ஐரோப்பிய நாடுகளில் பயங்கரவாத தாக்குதல்கள் : ஈரான் சார்பாக இயங்கும் குழு தொடர்பில் எச்சரிக்கை!
ஹரகாத் அஷாப் அல்-யாமின் அல்-இஸ்லாமியா (HAYI) அமைப்பை ஈரானிய பதிலி குழுவாகவும், குறிப்பாக கட்டாயிப் ஹிஸ்புல்லாவின் முகவராகவும் அமெரிக்க நீதித்துறை அடையாளம் கண்டுள்ளது.
இந்தக் குழு லண்டனில் நடந்த சம்பவங்கள் உட்பட, ஐரோப்பா முழுவதும் யூத மக்கள், வணிகங்கள் மற்றும் அமெரிக்க நிறுவனங்களைக் குறிவைத்து 20 இற்கும் மேற்பட்ட தாக்குதல்களை முன்னெடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரானிய இராணுவ மோதல் தொடங்கிய சிறிது காலத்திலேயே HAYI உருவான நிலையில், பிப்ரவரி மாதத்தின் பிற்பகுதியிலிருந்து ஐரோப்பா மற்றும் கனடாவில் உள்ள பல இடங்களில் தாக்குதல்களை முன்னெடுத்துள்ளது.
குறிப்பாக லண்டனில் 04 ஆம்புலன்ஸ்கள் எறியூட்டப்பட்டது, மற்றும் லண்டனின் கோல்டர்ஸ் கிரீனில் (Golders Green,) உள்ள கட்டிடத்திற்கு தீவைத்தது உள்ளிட்டவற்றையும் இக்குழு மேற்கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஈராக்கிய போராளிக் குழுவின் தளபதி என்று கூறப்படும் முகமது பாகர் சாத் தாவூத் அல்-சாதிக்கு (Mohammad Baqer Saad Dawood al-Saadi) எதிராக மன்ஹாட்டனில் தாக்கல் செய்யப்பட்ட ஒரு முறைப்பாட்டில் மேற்படி குற்றச்சாட்டுகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.





