இலங்கை

டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி!! காரணம் என்ன?

  • May 19, 2026
  • 0 Comments

மத்தியக் கிழக்கில் நிலவும் பதற்றமான சூழ்நிலையே ரூபாய் சரிவடைவதற்கு முக்கிய காரணம் என மத்தியவங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார். தற்போது அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி 330 ரூபாவை கடந்துள்ள நிலையில், இது  தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் கருத்து வெளியிட்ட அவர், “நம்மைப் போலவே எண்ணெயை இறக்குமதி செய்யும் நாடுகள் உள்ளன. இந்த ஆண்டில் நமது ரூபா 4.8 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது, இந்திய ரூபா 6.4 சதவீதத்தினாலும், […]

உலகம் செய்தி

ஈரான்மீதான ராணுவ தாக்குதல் திட்டத்தை இடைநிறுத்தினார் ட்ரம்ப்!

  • May 19, 2026
  • 0 Comments

ஈரான்மீதான அமெரிக்காவின் புதிய ராணுவ நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். வளைகுடா நாடுகளின் வேண்டுகோளுக்கு இணங்க, அமைதிப் பேச்சுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கிலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஈரான் தனது அணுசக்தித் திட்டங்களைக் கைவிட வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்திவருகின்றது. மறுபுறத்தில் முடக்கப்பட்ட சொத்துக்களை விடுவிக்க வேண்டுமென ஈரான் கோரிக்கை விடுத்துவருகின்றது. இந்நிலையில் அமைதி பேச்சு முயற்சிகள் தோல்வியடைந்தால், ஈரானுக்கு எதிராக உடனடித் தாக்குதல் நடத்த அமெரிக்க இராணுவம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பா

துருக்கியில் நபர் ஒருவரின் அட்டகாசம் – 06 பேர் கொலை! பொலிஸார் வலைவீச்சு!!

  • May 19, 2026
  • 0 Comments

துருக்கியில் துப்பாக்கி ஏந்திய நபர் ஒருவர் மேற்கொண்ட தொடர் தாக்குதல்களில் 06 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று நிகழ்ந்துள்ளது. குறித்த நபர் துப்பாக்கி மற்றும் ஆயுதங்களை ஏந்தி தாக்குதல் நடத்தியதாகவும், இதில் மேலும் 08 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். தாக்குதல்தாரி மெர்சின் மாகாணத்தில் உள்ள டார்சஸ் நகரின் பல இடங்களில் தாக்குதல் நடத்தியப் பின்னர் தலைமறைவாகியதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். ட்ரோன் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி அவரை தேடி வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. […]

உலகம்

அமெரிக்காவின் மிகப் பெரிய மசூதியில் துப்பாக்கிச்சூடு – மூவர் பலி!

  • May 19, 2026
  • 0 Comments

அமெரிக்காவின் சான் டியாகோவில் உள்ள மிகப்பெரிய மசூதியில், நேற்று துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. உள்ளூர் நேரப்படி இரவு சுமார் 11.53 மணியளவில் இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் நிகழ்த்தப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதில் பாதுகாவலர் உள்பட மூவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், துப்பாக்கிச் சூட்டை நடத்தியதாக சந்தேகிக்கப்படும் இரண்டு இளைஞர்களின் உடல்கள், மசூதிக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு உயிரிழந்த இரண்டு இளைஞர்களும் 17 மற்றும் 19 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். […]

ஐரோப்பா

பாதுகாப்பை மேம்படுத்த ஜெர்மனி இலக்கு – 10 பில்லியன் ஒதுக்கீடு!

  • May 18, 2026
  • 0 Comments

ஜெர்மனி பாதுகாப்பு திறனை மேம்படுத்துவதற்காக 10 பில்லியன் (£8.5 பில்லியன்) முதலீடு செய்ய உள்ளது. அவசரநிலைகள் மற்றும் சாத்தியமான தாக்குதல்களுக்கான தயார்நிலையை மேம்படுத்துவதற்காக, இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022-ல் உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய முழு அளவிலான படையெடுப்பிற்குப் பதிலளிக்கும் விதமாகத் தொடங்கப்பட்ட ஒரு பரந்த இராணுவச் செலவின இயக்கத்தின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி ஒதுக்கீடானது பெருமளவிலான உயிரிழப்புகளுக்கான மருத்துவ உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், 1,000 சிறப்பு வாகனங்கள் மற்றும் 110,000 […]

ஐரோப்பா

பிரித்தானியாவின் பொருளாதார நிலை குறித்து IMF இன் கணிப்பு!! ரேச்சல் ரீவ்ஸ் ஆதரவு!

  • May 18, 2026
  • 0 Comments

இங்கிலாந்து அரசாங்கம் தனது தற்போதைய நிதிசார் அணுகுமுறையை தொடர வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் அறிவுறுத்தியுள்ளது. சந்தை அழுத்தங்களையும் உலகளாவிய சவால்களையும் தணிப்பதற்காக, நிதிப் பற்றாக்குறையைக் குறைத்தல் மற்றும் வளர்ச்சிக்கு உகந்த  செலவினங்கள் குறித்த நிதி அமைச்சரின் அணுகுமுறையை ஆதரித்து, IMF  இந்த தகவலை வெளியிட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியம், பிரிட்டனின் பொருளாதார வளர்ச்சி குறித்த கண்ணோட்டத்தை ஓரளவு மேம்படுத்தியுள்ளது. இதற்கமைய, 2026-ஆம் ஆண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) விரிவாக்கத்தை 0.8 சதவீதத்திலிருந்து 1 […]

உலகம்

அமெரிக்காவிற்கு எதிரான நடவடிக்கை இரத்தக் களரிக்கு வழிவகுக்கும் – கியூபா எச்சரிக்கை!

  • May 18, 2026
  • 0 Comments

கியூபாவுக்கு எதிரான எந்தவொரு அமெரிக்க இராணுவ நடவடிக்கையும் “பிராந்திய அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கு கணக்கிட முடியாத விளைவுகளை” ஏற்படுத்தும் ஒரு “இரத்தக் களரிக்கு” வழிவகுக்கும் என்று அந்நாட்டின் ஜனாதிபதி மிகுவல் தியாஸ்-கானெல் (Miguel Diaz-Canel) எச்சரிக்கை விடுத்துள்ளார். கியூபா 300-க்கும் மேற்பட்ட இராணுவ ஆளில்லா விமானங்களை வாங்கியுள்ளதாகவும், அவற்றை அமெரிக்க இலக்குகளுக்கு எதிராக பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் வெளியான செய்திகளை தொடர்ந்து மிகுவல் தியாஸின் எச்சரிக்கை வந்துள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், “கியூபா ஒரு அச்சுறுத்தலாக […]

ஐரோப்பா செய்தி

ஐரோப்பிய ஒன்றியத்தில் மீண்டும் இணைவது குறித்து விவாதிக்க விருப்பமில்லை – ஸ்டார்மர்

  • May 18, 2026
  • 0 Comments

ஐரோப்பிய ஒன்றியத்தில் மீண்டும் இணைய வேண்டும் என்ற விவாதத்தில் ஈடுபடப் போவதில்லை என பிரதமர் தெரிவித்துள்ளார். Wes Streeting மற்றும் Andy Burnham ஆகியோரின் ஐரோப்பிய ஒன்றியம் தொடர்பான கருத்துகள் குறித்து கேள்வி எழுப்பட்ட நிலையில் ஸ்டார்மர் இதைத் தெளிவுபடுத்தினார். எவ்வாறாயினும் கடந்த இரண்டு ஆண்டுகளில் தொழிலாளர் கட்சி ஐரோப்பிய ஒன்றியத்துடனான உறவுகளை முற்றிலும் மறுசீரமைத்துள்ளது என்றும் அவர் கூறினார். மேலும், இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டில், பிரித்தானிய வணிகங்களுக்கும் நாட்டின் பொருளாதாரத்திற்கும் பயனளிக்கும் […]

உலகம் செய்தி

சவூதி மீதான ட்ரோன் தாக்குதல் குறித்து ஈராக் விசாரணை

  • May 18, 2026
  • 0 Comments

சவூதி அரேபியாவை இலக்குவைத்து நடத்தப்பட்டதாக கூறப்படும் ட்ரோன் தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக ஈராக் தெரிவித்துள்ளது. ஈராக் எல்லைக்குள் இருந்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக சவூதி அரேபியா தெரிவித்திருந்த நிலையில், அதன் சூழ்நிலைகளை ஆய்வு செய்து வருவதாக ஈராக் வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது. மேலும், நாட்டின் வான்வெளியில் ட்ரோன் ஏவப்பட்டதை தங்களின் வான் பாதுகாப்பு அமைப்புகள் கண்டறியவில்லை என்றும் அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. பாதுகாப்பும் ஸ்திரத்தன்மையும் நிலைநிறுத்தப்பட வேண்டுமென வலியுறுத்திய ஈராக், இதுதொடர்பாக சவூதி அரேபியாவுடன் […]

உலகம்

காங்கோவில் வசிக்கும் அமெரிக்கர்களை வேறு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை!

  • May 18, 2026
  • 0 Comments

காங்கோ ஜனநாயக குடியரசில் எபோலா நோய் தொற்று வேகமாக பரவி வருகின்ற நிலையில், அங்கிருக்கும் அமெரிக்கர்களை வேறு ஒரு இடத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நடவடிக்கைக்கு  நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (CDC) ஆதரவளித்து வருகிறன. இது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், காங்கோ ஜனநாயகக் குடியரசில் உள்ள பல அமெரிக்கர்கள், சந்தேகிக்கப்படும் எபோலா நோயாளிகளுடன் தொடர்பில் இருந்திருக்கலாம் . அவர்களில் சிலர் அதிக ஆபத்துள்ளவர்களாகக் கருதப்படுவதுடன்,  குறைந்தபட்சம் ஒருவருக்காவது  அறிகுறிகள் தென்படக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. […]