உலகம் செய்தி

எபோலா (Ebola) வைரஸ் தொற்றால் அமெரிக்கர்களும் பாதிப்பு

  • May 18, 2026
  • 0 Comments

கொங்கோ ஜனநாயகக் குடியரசில் பரவி வரும் கொடிய எபோலா (Ebola) வைரஸ் தொற்றால் சுமார் ஆறு அமெரிக்கர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நோய்ப் பரவலை உலக சுகாதார அமைப்பு சர்வதேச அவசரநிலையாக அறிவித்துள்ளது. எபோலா (Ebola) வைரஸ் தொற்றால் 91 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன. இந்த நோயால் இதுவரை சுமார் 350 பேர் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்பதாக கொங்கோ சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதேவேளை கொங்கோவில் உள்ள சிறிய அமெரிக்கக் குழுவினரை பாதுகாப்பான தனிமைப்படுத்தல் மையத்துக்கு மாற்ற […]

செய்தி தமிழ்நாடு

மின் மற்றும் தொழில் வளர்ச்சி குறித்து முதலமைச்சர் விஜய் ஆலோசனை

  • May 18, 2026
  • 0 Comments

தமிழகத்தின் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் விஜய், மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல்குமார் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். கோடை காலத்தில் மின்சாரம் போதுமான அளவில் உள்ளதா, வெளிமாநிலங்களில் இருந்து எவ்வளவு மின்சாரம் வாங்கப்படுகிறது உள்ளிட்ட விபரங்களை அவர் கேட்டறிந்தார். மேலும், மின்தட்டுப்பாடு ஏற்படாமல் தொடர்ந்து சீரான மின்விநியோகம் வழங்கப்பட வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதனைத் தொடர்ந்து, இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை சங்கங்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகள் குழுவினர் முதலமைச்சர் விஜய்யை சந்தித்து கலந்துரையாடினார். தமிழ்நாட்டின் […]

உலகம் செய்தி

அத்துமீறுகிறது இஸ்ரேல்: துருக்கி கடும் கண்டனம்!

  • May 18, 2026
  • 0 Comments

காசாவுக்கு உதவிப் பொருட்களை ஏற்றிச் சென்ற கப்பல் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலை துருக்கி வன்மையாகக் கண்டித்துள்ளது. இந்த நடவடிக்கையை கடற்கொள்ளைச் செயல் சுட்டிக்காட்டியுள்ள துருக்கி வெளிவிவகார அமைச்சு, கைது செய்யப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியுள்ளது. சுமார் 40 நாடுகளைச் சேர்ந்த தன்னார்வலர்கள் இதில் பங்கேற்ற நிலையில், இத்தகைய அடக்குமுறைகளால் பாலஸ்தீன மக்களுக்கான சர்வதேச ஆதரவைத் தடுக்க முடியாது என்றும் துருக்கி குறிப்பிட்டுள்ளது. இஸ்ரேலின் சட்டவிரோதச் செயல்களுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைந்து உறுதியான நடவடிக்கை […]

உலகம் செய்தி

சீனாவை உலுக்கும் கனமழை : நால்வர் உயிரிழப்பு!! வெள்ள அபாய எச்சரிக்கை!

  • May 18, 2026
  • 0 Comments

சீனாவில் கனமழை மற்றும் வெள்ளத்தின் காரணமாக ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டின்  அவசரகால மேலாண்மை அமைச்சகம் நேற்று அறிவித்தது. கடந்த வெள்ளிக்கிழமை பயணிகளுடன் சென்ற பேருந்து ஒன்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாகவும், மாயமானவர்களை தேடும் நடவடிக்கைகள் தொடர்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம் தெற்கு சீனாவின் குவாங்சி பகுதியில் பிக்கப் டிரக் ஒன்று ஆற்றில் கவிழ்ந்ததில் 04 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே மே 15 முதல் 19 வரை தொடர்ச்சியான கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளனர். […]

ஐரோப்பா

காலத்தின் தேவையை உணர்ந்த ஸ்டாமர் : அவசர மாற்றம் தேவை!!

  • May 18, 2026
  • 0 Comments

நடந்து முடிந்த உள்ளுராட்சி தேர்தலில் ஸ்டாமரின் தொழிலாளர் கட்சி தோல்வியை தழுவியதை தொடர்ந்து அவசரமான மாற்றங்கள் தேவை என்பதை அவர் உணர்வதாக தெரிவித்துள்ளார். வரும் மாதங்களில் தொழிற்கட்சியில பரவலான தலைமைத்துவ போட்டி எழுந்துள்ளதுடன், கட்சி பிளவுப்பட்டுள்ள சூழ்நிலையில் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் தொழிலாளர் கட்சி சகாக்களிடம் கருத்து வெளியிட்ட அவர், தேர்தல் முடிவுகள் மக்கள் விரக்தியடைந்துள்ளனர் என்பதையும், தங்கள் வாழ்க்கையில் போதுமான வேகத்தில் மாற்றம் ஏற்படவில்லை என்று அவர்கள் உணர்கிறார்கள் என்பதையும் நமக்குச் […]

உலகம் செய்தி

ஈரான்மீதான தடைகளை தீவிரப்படுத்துமாறு அமெரிக்கா வலியுறுத்து!

  • May 18, 2026
  • 0 Comments

ஈரான்மீதான பொருளாதாரத் தடைகளைத் தீவிரப்படுத்துமாறு G – 7 நாடுகளின் கூட்டத்தில் அமெரிக்காவின் திறைசேரிச் செயலாளர் Scott Bessent வலியுறுத்தியுள்ளார். பாரிஸில் நடைபெறும் G7 நாடுகளின் நிதியமைச்சர்கள் கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார். ஈரானின் சட்டவிரோத நிதிப் பரிமாற்றங்களை முடக்கி, அந்நாட்டின் இராணுவ நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும் எனவும் Scott Bessent தெளிவுபடுத்தியுள்ளார். அதேவேளை தமது நாடுமீது விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா நீக்க வேண்டும் என ஈரான் தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றது. போர் […]

உலகம் செய்தி

பாகிஸ்தான் ஊடாக ஈரானின் புதிய திட்டம் முன்வைப்பு!

  • May 18, 2026
  • 0 Comments

போர் சூழலை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் ஒரு புதிய முன்மொழிவை பாகிஸ்தான் ஊடாக சமர்ப்பித்துள்ளது என தெரியவருகின்றது. ஈரானின் Tasnim செய்தி நிறுவனம் மேற்படி தகவலை வெளியிட்டுள்ளது. போர் சூழலை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் ஒரு புதிய முன்மொழிவை பாகிஸ்தான் வழியாக சமர்ப்பித்துள்ளது. புதிய திட்டம் பதினான்கு முக்கிய அம்சங்களைக் கொண்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையே பரஸ்பர நம்பிக்கையை மேம்படுத்துவதையும் அமைதியை நிலைநாட்டுவதையும் இந்த முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளது. பாகிஸ்தானின் உள்துறை அமைச்சர் தனது ஈரானியப் […]

உலகம் செய்தி

அமெரிக்காவுடன் பேச்சு தொடர்கிறது: ஈரான் தகவல்!

  • May 18, 2026
  • 0 Comments

பாகிஸ்தானின் மத்தியஸ்தத்துடன் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக ஈரான் வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் இஸ்மாயில் பகாஹி (Esmaeil Baghaei ) இன்று (18) தெரிவித்துள்ளார். ஈரானின் Mehr News Agency மேற்படி தகவலை வெளியிட்டுள்ளது. “ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் மற்றும் யுரேனியப் பொருட்கள் குறித்து அவர்கள் (அமெரிக்கா) சில ஊகங்களை எழுப்பினர். ஆனால், அதில் எந்த அடிப்படையும் இல்லை என்பதை நாங்கள் தெளிவுபடுத்திவிட்டோம். அமெரிக்க தரப்பில் சில முன்மொழிவுகள் சமர்ப்பிக்கப்பட்டன. அதேபோல் நாங்களும் எங்களது […]

இலங்கை செய்தி

சர்வதேசத்திடம் நீதி கோரி முள்ளிவாய்க்கால் திடலில் பிரகடனம் வெளியீடு!

  • May 18, 2026
  • 0 Comments

தமிழினப் படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பொதுக் கட்டமைப்பா ல் ஈழத் தமிழினத்தின் எதிர்கால அரசியல் நகர்வுகள் மற்றும் தற்போதைய சவால்களை உள்ளடக்கிய ‘முள்ளிவாய்க்கால் பிரகடனம் 2026’ உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது. பிரகடனத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு:- 1. பூகோள அரசியலும் தமிழினமும் அமெரிக்கா உள்ளிட்ட ஏக துருவ நாடுகளுக்கும், சீனா, ரஷ்யா போன்ற பல்துருவ நாடுகளுக்கும் இடையிலான வல்லாதிக்கப் போட்டியில், பூர்வீகக் குடிகளான தமிழர்களின் இருப்பு கேள்விக்குள்ளாக்கப்படுகின்றது. மாறிவரும் உலக ஒழுங்கிற்கு […]

இலங்கை செய்தி

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் மக்கள் உணர்வெழுச்சியுடன் அஞ்சலி!

  • May 18, 2026
  • 0 Comments

தமிழினப் படுகொலையின் 17 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (மே 18) முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மக்கள் ஒன்றுகூடித் தமது உறவுகளுக்கு உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர். இன்று காலை 10:15 மணியளவில் தவத்திரு அகத்தியர் அடிகளாரால் கொள்கைப் பிரகடனம் வாசிக்கப்பட்டு நினைவேந்தல் நிகழ்வுகள் முறைப்படி ஆரம்பமாகின. முற்பகல் 10:29 மணியளவில் நினைவொலி எழுப்பட்டது. முற்பகல் 10:30 மணியளவில் உயிரிழந்த உறவுகளுக்காக இரண்டு நிமிட அகவணக்கம் செலுத்தப்பட்டது. இறுதிப் போரில் தனது குடும்பத்தின் நான்கு உறுப்பினர்களைப் பலிகொடுத்த […]