இலங்கை செய்தி

இலங்கையில் உச்சம் தொட்ட தங்க விலை

  • May 21, 2026
  • 0 Comments

இலங்கையின் உள்நாட்டுச் சந்தையில் தங்கத்தின் விலையில் இன்று (21) திடீர் அதிகரிப்புப் பதிவாகியுள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் அறிவித்துள்ளது. நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில், இன்றைய தினம் 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 6,000 ரூபாவினால் அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள விலை மாற்றங்கள் காரணமாகவே இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போதைய தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 398,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. அத்துடன் 22 […]

ஐரோப்பா செய்தி

உக்ரைனுக்கு மீண்டும் நேசக்கரம் நீட்டும் பிரித்தானியா

  • May 21, 2026
  • 0 Comments

உக்ரைனுக்கு பிரித்தானியா தொடர்ந்தும் உறுதியான ஆதரவு வழங்கும் பிரதமர் ஸ்டார்மர் மீண்டும் உறுதிப்படுத்தியதாக டவுனிங் ஸ்ட்ரீட் தெரிவித்துள்ளது. உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலென்ஸ்கியுடன் பிரதமர் ஸ்டார்மர் தொலைபேசியில் உரையாடிய போதே இதனை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார். ரஷ்ய எண்ணெய் தடைகளில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் குறித்து பிரதமர் விமர்சனங்களை எதிர்கொண்ட அதே நாளில் இந்த உரையாடல் இடம்பெற்றுள்ளது. மேலும், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினின் போர் நடவடிக்கைகளை பலவீனப்படுத்துவதற்கு பிரித்தானியா உறுதியாக இருப்பதாகவும் பிரதமர் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஷ்ய […]

உலகம் செய்தி

இஸ்ரேலிய நடவடிக்கைக்கு எதிராக கனடா அழைப்பு

  • May 21, 2026
  • 0 Comments

காசா நோக்கிச் சென்ற குளோபல் சுமுட் (Global Sumud) கப்பலில் இருந்த ஆர்வலர்கள் தடுத்து வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, இஸ்ரேலிய தூதுவரிடம் கனடா விளக்கம் கோரியுள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய கனேடியர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் குறித்து உறுதிப்படுத்த இஸ்ரேலிய தூதுவரை அழைக்குமாறு வெளியுறவு அமைச்சருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என கனடா பிரதமர் Mark Carney சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளார். மேலும், தடுத்து வைக்கப்பட்ட ஆர்வலர்கள் இஸ்ரேலியப் படைகளால் துன்புறுத்தப்படும் காணொளியை பகிர்ந்தமை குறித்தும் கார்னி விமர்சித்தார். “வன்முறையைத் […]

ஐரோப்பா

நாட்டிங்ஹாம் பல்கலைக்கழக மருத்துவமனையின் 11 ஊழியர்கள் பணிநீக்கம்!! காரணம் என்ன?

  • May 21, 2026
  • 0 Comments

கடந்த 2023 ஆம் ஆண்டு நாட்டிங்ஹாம் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் நடத்திய கத்திக் குத்து தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின்  மருத்துவப் பதிவுகளை முறையற்ற முறையில் அணுகியதற்காக, நாட்டிங்ஹாம் பல்கலைக்கழக மருத்துவமனையின் 11 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் 14 பேருக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறித்த தாக்குதலில் 03 பல்கலைக்கழக மாணவர்கள் உயிரிழந்தனர். இது தொடர்பில் 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. விசாரணைகளின்போது மருத்துவப் பதிவுகள் தவறாக பயன்படுத்தப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டது. இதன் விளைவாக […]

செய்தி தமிழ்நாடு

புற வாசல் வழியாக தமிழக அமைச்சரவையில் கங்கிரஸ் – தமிழிசை விசனம்

  • May 21, 2026
  • 0 Comments

“புற வாசல் வழியாக தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற்றுள்ளது. பல மாநிலங்களில் புறக்கணிக்கப்பட்ட கட்சிதான் காங்கிரஸ்” என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்துள்ளார். “எந்த தீய சக்தியை எதிர்த்து போராடுவோம் எனச் சொன்னார்களோ, அந்த தீய சக்தியின் ஒரு பகுதியாக இருந்தவர்களோடு இணைந்து ஆட்சி அமைத்திருக்கிறார்கள் என அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறினார். இங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர், புற வாசல் வழியாக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளது காங்கிரஸ். பல மாநிலங்களில் புறக்கணிக்கப்பட்ட […]

இலங்கை செய்தி

யாழ் விரிவுரையாளர் விரிவுரையாளர் கொலை சம்பவம் – வெளியான உண்மை

  • May 21, 2026
  • 0 Comments

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட சித்தமருத்துவத் துறை விரிவுரையாளர் தயாளினி திலீபன் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளமை சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் உறுதி செய்யப்பட்டுள்ளது பொலிஸார் நீதிமன்றத்தில் இந்த விடயத்தை தெரிவித்துள்ளனர். இந்த வழக்கின் மரண விசாரணை யாழ் நீதவான் நீதிமன்றத்தில் நீதிவான் எஸ். லெனின்குமார் முன்னிலையில் நேற்று இடம்பெற்றது. விசாரணையின் போது உயிரிழந்த விரிவுரையாளரின் மகனும் பொலிஸாரும் சாட்சியம் வழங்கினர். இதன்போதே சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதை பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர். மேலும், தற்போது […]

ஐரோப்பா

17 ஆண்டுகளாக தொடர்ந்த சட்டப் போராட்டம் : ஒருவழியாக முடிவுக்கு வந்த வழக்கு!

  • May 21, 2026
  • 0 Comments

2009-ஆம் ஆண்டு ரியோ-பாரிஸ் விமான விபத்தில் 228 பேர் உயிரிழந்தமை தொடர்பில் ஏர்பஸ் மற்றும்  ஏர் பிரான்ஸ் ஆகிய நிறுவனங்கள் மீது மனிதப் படுகொலைக் குற்றத்தில் குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்டுள்ளன. இது தொடர்பான வழக்கு விசாரணை கடந்த 17 வருடங்களாக இடம்பெற்று வருகிறது. இருப்பினும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக பாரிஸ் மேல்முறையீட்டு நீதிமன்றம் இரு நிறுவனங்களும் தலா €225,000 வரை அதிகபட்சமாக அபராதம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. அதேநேரம் 2023 […]

இலங்கை செய்தி

அடுத்த வாரத்தில் இருந்து வட்டி விகிதம் உயர வாய்ப்பு!! மக்கள் மீது விழும் சுமை!

  • May 21, 2026
  • 0 Comments

இலங்கை மத்திய வங்கியானது வரும் வாரத்திற்குள் வட்டி விகிதத்தை  குறைந்தபட்சம் 50 அல்லது 100 அடிப்படைப் புள்ளிகள் அல்லது 0.5% அல்லது 01 சதவீதம்  வரை உயர்த்த வாய்ப்புள்ளதாக  நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷா டி சில்வா தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றைய விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,  வட்டி விகிதங்கள் இவ்வாறு அதிகரித்தால், அதன் நேரடி விளைவாக மக்கள் மீது விதிக்கப்படும் வரிகளின் அளவை மேலும் அதிகரிக்க […]

உலகம் செய்தி

கியூபா தலைவர் மீது அடுக்கடுக்கடான குற்றச்சாட்டுகளை முன்வைக்கும் அமெரிக்கா

  • May 21, 2026
  • 0 Comments

1996 ஆம் ஆண்டு கியூபா மற்றும் புளோரிடா இடையே இரண்டு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, கியூபாவின் முன்னாள் தலைவர் ரவுல் காஸ்ட்ரோ (Raúl Castro) மீது கொல்ல சதி உள்ளிட்ட பல புதிய குற்றச்சாட்டுகளை அமெரிக்கா பதிவு செய்துள்ளது. ‘பிரதர்ஸ் டு தி ரெஸ்க்யூ’ (Brothers to the Rescue) என்ற கியூபா மற்றும் அமெரிக்க அமைப்பின் இரண்டு விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதில், மூன்று அமெரிக்கர்கள் உட்பட நால்வர் உயிரிழந்தனர். இந்நிலையில் விமானங்களை அழிக்க […]

ஐரோப்பா

பிரித்தானியாவில் தஞ்சம் கோருவோரின் உண்மையான எண்ணிக்கை!! தவறான கண்ணோட்டத்தில் மக்கள்!

  • May 21, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் நிகரக் குடியேற்றம் மிகக் குறைந்த நிலையை எட்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 2025-ஆம் ஆண்டு வரையிலான 12 மாதங்களில் இந்த எண்ணிக்கை 171,000 ஆகக் குறைந்துள்ளதாக தேசிய புள்ளிவிபரவியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்தக் குறிப்பிடத்தக்க வீழ்ச்சி இருந்தபோதிலும்,  கிட்டத்தட்ட பாதி பிரித்தானியர்கள் (49 சதவீதம்) நிகர குடியேற்றம் அதிகரித்துள்ளதாகத் தவறாக நம்புகிறார்கள். வெறும் 16 சதவீதம் பேர் மட்டுமே உண்மையான சரிவைப் பற்றி அறிந்திருப்பதாக பிரிட்டிஷ் ஃபியூச்சர் (British Future) நடத்திய ஒரு கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. அதேநேரம் […]