இங்கிலாந்தில் குற்றச்செயல்கனைத் தடுக்க நிதி ஒதுக்கீடு
சமூக விரோத நடத்தை, மீண்டும் குற்றம் புரிதல் மற்றும் பிற குற்றச் செயல்களைத் தடுக்கும் திட்டங்களுக்காக £1.4 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மேற்கு மிட்லாண்ட்ஸ் காவல்துறை ஆணையர் அறிவித்துள்ளார்.
இந்த நிதி, பர்மிங்காம் (Birmingham), கோவென்ட்ரி (Coventry), டட்லி (Dudley), சாண்ட்வெல் (Sandwell), சோலிஹல்(Solihull), வால்சால் (Walsall) மற்றும் வோல்வர்ஹாம்டன் (Wolverhampton) உள்ளிட்ட பகுதிகளில் செயல்படும் 66 திட்டங்களுக்கு வழங்கப்படவுள்ளது.
தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் ஆரம்பகால தலையீடுகள் மூலம் குற்றங்களை குறைப்பதில் தாம் உறுதியாக உள்ளதாக மேற்கு மிட்லாண்ட்ஸ் காவல்துறை ஆணையர் தெரிவித்துள்ளார்.
“இந்த நிதி மக்கள், குடும்பங்கள், வணிகங்கள் மற்றும் உள்ளூர் சமூகங்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கு உதவும் என்றும் இதன் மூலம் மேற்கு மிட்லாண்ட்ஸ் பகுதி மேலும் வளர்ச்சி அடையும்,” என்றும் அவர் கூறினார்.
மேலும், “இந்த £1.4 மில்லியன் பவுண்ட் முதலீடு வெறும் அறிவிப்பாக இன்றி, குற்றம் மற்றும் சமூக விரோத நடத்தையைத் தடுக்கவும், மீண்டும் குற்றம் புரிவதை குறைக்கவும் நேரடி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் திட்டங்களுக்கு ஆதரவாக இருக்கும்” என்றும் மேற்கு மிட்லாண்ட்ஸ் காவல்துறை ஆணையர் தெரிவித்தார்.





