ஐரோப்பா

ஐ.நா. மனிதாபிமான உதவிக் குழுவின் வாகன அணிவகுப்பை குறிவைத்த ரஷ்யா!

ஐ.நா. மனிதாபிமான உதவிக் குழுவின் வாகன அணிவகுப்பை, ரஷ்யா வேண்டுமென்றே இரண்டு முறை ஆளில்லா விமானங்கள் மூலம் குறிவைத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் இந்த நடவடிக்கை உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்றும் ஐ.நா. மனிதாபிமானத் தலைவர் டாம் பிளெட்சர் (Tom Fletcher) ஆகியோரின் கண்டனத்தையும் தூண்டியுள்ளது.

இந்த வாரம், ரஷ்யா உக்ரைன் முழுவதும் தொடர்ச்சியான தாக்குதல்களில் 1,500-க்கும் மேற்பட்ட ஆளில்லா விமானங்களையும் ஏராளமான  ஏவுகணைகளையும் ஏவியது. இதன் விளைவாக ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.

அதேநேரம் 20 நேரடி ஆளில்லா விமானத் தாக்குதல்களில் 63 பேர் காயமடைந்ததாக உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் ரஷ்யாவின் இரவு நேரத் தாக்குதல்களால் ஒடெசா மற்றும் கார்கிவ் நகரங்களில் உள்ள முக்கிய உள்கட்டமைப்புகளும் குடியிருப்பு கட்டிடங்களும் கடுமையாக சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்