி

இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் ராணுவ தளபதி பலி! போர் நிறுத்தத்துக்கு மத்தியில் பதற்றம்!!

  • May 16, 2026
  • 0 Comments

ஹமாஸ் அமைப்பின் மிக உயரிய இராணுவத் தளபதியான Izz al-Din al-Haddad , இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். இதனை ஹமாஸ் அமைப்பு இன்று உறுதிப்படுத்தியுள்ளது. அமெரிக்க ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலில் உள்ள நிலையிலேயே இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது. காசாவில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் Izz al-Din al-Haddad உடன் அவரது குடும்ப உறுப்பினர்களும் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. ஒக்டோபர் 7 தாக்குதல்களுக்கு முக்கியக் காரணமானவர்களில் ஒருவராகக் கருதப்படும் இவர், இஸ்ரேலியப் படைகளால் நீண்டகாலமாகத் தேடப்பட்டு […]

உலகம்

தாய்லாந்தில் ரயிலுடன் மோதிய பேருந்து – பாரிய தீவிபத்தில் பலர் பலி!

  • May 16, 2026
  • 0 Comments

தாய்லாந்தின் பாங்கொக் நகரில் ரயில் ஒன்றுடன் பயணிகள் பேருந்து ஒன்று மோதி தீப்பிடித்து எரிந்துள்ளது. இந்த விபத்து இன்று நிகழ்ந்துள்ளது. இதில் 08 பேர் உயிரிழந்துள்ளதுடன், இருபதிற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக மீட்பு பணியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தினால் அருகில் இருந்து கார் உள்ளிட்ட வாகனங்களும் தீவிபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. தீயைக் கட்டுப்படுத்தும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் முழுவீச்சில் பணியாற்றி வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் விபத்துக்கான காரணத்தை அறிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.   […]

செய்தி தமிழ்நாடு

“நன்மை மலரட்டும்” முதல்வரை சந்தித்தார் கமல்!

  • May 16, 2026
  • 0 Comments

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கமல்ஹாசன், தமிழக முதல்வர் விஜய்யை இன்று நேரில் சந்தித்து கலந்துரையாடினார். தமிழக முதல்வருக்கு வாழ்த்து கூறிய கமல்ஹாசன், சில ஆலோசனைகளையும் முன்வைத்துள்ளார். இது குறித்து கமல்ஹாசன் வெளியிட்ட எக்ஸ் பதிவில், “தமிழக முதல்வர் தம்பி விஜய்யை இன்று நேரில் சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தேன். தமிழகத்தை மேம்படுத்தும் பல கனவுகளை உற்சாகத்துடன் பகிர்ந்துகொண்டார். சந்திப்பின்போது அவர் காட்டிய பண்பும் அன்பும் நெகிழ்ச்சியளித்தது. பல்வேறு இடையூறுகளைச் சந்தித்து வரும் தமிழ்த் […]

செய்தி தமிழ்நாடு

செங்கோட்டையனுக்கு நிதியமைச்சுப் பதவி – முதல்வரால், 9 அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு

  • May 16, 2026
  • 0 Comments

தமிழக அமைச்சரவையில் உள்ள அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அமைச்சர் செங்கோட்டையனுக்கு நிதித் துறையும், ஆதவ் அர்ஜுனாவுக்கு பொதுப்பணித் துறையும் ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் விஜய் மற்றும் 09 அமைச்சர்கள் கடந்த 10vஆம் திகதி பதவியேற்ற நிலையில், அவர்களுக்கான இலாகாக்கள் இன்று ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அதன்படி, முதல்வர் விஜய்யின் வசம் பொது நிர்வாகம், உள்துறை, மகளிர் நலன், இளைஞர் நலன், காவல் உள்ளிட்ட துறைகள் உள்ளன. மேலும், இந்திய ஆட்சிப் பணி, இந்தியக் காவல் பணி, இந்திய […]