செய்தி

இலங்கை கடற்படை தளபதி இந்தியா பயணம்

இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, இந்தியாவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, இந்தியாவிற்குப் பயணம் மேற்கொண்டுள்ளார்.

நேற்று காலை புதுடெல்லியில்இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ, போர் வீரர்கள் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

இதையடுத்து, சவுத் புளொக்கில் இலங்கை கடற்படைத் தளபதிக்கு இந்தியக் கடற்படையினரால் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

இதையடுத்து, இந்திய கடற்படைத் தலைமைத் தளபதி அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதனும், இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோவும் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.

இதன் பின்னர், டெல்லியில் இந்திய பாதுகாப்புச் செயலர் ராஜேஷ்குமார் சிங்கை இலங்கை கடற்படைத் தளபதி டேமியன் பெர்னான்டோ, மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி