ஐரோப்பா செய்தி

பதவி விலகும் கால அட்டவணை இல்லை – ஸ்டார்மர் மீண்டும் திட்டவட்டம்

  • May 18, 2026
  • 0 Comments

மேக்கர்ஃபீல்ட் இடைத்தேர்தலில் Andy Burnham வெற்றி பெற்றாலும், தாம் பதவி விலகுவதற்கான எந்த கால அட்டவணையையும் வெளியிடப் போவதில்லை என பிரதமர் Keir Starmer தெரிவித்துள்ளார். உஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை இன்று கூறினார். மேலும், இடைத்தேர்தலில் தொழிலாளர் கட்சியின் வேட்பாளர் எவராக இருந்தாலும் அவருக்கு 100 வீத ஆதரவு வழங்கும் தனது நிலைப்பாட்டை அவர் மீண்டும் உறுதிப்படுத்தினார். கட்சியின் திசை குறித்து யாருக்கென்ன கருத்து இருந்தாலும், அதை ஒதுக்கிவைத்து அனைவரும் ஒன்றிணைய வேண்டும்,” […]

ஐரோப்பா செய்தி

இங்கிலாந்தில் குற்றச்செயல்கனைத் தடுக்க நிதி ஒதுக்கீடு

  • May 18, 2026
  • 0 Comments

சமூக விரோத நடத்தை, மீண்டும் குற்றம் புரிதல் மற்றும் பிற குற்றச் செயல்களைத் தடுக்கும் திட்டங்களுக்காக £1.4 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மேற்கு மிட்லாண்ட்ஸ் காவல்துறை ஆணையர் அறிவித்துள்ளார். இந்த நிதி, பர்மிங்காம் (Birmingham), கோவென்ட்ரி (Coventry), டட்லி (Dudley), சாண்ட்வெல் (Sandwell), சோலிஹல்(Solihull), வால்சால் (Walsall) மற்றும் வோல்வர்ஹாம்டன் (Wolverhampton) உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் 66 திட்டங்களுக்கு வழங்கப்படவுள்ளது. தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ஆரம்பகால தலையீடுகள் மூலம் குற்றங்களை குறைப்பதில் தாம் உறுதியாக உள்ளதாக மேற்கு […]

ஐரோப்பா

ஐரோப்பிய நாடுகளில் பயங்கரவாத தாக்குதல்கள் : ஈரான் சார்பாக இயங்கும் குழு தொடர்பில் எச்சரிக்கை!

  • May 18, 2026
  • 0 Comments

ஹரகாத் அஷாப் அல்-யாமின் அல்-இஸ்லாமியா (HAYI) அமைப்பை ஈரானிய பதிலி குழுவாகவும், குறிப்பாக கட்டாயிப் ஹிஸ்புல்லாவின் முகவராகவும் அமெரிக்க நீதித்துறை அடையாளம் கண்டுள்ளது. இந்தக் குழு லண்டனில் நடந்த சம்பவங்கள் உட்பட, ஐரோப்பா முழுவதும் யூத மக்கள், வணிகங்கள் மற்றும் அமெரிக்க நிறுவனங்களைக் குறிவைத்து 20 இற்கும் மேற்பட்ட தாக்குதல்களை முன்னெடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரானிய இராணுவ மோதல் தொடங்கிய சிறிது காலத்திலேயே HAYI உருவான நிலையில், பிப்ரவரி மாதத்தின் பிற்பகுதியிலிருந்து ஐரோப்பா மற்றும் கனடாவில் உள்ள பல […]

ஐரோப்பா

பணிநிறுத்த நடவடிக்கை : லண்டன் ரயில் ஓட்டுநர்களின் புதிய தீர்மானம்!

  • May 18, 2026
  • 0 Comments

லண்டன் சுரங்கபாதை ரயில் ஓட்டுநர்கள் முன்னெடுக்கவிருந்த வேலை நிறுத்த நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது. இந்த வேலைநிறுத்த நடவடிக்கையானது வரும் 19 மற்றும் 21 ஆம் திகதிகளில் முன்னெடுக்கப்படவிருந்த நிலையில் திடீரென இரத்து செய்யப்பட்டுள்ளது. புதிய பணி அட்டவணைகள், சோர்வு மற்றும் பாதுகாப்புப் பிரச்சினைகள் தொடர்பான கவலைகளை மேலும் ஆராய்வதற்கு ஏதுவாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போதுமான முன்னேற்றம் ஏற்படவில்லை என்றால் மீண்டும் போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய வரும் ஜூன் மாதம்  2 மற்றும் 4 […]

இலங்கை செய்தி

வெள்ளவத்தை நினைவேந்தல் நிகழ்வில் இடையூறு விளைவிப்பு

  • May 18, 2026
  • 0 Comments

கொழும்பு வெள்ளவத்தை கடற்கரை வீதியில் முள்ளிவாய்க்கால் நிகழ்வு மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. இன்று மாலை 05 மணி முதல் மாலை 06 மணி வரை இடம்பெற்ற இந்நிகழ்வில் சிங்கள மற்றும் தமிழ் மக்கள் தீபம் ஏற்றி அஞ்சலி செலுத்தினர். அத்துடன், கடற்கரையில் பூக்களை வீசி, உயிரிழந்த பொதுமக்களுக்கு இதயப்பூர்வமாக அஞ்சலி செலுத்தினர். அங்கு கலகமடக்கும் பொலிஸார் உட்பட பெருமளவு பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். சிலர் மாத்திரம் நிகழ்வில் குழப்ப முயற்சித்ததாகவும் நிகழ்வில் பங்குபற்றியவர்களைத் தகாத வார்த்தைகளால் […]

உலகம்

விநியோகச் சங்கிலியில் சிக்கல் – எரிபொருள் கையிருப்பு தொடர்பில் எச்சரிக்கை!

  • May 18, 2026
  • 0 Comments

உலக நாடுகளில் எண்ணெய் கையிருப்பு “மிக வேகமாக” குறைந்து வருவதாக சர்வதேச எரிசக்தி முகமையின் (IAE) தலைவர் இன்று கூறியுள்ளார். மத்தியக் கிழக்கு நாடுகளில் நிலவிவரும் பதற்றம் எரிபொருள் விநியோகத்தில் பாரிய சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. கோடைகால பயணப் பருவம் நெருங்கி வருகின்ற நிலையில் பற்றாக்குறை பற்றிய அச்சம் எழுந்துள்ளது. விநியோகத் தடைகள் தொடர்ந்தால், சில வாரங்களில் ஜெட் எரிபொருள் பற்றாக்குறை ஏற்படும் என்று விமான நிறுவனங்கள் எச்சரித்துள்ளன. இதற்கிடையே எரிபொருள் பற்றாக்குறை காரணமாக உலக நாடுகளில் அதன் […]

இலங்கை செய்தி

இலங்கையின் 2026 வளர்ச்சி இலக்கு குறித்து சந்தேகம்?

  • May 18, 2026
  • 0 Comments

2026 ஆம் ஆண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 05 வீதமாக காணப்படும் என ஆரம்பத்தில் எதிர்பார்க்கப்பட்டிருந்தாலும், உலக பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள நிச்சயமற்ற நிலை காரணமாக தற்போது துல்லியமான கணிப்பை வழங்குவது கடினமாக உள்ளதென மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். மார்ச் மாதத்திற்கு முன்னர் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5 வீத அளவில் இருக்கும் என கணிக்கப்பட்டிருந்ததாக அவர் கூறினார். ஆனால் ஏப்ரல் மாதத்திற்குப் பின்னர் உலகளாவிய பொருளாதார சூழ்நிலையில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக, […]

உலகம்

வரலாறு காணாத ரீதியல் உச்சம் தொட்ட எரிபொருள் விலை – கென்யாவில் போராட்டம்!

  • May 18, 2026
  • 0 Comments

கென்யாவில் எரிபொருள் விலை உயர்வை கண்டித்து இன்று நாடு தழுவிய ரீதியில் மாபெரும் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கபட்டுள்ளது. அத்துடன் பொதுப் போக்குவரத்து முடங்கிய நிலையில்  பெரும்பாலான பாடசாலைகள் மூடப்பட்டு இணையவழிக் கல்வி முறை அமுற்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கென்யாவில் எரிபொருள் விலை முன்னெப்போதும் இல்லாத உச்சத்தை எட்டியுள்ளது. டீசல் விலை 23.5 சதவீதத்தாலும்,  பெட்ரோல் விலை 8 சதவீதத்தாலும் அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வுகளால் அனைத்துப் பொருட்களும் சேவைகளும் பாதிக்கப்படும் என்று கென்யா தேசிய வர்த்தக மற்றும் தொழில் சபை […]

இலங்கை செய்தி

யுத்த வீரர்கள் நினைவு தினம் – முப்படையைச் சேர்ந்த 5,289 பேருக்கு பதவி உயர்வு

  • May 18, 2026
  • 0 Comments

17ஆம் தடவையாக நாளை (19) அனுஷ்டிக்கப்படும் யுத்த வீரர்கள் நினைவு தினத்தை முன்னிட்டு, நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய முப்படைகளின் 5,289 பேருக்கு பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு அமைச்சு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளது. நாட்டில் அமைதியை நிலைநிறுத்தவும் தாய்நாட்டின் இறையாண்மையை பாதுகாக்கவும் அளப்பரிய தியாகங்களையும் சிறப்பான சேவையையும் ஆற்றிய முப்படை வீரர்களை கௌரவித்து நன்றி செலுத்தும் வகையில் ஆண்டுதோறும் மே 19 ஆம் திகதி தேசிய யுத்தவீரர்கள் நினைவு தினம், அனுஷ்டிக்கப்படுகிறது. முப்படைத் தளபதிகளின் […]

இலங்கை ஐரோப்பா செய்தி

பிரதமர் லண்டன் நோக்கி பயணமானார்

  • May 18, 2026
  • 0 Comments

பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய லண்டனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். அவர் இன்று பிற்பகல் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் மூலம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டுள்ளார். லண்டன் நகரில் நடைபெறவுள்ள அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக அவர் லண்டனுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். பிரதமரின் இந்த விஜயத்தில் மேலும் இருவர் இணைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அவர் தனது உத்தியோகபூர்வ பயணத்தை நிறைவு செய்து எதிர்வரும் 23 ஆம் திகதி மீண்டும் நாட்டிற்குத் திரும்புவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.