பணிநிறுத்த நடவடிக்கை : லண்டன் ரயில் ஓட்டுநர்களின் புதிய தீர்மானம்!
லண்டன் சுரங்கபாதை ரயில் ஓட்டுநர்கள் முன்னெடுக்கவிருந்த வேலை நிறுத்த நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது.
இந்த வேலைநிறுத்த நடவடிக்கையானது வரும் 19 மற்றும் 21 ஆம் திகதிகளில் முன்னெடுக்கப்படவிருந்த நிலையில் திடீரென இரத்து செய்யப்பட்டுள்ளது.
புதிய பணி அட்டவணைகள், சோர்வு மற்றும் பாதுகாப்புப் பிரச்சினைகள் தொடர்பான கவலைகளை மேலும் ஆராய்வதற்கு ஏதுவாக, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதுமான முன்னேற்றம் ஏற்படவில்லை என்றால் மீண்டும் போராட்டம் முன்னெடுக்கப்படும் எனவும் எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய வரும் ஜூன் மாதம் 2 மற்றும் 4 ஆம் திகதிகளில் அடுத்தக்கட்ட வேலைநிறுத்தம் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுரங்கப்பாதையில் நான்கு நாள் வேலை வார ஏற்பாட்டிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.




