இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் ராணுவ தளபதி பலி! போர் நிறுத்தத்துக்கு மத்தியில் பதற்றம்!!
ஹமாஸ் அமைப்பின் மிக உயரிய இராணுவத் தளபதியான Izz al-Din al-Haddad , இஸ்ரேலின் வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார். இதனை ஹமாஸ் அமைப்பு இன்று உறுதிப்படுத்தியுள்ளது.
அமெரிக்க ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் அமுலில் உள்ள நிலையிலேயே இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
காசாவில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில் Izz al-Din al-Haddad உடன் அவரது குடும்ப உறுப்பினர்களும் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
ஒக்டோபர் 7 தாக்குதல்களுக்கு முக்கியக் காரணமானவர்களில் ஒருவராகக் கருதப்படும் இவர், இஸ்ரேலியப் படைகளால் நீண்டகாலமாகத் தேடப்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சம்பவம் காசாவில் நிலவும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. அத்துடன், தற்போது நடைபெற்று வரும் போர்நிறுத்தப் பேச்சுவார்த்தைகளில் சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும்.
இந்த தாக்குதலில் பொதுமக்களும் கொல்லப்பட்டுள்ளனர்.




