இலங்கை செய்தி

இலங்கையில் பொருளாதார நெருக்கடி: சர்வக்கட்சி கூட்டத்தை கூட்டுமாறு வலியுறுத்து!

  • May 22, 2026
  • 0 Comments

இலங்கை மீண்டுமொரு பயங்கரமான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில், இதிலிருந்து நாட்டைப் பாதுகாப்பதற்கான அவசரகால தேசிய தீர்வுகளை வகுப்பதற்காக உடனடியாகச் சர்வகட்சி மாநாட்டைக் கூட்டுமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் எதிர்க்கட்சிகள் கூட்டாக அவசர கோரிக்கை விடுத்துள்ளன. கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற, எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடனான விசேட கூட்டத்தின் பின்னரே இந்த வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் […]

இலங்கை

அவதானம்: மண்சரிவு அபாய எச்சரிக்கை

  • May 22, 2026
  • 0 Comments

பலத்த மழை காரணமாக கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கேகாலை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய 06 மாவட்டங்களுக்கு, மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, கேகாலை மாவட்டத்தின் யட்டியாந்தோட்டை பிரதேச செயலகப் பிரிவுக்கும், நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ பிரதேச செயலகப் பிரிவுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் எஹலியகொட, நிவித்திகல மற்றும் கலவான ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் முதலாம்நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனிடையே கொழும்பு மாவட்டத்தின் சீதாவக்க மற்றும் […]

அரசியல் இலங்கை செய்தி

பிரபாகரனின் சடலம் எங்கே? 17 வருடங்களுக்கு பிறகு பொன்சேகா வெளியிட்ட பகீர் தகவல்!

  • May 22, 2026
  • 0 Comments

” பிரபாகரனின் சடலத்துக்கு என்ன நடந்தது என்பது எனக்கு தெரியும். அது பற்றி பகிரங்கமாக கூறமுடியாது. அவ்வாறு கூறினால் அந்த இடத்துக்கு சென்று சிலர் நினைவேந்தல் நடத்தக்கூடும். நினைவகம் அமைக்க முற்படக்கூடும்.” இவ்வாறு இலங்கையில் இறுதிக்கட்டப்போரை வழிநடத்திய முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்தார். இணைய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே பொன்சேகா மேற்படி பரபரப்பு தகவலை வெளியிட்டார். “போர் தொடர்பில் நீங்கள் இன்றளவிலும் மனதுக்குள் நீங்கள் இரகசியமொன்றை மறைத்து வைத்துள்ளீர்கள். எனக்குகூட அதை பற்றி […]

இலங்கை செய்தி

பணவீக்கம் 4.7 வீதமாக அதிகரிப்பு

  • May 21, 2026
  • 0 Comments

தேசிய நுகர்வோர் விலைச்சுட்டெண்ணின் படி, 2026 ஏப்ரல் மாதத்தில் நாட்டின் முதன்மைப் பணவீக்கம் 4.7 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் தரவுகளின்படி, 2026 மார்ச் மாதத்தில் இந்த மதிப்பு 2.4 சதவீதமாகப் பதிவாகியிருந்தது. அறிக்கையின்படி, மார்ச் மாதத்தில் 0.7 சதவீதமாகக் காணப்பட்ட உணவுப் பிரிவின் பணவீக்கம், ஏப்ரல் மாதத்தில் 1.1 சதவீதம் வரை அதிகரித்துள்ளது. அதேபோல், உணவற்ற பிரிவின் பணவீக்கம் மார்ச் மாதத்தில் பதிவான 3.8 சதவீதத்திலிருந்து ஏப்ரல் மாதத்தில் 7.8 சதவீதம் […]

ஐரோப்பா செய்தி

தூண்டிவிடும் காணொளி விவகாரம் – இஸ்ரேலிய தூதுவருக்கு பிரித்தானியாவும் அழைப்பு

  • May 21, 2026
  • 0 Comments

காசா நோக்கிச் சென்ற உதவிக் கப்பலில் இருந்த ஆர்வலர்களை கேலி செய்ததாக கூறப்படும் காணொளி தொடர்பாக, பிரித்தானிய வெளியுறவு அலுவலகம், இங்கிலாந்தில் உள்ள இஸ்ரேலின் மூத்த தூதுவரிடம் விளக்கம் கோரியுள்ளது சர்வதேச கடல் பகுதியில் இஸ்ரேலியப் படைகளால் தடுத்து வைக்கப்பட்ட உதவிக் கப்பல் ஆர்வலர்களை கேலி செய்யும் வகையில், இஸ்ரேலின் தேசிய பாதுகாப்பு அமைச்சர் Itamar Ben-Gvir காணொளிகளை வெளியிட்டிருந்தார். இந்த நடவடிக்கையை இஸ்ரேல் பிரதமர் Benjamin Netanyahu ஏற்கனவே பொதுவாகக் கண்டித்துள்ளார். மேலும், பிரிட்டன் வெளியுறவுச் […]

உலகம்

போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் அவசரமில்லை!! இலக்குகளுக்கே முன்னுரிமை!

  • May 21, 2026
  • 0 Comments

06 வாரக் கால போர் நிறுத்தத்தின்போது ஈரான் தனது இராணுவத் தொழில் தளத்தை மீண்டும் கட்டமைத்து வருவதாக அமெரிக்க உளவுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. “மறுசீரமைப்புக்காக உளவுத்துறை சமூகம் (IC) நிர்ணயித்திருந்த அனைத்து காலக்கெடுவையும் ஈரானியர்கள் மீறிவிட்டனர்,” என்று அமெரிக்க அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையே ஈரானுடனான போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் தனக்கு அவசரமில்லை என்றும், போரை முடிப்பதற்கான காலக்கெடுவை விட பணி நோக்கங்களுக்கே முன்னுரிமை அளிப்பதாகவும் டொனால்ட் ட்ரம்ப் கூறியுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள ஈரான் மத்திய கிழக்குக்கு […]

இந்தியா முக்கிய செய்திகள்

இந்தியாவின் பெரும் பகுதிகளை வாட்டும் வெப்பம் – 48 செல்சியஸ் வரை பதிவு!

  • May 21, 2026
  • 0 Comments

இந்தியாவின் பெரும் பகுதிகள் கடுமையான வெப்ப அலையால் பாதிக்கப்பட்டுள்ளன. வானிலை ஆய்வாளர்கள் அதிகபட்சமாக 45 பாகை  செல்சியஸ் வரையான வெப்பநிலை பதிவாகும் என எச்சரித்துள்ள நிலையில், சில பகுதிகளில் 48 பாகை செல்சியஸ் வரையான வெப்பநிலை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கடும் வெப்பம் அன்றாட வாழ்க்கையைப் பாதித்துள்ளது. இதன் விளைவாக, பெரும்பாலான கிராமங்களில் விவசாயிகள் இரவு நேர பணிக்கு மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் பாடசாலைகள் முன் கூட்டியே கோடை விடுமுறையை அறிவித்துள்ளன. இதற்கிடையே இந்தியாவின் அதிகரித்து வரும் […]

இலங்கை செய்தி வணிகம்

ஆட்டம் காணும் இலங்கை ரூபா: எகிறும் டொலர் பெறுமதி!

  • May 21, 2026
  • 0 Comments

அமெரிக்க டொலரின் விற்பனைப் பெறுமதி 354 ரூபாவைத் தாண்டியுள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகித அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை ரூபாவின் மதிப்பு கடந்த சில நாட்களாக மோசமான வீழ்ச்சியைச் சந்தித்து வருகின்றது. இதனால் பொருளாதார நெருக்கடி ஏற்படக்கூடும் என எதிரணிகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. இந்நிலையில் இன்று அமெரிக்க டொலரின் விற்பனைப் பெறுமதி 354.03 ரூபாவாகவும், கொள்வனவு விலை 342.63 ரூபாவாகவும் உள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மத்திய வங்கி நேற்று […]

ஐரோப்பா

ஜெலென்ஸ்கியின் எச்சரிக்கை : பெலாரஸுக்கு அணுவாயுதங்களை மாற்றும் ரஷ்யா!!

  • May 21, 2026
  • 0 Comments

ரஷ்யா தனது நட்பு நாடான பெலாரஸுடன் மூன்று நாள் கூட்டுப் பயிற்சிகளை முன்னெடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ரஷ்யா அணு ஆயுதங்களை அங்குள்ள சேமிப்புக் கிடங்குகளுக்கு அனுப்பி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அணு ஆயுதத் திறன் கொண்ட ஏவுகணைகள் மற்றும் அவற்றின் இரகசிய நகர்வுகளை சோதிக்கும் நோக்கில் இந்த பயிற்சி முன்னெடுக்கப்படவுள்ளது. அத்துடன் இந்தப் பயிற்சிகள், ரஷ்யா மற்றும் பெலாரஸ் ஆகிய இரு நாடுகளிலும் நடைபெறும். கீவ் மீது ரஷ்யா ஒரு புதிய தரைவழித் தாக்குதலை […]

இலங்கை செய்தி

“இஸ்ரேல் பிடியில் சிக்கியுள்ள இலங்கை பெண்ணை மீட்கவும்”

  • May 21, 2026
  • 0 Comments

இஸ்ரேலிய படைகளால் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த சமீரா மஹ்பூப்டீனின் எதிர்காலத்தில் கூடுதல் கவனமெடுத்து, அவரை விடுவிப்பதற்கான ராஜதந்திர நகர்வுகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார் வௌிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்தின் கவனத்துக்கு இவ்விடயத்தை கொண்டு வந்துள்ள அவர், இது குறித்து கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில், பாராளுமன்ற உறுப்பினரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளதாவது: காசாவுக்கான மனிதாபிமான உதவிகளுடன் துருக்கியிலிருந்து புறப்பட்ட படகுகளை இஸ்ரேல் கைப்பற்றி, சர்வதேச […]