இந்தியா செய்தி தமிழ்நாடு

சமூக நீதித்துறை அமைச்சரானார் வன்னியரசு!

  • May 22, 2026
  • 0 Comments

தமிழக வெற்றிக் கழகம் ஆட்சியமைப்பதற்கு நேசக்கரம் நீட்டிய விடுதலை சிறுத்தைகள் கட்சியின் உறுப்பினர், வன்னியரசு அமைச்சரவைக்குள் உள்வாங்கப்பட்டுள்ளார். அவருக்கு சமூகநீதித் துறை அமைச்சு பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்தத் துறையின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனும் உள்ளடக்கப்பட்டுள்ளது. அத்துடன், ஐயூஎம்எல் கட்சியின் ஏ.எம்.ஷாஜஹான் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது துறையின் கீழ் சிறுபான்மையினர் நலன் மற்றும் வக்பு வாரியம் அடங்கும். இன்று காலை ஆளுநர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் முதல்வர் விஜய் தலைமையிலான அமைச்சரவையில், விசிகவின் […]

செய்தி விளையாட்டு

முதலிடத்துடன் அடுத்த சுற்றுக்குள் நுழையுமா RCB?

  • May 22, 2026
  • 0 Comments

IPL தொடரில் இன்று நடைபெறும் 67 ஆவது லீக் ஆட்டத்தில் Royal Challengers Bengaluru (RCB), Sunrisers Hyderabad ஆகிய அணிகள் மோதுகின்றன. இரவு 7.30 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் இப்போட்டி ஆரம்பமாகும். RCB அணி 13 ஆட்டங்களில் விளையாடி 9 வெற்றி, 4 தோல்விகளுடன் 18 புள்ளிகளை குவித்து முதல் அணியாக play-off சுற்றுக்கு தகுதி பெற்றிருந்தது. அதேவேளையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 13 ஆட்டங்களில் 8 வெற்றி, 5 தோல்விகளுடன் […]

ஐரோப்பா

அணுவாயுதம் எப்போது பயன்படுத்தப்படும் : ரஷ்ய ஜனாதிபதி விளக்கம்!

  • May 22, 2026
  • 0 Comments

ரஷ்யா போரில் அணுவாயுதங்களை பயன்படுத்தும் என நீண்டகாலமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகின்ற நிலையில், கடைசி முயற்சியாகவே அணுவாயுதங்கள் பயன்படுத்தப்படும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் கூறியுள்ளார். 64,000 துருப்புகள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் அதிவேக ஏவுகணைகளை உள்ளடக்கிய, பல ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய அணுசக்திப் பயிற்சியை ரஷ்யாவும், பெலாரஸும் நிறைவு செய்துள்ளன. நேட்டோவுடனான பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், இவ்விரு நாடுகளும் முன்னெடுத்துள்ள இந்த பயிற்சியை ஐரோப்பிய நாடுகள் கண்டித்துள்ளன. நேட்டோ மீதான எந்தவொரு தாக்குதலும் […]

செய்தி விளையாட்டு

படுதோல்வியுடன் வெளியேறியது CSK அணி!

  • May 22, 2026
  • 0 Comments

2026 ஐபிஎல் தொடரில் லீக் சுற்றோடு Chennai Super Kings (CSK) அணி வெளியேறி உள்ளது. Gujarat Titans உடனான கடைசி லீக் ஆட்டத்தில் 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் CSK அணி படுதோல்வி அடைந்தது. அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த இப்போட்டியில் நாணயச் சுழற்சியில் வென்ற CSK அணி முதலில் பந்து வீச்சை தெரிவு செய்தது. இதற்கமைய துடுப்பெடுத்தாடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 229 ஓட்டங்களைப் […]

இந்தியா

கடும் வெப்பநிலை – டெல்லியில் குளிரூட்டும் மண்டலங்கள் திறப்பு!!

  • May 22, 2026
  • 0 Comments

இந்தியாவின் தலைநகர் புதுடெல்லியில் நேற்றைய தினம் 45 டிகிரி செல்சியஸ் (113 ஃபாரன்ஹீட்) வெப்பநிலை பதிவாகியுள்ளது. கடுமையான வெப்பநிலை காரணமாக மக்கள் வெளிப்புற செயற்பாடுகளை தவிர்த்துள்ளனர். அதேநேரம் அங்கு, மக்கள் வெப்பத்தைத் தாங்கிக்கொள்ள உதவும் வகையில் அதிகாரிகள் தற்காலிக “குளிரூட்டும் மண்டலங்களை” திறந்துள்ளனர். வரும் நாட்களில் வட பிராந்தியங்களில் இந்த வெப்ப உயர்வு  நீடிக்கக்கூடும் எனவும்  எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. அதிக வெப்பம் நிலவும் நேரங்களில் மக்கள் வீட்டிலேயே இருக்குமாறும், வெப்பம் தொடர்பான நோய்களுக்கு எதிராக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறும் […]

இலங்கை செய்தி

பிள்ளையானை சிறையில் சந்தித்தது உண்மைதான்: ஒப்புக்கொண்டார் நாமல்!

  • May 22, 2026
  • 0 Comments

“போரை முடிப்பதற்கு பங்களிப்பு வழங்கியவர்தான் பிள்ளையான். எனவே, அவர் அரசியல் ரீதியில் பழிவாங்கப்பட்டால் நாம் அவருக்காக முன்னிலையாவோம். நாம் பிள்ளையானை திருட்டுதனமாக சந்திக்கவில்லை.” இவ்வாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். இது தொடர்பில் அவர் நேற்று மேலும் கூறியவை வருமாறு , “பிள்ளையானைச் சந்திப்பதற்காக நாம் சுவர் ஏறி குதித்து சிறைச்சாலைக்குள் செல்லவில்லை. சட்டப்பூர்வமாகவே அவரை சந்தித்திருந்தோம். பிள்ளையானை சந்திக்கும்போது சிறைச்சாலை அதிகாரி ஒருவரும் அருகில் இருந்தார். சிறைச்சாலைக்குள் இரகசிய […]

உலகம்

சீனாவில் கனமழை : 24 பேர் உயிரிழப்பு!! மக்களுக்கு எச்சரிக்கை!

  • May 22, 2026
  • 0 Comments

சீனாவில் கனமழை தொடங்கியதிலிருந்து குறைந்தது 24 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர். கடந்த செவ்வாயன்று 12 பேர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஹுபேய் (Hubei), ஹுனான் (Hunan)  மற்றும் குய்ஜோ (Guizhou) மாகாணங்களில் மேலும் பலர் காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய மாகாணமான ஹுபேயில், அவசரகால மற்றும் இராணுவப் பணியாளர்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் முழுவீச்சில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கிடையே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மாகாணங்களில் சாலைகள் அழிவடைந்துள்ளதாகவும், தகவல் தொடர்பு […]

உலகம்

ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவரக் கோரும் தீர்மானம் : வாக்கெடுப்பு இரத்து!

  • May 22, 2026
  • 0 Comments

ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவரக் கோரும் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை, அமெரிக்கப் பிரதிநிதிகள் சபையின் குடியரசுக் கட்சித் தலைவர்கள் நேற்று இரத்து செய்துள்ளனர். இந்த ஆண்டின் தொடக்கத்தில், இதற்கு முன்னர் 03 முறை குடியரசுக் கட்சியினரின் ஏறக்குறைய ஒருமித்த ஆதரவுடன், வாக்கெடுப்பை தடுத்திருந்தது. அமெரிக்க அரசியலமைப்பின்படி, ஜனாதிபதி அல்ல, காங்கிரஸே போரை அறிவிக்க முடியும். இதனை சுட்டிக்காட்டிய காங்கிரஸ் கட்சியினரும், குடியரசு கட்சியினரும், இராணுவ பலத்தைப் பயன்படுத்துவதற்கான அங்கீகாரத்தைப் பெற  வலியுறுத்தினர். ஒரு தெளிவான உத்தியை வகுக்காமல், […]

அரசியல் இலங்கை செய்தி

” வடக்கு, கிழக்கு எல்லைகளை காத்த காவலர்களே மலையக மக்கள்”

  • May 22, 2026
  • 0 Comments

“லயன் வாழ்க்கையை ஒழிக்க வேண்டும். மலையக மக்களுக்கு காணி உரிமை வழங்கப்பட வேண்டும். இதற்காக அரசு முன்னெடுக்கும் வேலைத்திட்டங்களுக்கு முழு ஆதரவு வழங்கப்படும்.” என்று தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் வலியுறுத்தினார். நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு வலியுறுத்தினார். “ மலையக மக்களை நாம் தேசிய இனமாக அங்கீகரித்துள்ளோம். மலையக மக்களின் உரிமைக்காக எமது கட்சி எல்லா விதத்திலும் குரல் கொடுத்து வந்துள்ளது. மலையக மக்களுக்காக முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களுக்கு […]

ஆஸ்திரேலியா செய்தி

இஸ்ரேல் படைகள் கொடுமைப்படுத்தின: நாடு கடத்தப்பட்ட தன்னார்வலர்கள் குற்றச்சாட்டு!

  • May 22, 2026
  • 0 Comments

இஸ்ரேலால் காவலில் வைக்கப்பட்டிருந்த Global Sumud Flotilla குழுவைச் சேர்ந்த 11 ஆஸ்திரேலிய ஆர்வலர்கள் தற்போது துருக்கியை சென்றடைந்துள்ளனர். தனது படைகளால் பிடித்து வைக்கப்பட்டிருந்த 422 வெளிநாட்டு ஆர்வலர்களையும் நாடு கடத்திவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இவர்களில் முதல் குழுவினர் துருக்கியை வந்தடைந்துள்ளனர். இதில் 11 ஆஸ்திரேலியர்கள் உள்ளடங்கியுள்ளனர். தடுத்து வைக்கப்பட்டிருந்த காலத்தில் தங்களை இஸ்ரேலியப் படைகள் மிகவும் மோசமாக நடத்தியதாகவும், தாக்கியதாகவும் விடுவிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இஸ்ரேலிய அமைச்சரின் முறையற்ற நடத்தையை அந்நாட்டுப் பிரதமரே கண்டித்துள்ள நிலையில், […]